Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.


            TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது  கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.


புதிய கட்டண நிர்ணயம்: 12 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்


           புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. தனியார் பள்ளிகளிடம் பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விசாரணை தொடங்கும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நாளொன்றுக்கு 40 பள்ளிகள் வீதம் நேரில் விசாரணை நடத்தி, கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பிளஸ் 1 வகுப்பு முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு


          பிளஸ் 1 மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி துவங்கும் தேர்வானது, மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
 
தேதி வாரியான விபரங்கள்
 
மார்ச்  5 - தமிழ் முதல் தாள்
மார்ச்  8 - தமிழ் இரண்டாம் தாள்

நெருங்கும் பொதுத்தேர்வு - கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை - Dinamalar


           தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பிற பாட ஆசிரியர்கள் அப்பாடத்தை நடத்தி வருகின்றனர். இதனால், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

10 th Maths Study Materials






Prepared By Mr. S. Sakthivel, M.Sc., B.Ed.,
B.T.Asst., ( Maths )
GHRSS, 
Ramiyampatti,
Dharmapuri District.


இணையதள மையங்களில் குவியும் தலைமையாசிரியர்கள்


       ஸ்மார்ட் கார்டு பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, ஆன்-லைனில் பதிவு செய்ய, தனியார் இணையதள மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். 

பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் - Dinamalar


           புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து அனுப்புவதற்கு காலதாமதம் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு



      தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள், 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் செப்., 5ம் தேதி, டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டை நிரப்ப நடவடிக்கை

           முதுகலை ஆசிரியர் தேர்வில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில், தமிழ் வழி இடஒதுக்கீட்டை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை எடுத்துள்ளது.

இலவச மடிக்கணினி திருடு போனதாக முறைகேடு: கலெக்டரிடம் புகார்


          மானாமதுரை அருகே சின்னகண்ணணூர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்காமல், திருடு போனதாக கூறி, பள்ளியில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது இதுகுறித்து கலெக்டர் ராஜாராமனிடம், மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

பிரிட்டனில் படிக்க விருப்பமா?


      பிரிட்டனில் உயர்கல்வி பயில விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.

பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் அமைக்க முதல்வர் உத்தரவு


        தமிழகத்தின் பல மாவட்டங்களில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகள் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

படித்தவர்களிடம் அகந்தை கூடாது: மோகன் பாகவத் அறிவுரை



        கல்வி ஒன்று தான் இன்றைய இளைஞர்களிடம் தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் வளர்க்கும், என ஆர்.ஆர்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறினார்.


பின்பற்றப்படாத வழிகாட்டு நெறிமுறைகள் : கல்லூரி ஆசிரியர்கள் பாதிப்பு - Dinamalar


         யு.ஜி.சி.,யின் வழிகாட்டு நெறிமுறைகள், பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டும், கல்லூரியில் பின்பற்றப்படாததால், கல்லூரி ஆசிரியர்கள் பெரும் பாதிப்புள்ளாகி உள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயர்கல்வி துறை செயலருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நித்திரியைத் தொலைக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும்.


ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ் 


ஆசிரியர்களின் வருத்தம்! 

9 ஆம் வகுப்பில் All Pass தந்து விட்டார்களே, இந்த முறை நம் பாடத்தில் பய புள்ளைங்க எவ்வளவு பாஸ் percentage வாங்குவார்களோ என 10 ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் நித்திரியை தொலைத்து விட்டார்கள்.

மாணவர்களின் வருத்தம்.!


          தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது முதுமொழி. தை பிறந்தால் வழி பிறக்கிறதோ இல்லையோ, மாணவர்களுக்கு "வலி' பிறந்துவிடுகிறது. தையைத் தொடர்ந்து வரும் மாதங்கள் தேர்வு மாதங்கள். குரு பார்வை, சனி பார்வையைப்போல தேர்வுப்பார்வை அவர்களை ஆட்டிப்படைக்க இருக்கிறது. அவர்களை எழுப்ப விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் அடிக்க ஆரம்பிக்கும் அலாரம், ஒவ்வொரு மணிக்கு ஒருமுறை அடித்துக்கொண்டேயிருக்கும். எனவே அவர்கள் இந்தப் பருவத்தில் தூக்கத்தைத் தொலைப்பவர்களாகிறார்கள்.


மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற்று இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்கள் பிற மாவட்டங்களுக்கு மாறுதல் தற்சமயம் கோர இயலாது- என்ன செய்யலாம்?


         மாநில அளவிலான பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் கோரி வழக்கு தொடுத்தவர்கள் சார்பான வழக்கு நிலுவையில் உள்ளதால்   மேற்காண் வகையில் நியமனம் பெற்றவர்கள் மாவட்ட மாறுதல் பெற இயலாத நிலை உள்ளது. எனவே இது குறித்து பணிவுடன்,

ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள்


       ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வருகிறது. அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் ஒரே நாளில் வருவது கிடையாது. எனவே இது புதிய நடைமுறையாக கருதப்படுகிறது. 27.03.2013 அன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு Political science ,Nursing, Statistics ஆகிய தேர்வுகள்  நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாபகமறதிப் பிரச்சினையா ?


          படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.

சக ஆசிரியர்களுடன் நட்பு!..


        பள்ளியில் புதிதாக சேரும் ஆசிரியர்கள் பெரும்போலானோர் ஆர்வம் மிகுதியில் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவார்கள். இது இயல்பானது.

அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு சிபாரிசு செய்யும் காலம் வரும்: வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்



      அரசுப் பள்ளிகளிலும் மாணவர்சேர்க்கைக்கு சிபாரிசு செய்யக்கூடிய நிலை விரைவில் வரும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.


விடுமுறை நாட்களில் பயிற்சி கூடாது : ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


          தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். 
 

ஆசிரியர் பற்றாக்குறை - வகுப்புகளை இழக்கும் மாணவர்கள்


         தமிழகமெங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையால், வகுப்புகள் நடப்பதே அரிதாக உள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில், வாரத்திற்கு 20 மணிநேர வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
 

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் நலத்திட்ட ஆசிரியர் பணியிடம் வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம்


       தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் நலத்திட்ட ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 

உடனடி சம்பளம் நல்லது - TET மற்றும் TRB மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு.


      TET மற்றும் TRB மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உடனடி சம்பளம் நல்லது

     TET மற்றும் TRB மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பாலானோருக்கு சம்பளம் பெற்று வழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் ஒரு சில பள்ளிகளில் மட்டும் நிர்வாக காரணங்களால் இதுவரை சம்பளம் பெற்று வழங்கப்பட வில்லை. ஆனால் உடனடியாக சம்பளம் பெறுவதில் உள்ள நன்மை களை இப்போது பார்க்கலாம்.

நன்மை 1.

     TET & TRB மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தோராயமாக இதுவரை கீழ்கண்டவாறு சம்பளம் பெற்று இருப்பார்கள்.


IT TAX - Useful Forms






Thanks To Mr. Sugumar,
Headmaster,
GHS,
Vilai,
Tiruvannamalai District.

Regulation Order

TAMIL NADU GO CLASSIFYING PENSIONERS INTO THOSE WHO RETIRED BEFORE AND AFTER JUNE 1, 1988 STRUCK DOWN


         Tamil Nadu GO classifying pensioners into those who retired before and after June 1, 1988 struck down. In fixing pension, no differential treatment can be made among government employees who retired in different periods while taking into consideration their ‘dearness pay’, the Supreme Court has held.  
 

ஆடிட்டர் படிப்புக்கு வறுமை தடையாக இருக்காது: ஐ.சி.ஏ.ஐ. தலைவர் பேச்சு


       "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் பயிற்சி பெறுவதற்கு வறுமை தடையாக இருப்பதில்லை," என, இந்திய பட்டய கணக்கர்கள் சங்க (ஐ.சி.ஏ.ஐ.,) தேசிய தலைவர் ஜெயதீப் நரேந்திர ஷா பேசினார்.

10 பல்கலைகழகங்களில் மொழிப் பயிற்சி கூடங்கள்


        மாணவர்களின் மொழியறிவை வளர்க்கும் வகையில், 10 பல்கலைக்கழகங்களில், மொழி பயிற்சி கூடங்களை, அரசு அமைக்க உள்ளது. இதற்காக, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

பள்ளி குழந்தைகளிடம் பாரபட்சம்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


        பள்ளிக் குழந்தைகளிடம் ஜாதி, மத அடிப்படையில், பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளதற்கு, கவலை தெரிவித்துள்ள தேசிய ஆலோசனை குழு, "இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை வலியுறுத்தி உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive