அகில இந்திய அளவில், இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கும், பொது வேலை
நிறுத்தத்துக்கு ஆதரவளிப்போம்; ஆனால், கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து, மத்திய, மாநில
அரசுகள் ,கோரிக்கைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என,
வலியுறுத்தி பணிக்கு செல்வோம் என, தமிழக ஆரம்பப்
பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி: அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு
காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம்
வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல்
கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி
உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.
ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஊக்குவிக்காமல் இருந்தால் நாட்டிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்,&'&' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பேசினார்.
"ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கும் நிதியில் வெறும் 50 சதவீதம் மட்டுமே
பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஊக்குவிக்காமல் இருந்தால்
நாட்டிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்,&'&' என்று இஸ்ரோ
தலைவர் மாதவன் நாயர் பேசினார்.
எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி: அரசாணையில் விளக்கம்
அரசு வேலைவாய்ப்புகளில், முதுநிலை தொழிலக அறிவியல் பட்டம் (எம்.எஸ்சி.,
இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி), முதுநிலை வேதியியல் (எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி)
பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, உயர்கல்வித் துறை அரசாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டணம் நிர்ணயம்: ஐகோர்ட் புது வழிமுறை
"கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் போது, பள்ளிகளுக்கு ஆகும் செலவை,
கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கருத்தில் கொள்ள வேண்டும்" என, சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வித் துறையை உயர்த்த வேண்டும்: ரோசையா பேச்சு
"நமது உயர்கல்வித் துறையை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்ற பிரதமர்
மன்மோகன் சிங்கின் ஆசையை, நாம் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால்
நிறைவேறும்" என கவர்னர் ரோசையா பேசினார்.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை
இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர்
பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்
தேர்வுக்கு, 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அண்ணா பல்கலை
தெரிவித்துள்ளது.
“21ம் நூற்றாண்டு அறிவுசார் சமுதாயமாக அமைய வேண்டும்” - சசி தரூர்
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர், சமீபத்தில் தி
நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய கருத்தரங்கில் பேசியதாவது:
உலகளவில், ஒட்டுமொத்த உற்பத்திப்
பொருளாதார அடிப்படையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. எனினும், வாங்கும்
திறன் பொருளாதார அடிப்படையில், ஜப்பானைப் பின் தள்ளி விட்டு இந்தியா 3வது
இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும் பொருளாதார வல்லுனர்கள் கூறி வருவதை
போல், இனி வரும் காலங்களில் தான், இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக
இருக்கும்.
பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவு.
பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற
உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்த
ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்பட துறை அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. வேலைநிறுத்த
போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால்,
ஊழியர்களின் வருகையை அதிகாரிகள் தொகுத்து துறை வாரியாக வைத்து கொள்ளவும்
அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களே தேர்வு பயமா?
பொதுத்தேர்வை எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்கள் பெரும்பாலும் தேவையற்ற பதற்றத்தினாலேயே, குறைந்த மதிப்பெண்கள்
பெறுவது, தேர்ச்சி பெறாமல் போவது போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே, ஏதோ
ஒருவித பயம், பதட்டம் உண்டாகிறது. தேர்வு எழுதும் போது விடைகள்
தெரிந்திருந்தாலும் பதட்டத்தினால் சரியாக எழுத முடியாமல்
தோல்வியுறுகின்றனர்.
ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம்
வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை
பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி
உள்ளார்.பள்ளிகளில்,
10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியர் மட்டும், அறிவியல்
பாடங்களில், செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது,
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமில்லாமல், தமிழக அரசின் மாநில பாடத்
திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், 9ம் வகுப்பு பயிலும் மாணவ,
மாணவியருக்கும், செய்முறை வகுப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன.
கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நீடிக்கும் குழப்பம்
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி
பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில்
தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.அரசு
கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில்,
3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இந்தப்
பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது.
திறந்தவெளி பல்கலையில் 8 புதிய படிப்புகள்
தொழில் கல்வி அளிக்கும் வகையில், எட்டு புதிய
பட்டய படிப்புகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தவெளி
பல்கலையில் துவங்கப்படுகின்றன.தமிழ்நாடு
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், சமுதாய கல்லூரிகள் மூலம், இளைஞர்களுக்கு
தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது. சுகாதார உதவியாளர், ஆடை வடிவமைப்பு,
கணினி வன்பொருள் பழுது பார்ப்பு, அலைபேசி பழுது பார்ப்பு, அழகு கலை நிபுணர்
பயிற்சி, நான்கு சக்கர பழுது பார்த்தல் பயிற்சி என, 21 வகையான பட்டய
படிப்புகள் வழங்கப்படுகின்றன.
Latest 12th Minimum Study Material
- Tamil Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri.
- Chemistry Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri.
- Biology Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri.
- Zoology Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri.
- Zoology Study Material - T.M - Published By CEO, Krishnagiri.
- Accountancy Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri.
- Commerce Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri.
- History Minimum Material - T.M - Published By CEO, Krishnagiri.
Latest 10th Study Materials
Latest 10th Study Materials - 2013
Published By,
CEO,SSA CEO, RMSA - Krishnagiri District.
எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு
பாரதிதாசன், அழகப்பா பல்கலைக்கழகங்களால்
வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி)
படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
எனவே, தமிழக அரசுப் பணிகளில் இந்த கல்வித்
தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு இணையாகக் கருதப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையான படிப்புகளுக்கு சான்றளிக்கும் குழுவின் கூட்டத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொழிலக வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையான படிப்புகளுக்கு சான்றளிக்கும் குழுவின் கூட்டத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொழிலக வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வங்கி கணக்கு துவக்குவதில் சிக்கல்: ஆதிதிராவிட மாணவர்கள் அவதி
கட்டணமில்லா வங்கிக் கணக்கு துவக்க, பெரும்பாலான வங்கிகள் மறுத்து
வருவதால், ஆதிதிராவிட மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில், சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
"இங்கிலாந்து வரும் இந்திய மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்"
"இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே, சிறப்பான ஒரு உறவை ஏற்படுத்த
வேண்டும் என, விரும்புகிறேன். இந்த உறவு, கடந்த காலத்தை பற்றியதாக
அல்லாமல், எதிர்காலத்தை பற்றியதாக இருக்கும்" என, பிரிட்டன் பிரதமர்,
டேவிட் கேமரூன், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எது உலகத்தரம் வாய்ந்த பல்கலை?
சாஸ்த்ரா பல்கலைக்கழக திட்டம் மற்றும் மேம்பாட்டிற்கான டீன்
வைத்தியசுப்ரமணியம், சமீபத்தில் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்
நடத்திய கருத்தரங்கில் வழங்கிய கருத்துரை:
பிலிப் அல்பாக் என்ற பிரபல
கல்வியாளர் சொல்கிறார், “ஒவ்வொரு நாடுமே, தங்களிடம் ஒரு உலகத்தரம் வாய்ந்த
பல்கலைக்கழம் இருக்க வேண்டுமென விரும்புகிறது. அது என்ன? மற்றும் அதை
எப்படி பெறுவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை”.
முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை
ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர்,
கடந்த டிசம்பரில் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள் பணியில்
சேர்ந்து இரண்டு மாதம் சம்பளமும் பெற்றுவிட்டனர். ஆனால் இவர்களுடன்
தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை இறுதிப்பட்டியல்
வெளியிடப்படவில்லை.
தேசிய அளவிலான யோகா போட்டி:அரசு பள்ளி மாணவன் முதலிடம்
அந்தமானில் நடந்த தேசிய அளவிலான யோகா
போட்டியில், அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார். இந்திய யூத் யோகா
பெடரேஷன் மற்றும் ஆசிய ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் ஆகியன இணைந்து இம்மாதம்
2ம்
தேதி அந்தமானில் தேசிய அளவிலான யோகா போட்டிகளை
நடத்தியது. இதில், துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் பிரதீப், 13; கலந்து கொண்டார். இவர், 14
வயதுக்குட்பட்ட பொது பிரிவில், முதலிடம் பிடித்து சான்றிதழ் மற்றும்
கேடயம் வென்றார்.
தேர்வு நேரத்தில் விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு சிக்கல் - Dinamalar
தேர்வு நெருங்கும் நேரத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
மாணவர்களுக்கு உலக திறானாய்வு போட்டிகள், நடத்தவுள்ளதால் மாணவர்கள்
பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் வேலைக்கு தேர்வானவர்களுக்கு 37 மையங்களில் பயிற்சி
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த, போலீஸ் தேர்வில், 12,208 பேர்
தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி, 37 போலீஸ் பயிற்சி
மையங்களில் இன்று துவங்குகிறது.
குரூப்-2 தேர்வு: மனிதநேய மையத்தில் படித்த 517 பேர் வெற்றி
சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த, 517 பேர், குரூப்-2 எழுத்து தேர்வில், தேர்வு பெற்றுள்ளனர்.
உண்டு உறைவிட பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும், உண்டு உறைவிடப்
பள்ளியில், இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம்,
ஸ்ரீகாளிகாபுரம் அடுத்து உள்ளது தாமனேரி. இங்கு, அனைவருக்கும் கல்வி
திட்டத்தின் சார்பில், உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. படிப்பை
இடையில் கைவிட்ட மாணவர்களை கண்டுபிடித்து, அந்த மாணவர்களை இப்பள்ளியில்
சேர்த்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
குரூப்-1 தேர்வு: கஷ்டமா? எளிதா? தேர்வர்கள் மாறுபட்ட கருத்து
தமிழகம் முழுவதும், 352 மையங்களில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வு
எளிதாக இருந்ததாக, பெண் தேர்வர்களும், ரொம்ப கஷ்டம் என, ஆண் தேர்வர்களும்,
கருத்து தெரிவித்தனர்.