Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இக்னோ பல்கலையில் ஆன்லைன் மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்


     இக்னோ பல்கலையில் இ-ஞான்கோஸ் கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும் மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, ஆன்லைன் மூலம் இலவசமாக படிக்கலாம் என பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி


       தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

தனியார் பள்ளிகளை தேடிச் செல்லும் பெற்றோர்: கல்வியாளர்கள் வேதனை


        "பெற்றோர், தனியார் பள்ளிகளை தேடிச் செல்வது, துரதிஷ்டமானது, தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து, நாம் கேள்வி எழுப்ப வேண்டிய சூழலில் உள்ளோம்" என, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறினார்.

ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


       மாநிலத்தில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளதால், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கையை மறுக்கக் கூடாது" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

A Lot of 12th Standard Study Materials Now Available Our Site.

      
     பொது தேர்வு எழுதும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக பல்வேறு Study Materials நம் வலைத்தளத்தில் தரப்பட்டு உள்ளது.




தமிழக கல்வி : மத்திய பிரதேச அதிகாரிகள் பாராட்டு


   மத்திய பிரதேச மாநிலம் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ஜாகித் ஜெயின் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர், தமிழகம் வந்துள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இலவச விண்ணப்பம் விநியோகம் இன்று முதல் துவக்கம்


          கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் இன்று முதல் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.  

ஒரே இணையதள முகவரி: மாணவர்கள் விவரம் பதிவதில் தாமதம் - Dinamalr


         மாநில அளவில் ஒரே இணையதள முகவரியை பயன்படுத்துவதால், மாணவர்களின் விவரம் பதியும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

செட் தேர்வு முடிவுகள் வெளியீடு


         பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த, செட் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.

பி.வி.எஸ்சி., நுழைவு தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு


      அகில இந்தியளவில் நடக்கும், பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான, விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்தில் பாம்புகள்: மருத்துவ மாணவர்கள் ஓட்டம் - Dinamalar

 
        வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு மையத்தில், திடீரென பாம்புகள் படை எடுத்ததால், வினாத்தாள்களை போட்டு விட்டு, மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

ஆஸ்திரேலிய பல்கலைகள் பங்குபெறும் கல்விக் கண்காட்சி


        ஆஸ்திரேலியா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பிப்ரவரி 10ம் தேதி, சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில், ஒரு கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் 40 ஆஸ்திரேலிய பல்கலைகள் கலந்து கொள்கின்றன.

"கூடுதல் பள்ளி கட்டணத்தை திருப்பி செலுத்தும் உத்தரவு செல்லும்"


       "மாணவர்களிடம் இருந்து, கூடுதலாக வசூலித்த, கல்விக் கட்டணத்தை, திருப்பிச் செலுத்த வேண்டும் என, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டது சரிதான்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் அரையாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு தேர்வுத்துறை இயக்ககத்தால் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது .


       நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வின் வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு கீழ்வரும் தெளிவுரை வழங்கப்படுகிறது.

சந்தேகம் -1

        பிரிவு-அ -வில் இடம்பெறும் 15 வினாக்களும் பத்தாம் வகுப்பு கணிதப்பாட நூலின் ஒவ்வொரு அலகின் முடிவிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ள வினாக்களிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?

முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும் - மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி


     முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும். விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்" என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார்.  


TAX Form - Updated Version 2.0 - With Form 16





  
1/1 Increment Error Rectified.

CPS Arrear & GPF Arrear Colum Added. 

      இங்கு நமது பாடசாலை வலைதள வாசகர்களுக்காக பிரத்யோகமாக TAX Form தயாரித்து தரப்பட்டு  உள்ளது.

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு



         பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வை, இம்மாதம், 20ம் தேதி முதல், 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.


கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி: 900 பேர் காத்திருப்பு

 
        பள்ளி கல்வித்துறையில், கருணை அடிப்படையில் பணி பெற, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, 900 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பணி ஒதுக்கீடு செய்த, 541 பேர், பணி நியமன உத்தரவு கிடைக்காமல், பல மாதங்களாக தவித்து வருகின்றனர்.

பாட புத்தகங்கள் தட்டுப்பாடு: டி.இ.டி., தேர்வு எழுதுவோர் திண்டாட்டம்


        பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கிடைப்பதில், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், டி.இ.டி., தேர்வு நடைபெற இருப்பதால், தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள தேர்வர்கள், பாடப் புத்தகங்கள் கிடைக்காமல், திண்டாடி வருகின்றனர்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு

          பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கீழ்வரும் பதிலளித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார். 

பிளஸ் 2 தனி தேர்வு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்


           மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்புபவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், 11ம் தேதி முதல், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

துணைவேந்தர் ஓய்வு வயது: சட்ட திருத்த மசோதா தாக்கல்


         அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை, 65லிருந்து, 70 ஆக உயர்த்தும், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தொடக்க பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை


           அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு பாராட்டு விழா ஏற்பாடு


        தேசிய அளவில், சி.ஏ,.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஆசிரியர்களின் திறன் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்


          "நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு: புதிய முறையை எதிர்கொள்வது எப்படி?

 

          பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களை, தேர்வு செய்வதற்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சமீபத்தில் வெளியிட்டது. இதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி., மாற்றி அமைத்துள்ளது.
 

பள்ளிகளில் பசுமைக்குழு அமைக்க ரூ.1.35 கோடி: அரசு உத்தரவு


           தமிழகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, 3,200 பள்ளிகளில், "பசுமை குழு"க்கள் அமைக்கவும், 1,000 பள்ளிகளில், மண், காற்று, நீர் ஆய்வுக்கான, உபகரணங்கள் வாங்கவும், 1.35 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
 

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு


           கடந்த இரண்டு ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலக் கெடுவிற்குள் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பட்டதாரி ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி பிப்ரவரி 26ல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


           இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி பிப்ரவரி 26ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

குரூப் 1 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியீடு


       டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பார்க்கலாம்.
 

ஒரு பல்கலை., கூட சர்வதேச தரத்திற்கு இல்லையே: பிரதமர்


          நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200 பல்கலைகழகங்களில், இந்திய பல்கலைகழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை மாற வேண்டும்.
தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலைகழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்யூட்டர் மயமாக்கப்பட வேண்டும்


           உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் கம்ப்யூட்டர் மயமாக்கப்படாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, பிற அலுவலங்களைப் போல் உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive