Half Yearly Exam 2024
Latest Updates
TAMILNADU PUBLIC SERVICE COMMISSION - ANNUAL RECRUITMENT PLANNER 2013 - 14
தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்டது.
வேலைக்கு படிப்பு போதாது தகுதியும் இருக்க வேண்டும் - TET Judgement
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து
செய்யக்கோரி, பள்ளி நிர்வாகிகள் பலர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல்
செய்தனர். மனுக்களில், எங்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
காலியாக உள்ளன.
பிளஸ் 2: இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக
70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு எப்போது?
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செய்முறைத் தேர்வு நடக்கும்
தேதியை, நேற்று வரை, தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர்
மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ,
மாணவியரின் முடிவுகள், இன்று, தேர்வுத்துறை இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு: பிப்ரவரி 1ம் தேதி துவக்கம்
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, நாளை துவங்குகிறது. 4
லட்சம் மாணவ, மாணவியர், செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர். இந்த
தேர்வுப் பணிகளில், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
5 பள்ளிகளை மூட முடிவு: 10 பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி
பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம்
திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட
முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை
ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நிப்ட் வழங்கும் படிப்புகளும், நுழைவுத் தேர்வுகளும்
கடந்த 1986ம் ஆண்டு, நிப்ட் மையம் டெல்லியில் மட்டுமே ஒன்று இருந்தது.
ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கே, மேகாலயா
மாநிலம் ஷில்லாங்கிலிருந்து, தென்மேற்கே கேரள மாநிலம் கண்ணூர் வரையிலும்,
புபனேஷ்வரிலிருந்து, இமாச்சல பிரதேசம் கங்ரா வரையிலும், நிப்ட் மையங்கள்
பரவியுள்ளன.
பள்ளிகளில் குறைந்த மாணவர்கள் முதல்வர் ரங்கசாமி வேதனை
மாணவர்களுக்கான திட்டங்கள் நிறுத்தப்பட
மாட்டாது என, முதல்வர் ரங்கசாமி கூறினார். கதிர்காமம் அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில், அவர் பேசியதாவது:
பொதுத் தேர்வில் தனியார் பள்ளிகளுக்கு சமமான
வெற்றி பெறுகிறோம். ஆனாலும் சில அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் 5
மாணவர்கள் தான் உள்ளனர்.
பள்ளிகளில் தீ தடுப்பு கருவி:அமைக்க கல்வித்துறை வலியுறுத்தல்
பள்ளிகளில் தீ தடுப்பு கருவி அமைத்து பள்ளி
வாகன பராமரிப்பு ஆய்வு செய்ய பள்ளி நிர்வாகங்கள் முன் வர வேண்டும்' என
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்களது நடத்தை! சமூகத்தின் பார்வை!! மாணவர்களின் எதிர்காலம்!!! - எஸ். எல். மன்சூர்
அண்மைக் காலமாக பள்ளியின் ஆசிரியர்கள்மீதான
சில பிரச்சினைகைள் வெளிக்கொணரப்பட்டு வருகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.
பகுதி நேர பள்ளிகள் அமைக்க இடம் பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை
இடம் பெயர்ந்தோரின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு, அந்தந்த பகுதிகளில்
பகுதி நேர பள்ளிகள் அமைக்க வேண்டும் என, வெளி மாநிலங்களில் இருந்து,
தமிழகத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10ம் வகுப்பு வினா வங்கி புத்தகம்: மாவட்டங்களில் விற்கப்படுமா?
பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில்
உள்ள, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக அலுவலகத்தில், விற்பனை
செய்யப்படுகிறது. இதனால், மாநிலத்தின் கடைகோடி மாவட்டத்தைச்
சேர்ந்தவர்களும், சென்னைக்கு படை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
சமச்சீர் கல்வி வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா?
மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல்
கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர்
கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென,
தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
"தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன்,
மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது" என, அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 22 நாள் தொடர் பயிற்சி - Dinamalar
அரசு விடுமுறை, பயிற்சி என, ஜனவரி மாதம் 22 நாட்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை.
6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை
புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000
ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக்
கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க
வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள்
தெரிவித்தன.
குழந்தைக்கு முதலுதவி - பள்ளிக்கூட பாப்பாக்களின் பெற்றோர் கவனத்துக்கு...
பள்ளி
முதல்வரே குழந்தைகளிடம் பாலியல் வன்முறை செய்வது... செல்போனில் படம்
எடுத்து பள்ளிச் சிறுமிகளை மிரட்டுவது... பார்வையற்ற குழந்தைகளிடம்
பாலியல் அத்துமீறல்... இப்படி பெண்குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள்
அன்றாடம் அவமானமாகிக் கொண்டிருக்கின்றன. பள்ளிக்கூடம் சென்ற குழந்தை மாலை
வீட்டுக்கு வரும் வரை பதற்றத்துடன் பெற்றோர் காத்துக்கிடக்கும் அவலம்தான்
இன்று நிலவுகிறது.
TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
புதிய கட்டண நிர்ணயம்: 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக தமிழகம்
முழுவதும் 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட
உள்ளது. தனியார் பள்ளிகளிடம் பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விசாரணை
தொடங்கும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நாளொன்றுக்கு 40 பள்ளிகள்
வீதம் நேரில் விசாரணை நடத்தி, கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
பிளஸ் 1 வகுப்பு முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
பிளஸ் 1 மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு தேதி விபரங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி துவங்கும் தேர்வானது,
மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேதி வாரியான விபரங்கள்
மார்ச் 5 - தமிழ் முதல் தாள்
மார்ச் 8 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 8 - தமிழ் இரண்டாம் தாள்
10 th Maths Study Materials
Prepared By Mr. S. Sakthivel, M.Sc., B.Ed.,
B.T.Asst., ( Maths )
GHRSS,
Ramiyampatti,
Dharmapuri District.
இணையதள மையங்களில் குவியும் தலைமையாசிரியர்கள்
ஸ்மார்ட் கார்டு பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, ஆன்-லைனில் பதிவு
செய்ய, தனியார் இணையதள மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து
வருகின்றனர்.
பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் - Dinamalar
புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து
அனுப்புவதற்கு காலதாமதம் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு
வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டை நிரப்ப நடவடிக்கை
முதுகலை ஆசிரியர் தேர்வில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய
பாடங்களில், தமிழ் வழி இடஒதுக்கீட்டை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) நடவடிக்கை எடுத்துள்ளது.