கட்டணமில்லா வங்கிக் கணக்கு துவக்க, பெரும்பாலான வங்கிகள் மறுத்து
வருவதால், ஆதிதிராவிட மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில், சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
"இங்கிலாந்து வரும் இந்திய மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்"
"இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே, சிறப்பான ஒரு உறவை ஏற்படுத்த
வேண்டும் என, விரும்புகிறேன். இந்த உறவு, கடந்த காலத்தை பற்றியதாக
அல்லாமல், எதிர்காலத்தை பற்றியதாக இருக்கும்" என, பிரிட்டன் பிரதமர்,
டேவிட் கேமரூன், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எது உலகத்தரம் வாய்ந்த பல்கலை?
சாஸ்த்ரா பல்கலைக்கழக திட்டம் மற்றும் மேம்பாட்டிற்கான டீன்
வைத்தியசுப்ரமணியம், சமீபத்தில் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்
நடத்திய கருத்தரங்கில் வழங்கிய கருத்துரை:
பிலிப் அல்பாக் என்ற பிரபல
கல்வியாளர் சொல்கிறார், “ஒவ்வொரு நாடுமே, தங்களிடம் ஒரு உலகத்தரம் வாய்ந்த
பல்கலைக்கழம் இருக்க வேண்டுமென விரும்புகிறது. அது என்ன? மற்றும் அதை
எப்படி பெறுவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை”.
முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை
ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர்,
கடந்த டிசம்பரில் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள் பணியில்
சேர்ந்து இரண்டு மாதம் சம்பளமும் பெற்றுவிட்டனர். ஆனால் இவர்களுடன்
தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை இறுதிப்பட்டியல்
வெளியிடப்படவில்லை.
தேசிய அளவிலான யோகா போட்டி:அரசு பள்ளி மாணவன் முதலிடம்
அந்தமானில் நடந்த தேசிய அளவிலான யோகா
போட்டியில், அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார். இந்திய யூத் யோகா
பெடரேஷன் மற்றும் ஆசிய ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் ஆகியன இணைந்து இம்மாதம்
2ம்
தேதி அந்தமானில் தேசிய அளவிலான யோகா போட்டிகளை
நடத்தியது. இதில், துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் பிரதீப், 13; கலந்து கொண்டார். இவர், 14
வயதுக்குட்பட்ட பொது பிரிவில், முதலிடம் பிடித்து சான்றிதழ் மற்றும்
கேடயம் வென்றார்.
தேர்வு நேரத்தில் விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு சிக்கல் - Dinamalar
தேர்வு நெருங்கும் நேரத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
மாணவர்களுக்கு உலக திறானாய்வு போட்டிகள், நடத்தவுள்ளதால் மாணவர்கள்
பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் வேலைக்கு தேர்வானவர்களுக்கு 37 மையங்களில் பயிற்சி
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த, போலீஸ் தேர்வில், 12,208 பேர்
தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி, 37 போலீஸ் பயிற்சி
மையங்களில் இன்று துவங்குகிறது.
குரூப்-2 தேர்வு: மனிதநேய மையத்தில் படித்த 517 பேர் வெற்றி
சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த, 517 பேர், குரூப்-2 எழுத்து தேர்வில், தேர்வு பெற்றுள்ளனர்.
உண்டு உறைவிட பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும், உண்டு உறைவிடப்
பள்ளியில், இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம்,
ஸ்ரீகாளிகாபுரம் அடுத்து உள்ளது தாமனேரி. இங்கு, அனைவருக்கும் கல்வி
திட்டத்தின் சார்பில், உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. படிப்பை
இடையில் கைவிட்ட மாணவர்களை கண்டுபிடித்து, அந்த மாணவர்களை இப்பள்ளியில்
சேர்த்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
குரூப்-1 தேர்வு: கஷ்டமா? எளிதா? தேர்வர்கள் மாறுபட்ட கருத்து
தமிழகம் முழுவதும், 352 மையங்களில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வு
எளிதாக இருந்ததாக, பெண் தேர்வர்களும், ரொம்ப கஷ்டம் என, ஆண் தேர்வர்களும்,
கருத்து தெரிவித்தனர்.
பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19 முதல் ஹால் டிக்கெட்
"பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு, 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை, ஹால்
டிக்கெட் வழங்கப்படும்,' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
அறிவித்துள்ளார்.
இந்திய - ஜப்பானின் சூப்பர்-30 பள்ளி திட்டம்
ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் (சிஜிசி) இந்தியாவில் சூப்பர்-30 பள்ளி திட்டத்தை இந்தியாவில துவங்குகிறது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று ஜப்பான் நிறுவனத்திடம் பீகாரை சேர்ந்த கணிதவியல் நிபுணர் ஆனந்த் குமார் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பள்ளிகள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைப்பு
பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும்,
முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு,
ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள்
மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட துறைகளுக்கு,
பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.
சிறுபான்மை மொழிப் பாடம்: தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு
சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:பட்டதாரி, சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், தேர்வு பெற்ற, 36 பேரின் பெயர் பட்டியல், டி.ஆர்.பி., அலுவலக, அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்-2 தேர்வு: 22ம் தேதி முதல் நேர்காணல்
"குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான
நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்" என,
டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.
அங்கீகாரமற்ற பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
சான்றிதழ் படிப்புகள் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.
தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்த, குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை, பி.எஸ்.என்.எல்., துவங்க உள்ளது.
அரசு பள்ளி வசதிகளை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில், அட்மிஷன் கிடைப்பது கேள்விக்குறி - Dinamalar
கட்டாயக் கல்வி சட்டம் காரணமாக பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சீட் வழங்குவதற்கு, தனியார்
பள்ளி நிர்வாகங்கள், ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க திட்டமிட்டுள்ளன.
இதனால், அட்மிஷன் எளிதில் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
சட்டம் அமலாவதற்கு முன்வரை, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல்
வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. வசதியான
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்றில்லாமல், அனைத்து தரப்பு
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், நுழைவுத் தேர்வில் பங்கேற்றன.
முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடரும் இழுபறி
தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான,
முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில், தொடர்ந்து, இழுபறி ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில்,
தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில், பணி நியமன
உத்தரவுகளை பெற்றனர். இவர்கள், பணியில் சேர்ந்து, இரண்டு மாதம், சம்பளமும்
பெற்றுவிட்டனர். ஆனால், இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட
தேர்வர்களுக்கு, இதுவரை, இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை.
பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம்: மீண்டும் கருத்துக் கேட்க முடிவு
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள்
மாற்றப்படுகின்றன. இதுதொடர்பாக பெற்றோர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்,
கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கருத்துக் கேட்பு
கூட்டங்களை நடத்தி, அறிக்கை சமர்பிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள் வளர்ச்சியில் பின்தங்கும்
"மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள், வளர்ச்சியில் பின்தங்க நேரிடும்" என, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மேரி லேன் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக இயற்பியல்
துறை சார்பில், "பொருளிலிருந்து உயிர், அதற்கு காரணம் வேதியியலா" என்ற
தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது.
குரூப்-1 தேர்வு: 25 பணியிடங்களுக்கு 1.25 லட்சம் பேர் போட்டி
டி.எஸ்.பி., - ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25
பணியிடங்களை நிரப்ப, 16ம் தேதி, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.
மிக குறைந்த காலி இடங்கள் என்ற போதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத
அளவிற்கு, 1.26 லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.
ஆதிதிராவிட பள்ளிகளில் சேரும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேல்நிலைப் பள்ளிகளுக்கு,
டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு,
20ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடக்கிறது.
பள்ளிக்கு அருகே பொழுதுபோக்கு மையம்: சீனாவில் தடை
சீனாவில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க, அந்நாட்டு அரசு, தடை விதித்திருக்கிறது.
சீனாவில், பொழுதுபோக்கு மையங்கள்
அமைப்பதில், அந்நாட்டு கலாச்சார அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் இருந்து,
பொழுதுபோக்கு மையங்கள் நீண்ட தொலைவில் அமைக்கப்பட வேண்டும்.
கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விண்ணப்பம் வினியோகம்
கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம், வினியோகம் துவங்கியது.
கல்பாக்கத்தில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின்
நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணுமின் திட்ட நிறுவனம் உட்பட,
அணுசக்தி தொடர்பான, பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
தேவையானதை மட்டுமே படிக்க வேண்டும்: குரூப் 1 தேர்வு வெற்றிப் பெண்
"கண்டபடி, தேவையற்றதை எல்லாம் படிக்காமல், தேவையானதை, தேர்வில் எந்த
மாதிரியான கேள்விகள் வரும் என்பதை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப
படித்தால், கண்டிப்பாக போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும்,&'&'
என, குரூப்-1 தேர்வில், முதலிடம் பெற்ற, மதுராந்தகி கூறினார்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிய ஆலோசனைகள்
பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்
பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக
மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம் டி.ஏ.வி.,
பள்ளியின் முன்னாள் முதல்வரும், பாவை பள்ளிக் குழுமத்தின் இயக்குநருமான
சதிஷ்:
மத்திய, மாநில அரசுகள் தங்களது
பள்ளி பாடத்திட்டத்தில் சி.சி.இ., (தொடர் மதிப்பீட்டு முறை) பின்பற்றி
வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் மன அழுத்தத்தை இம்முறை மாற்றிவிடும்.