Half Yearly Exam 2024
Latest Updates
சர்வர் பழுதால் EMIS - Data Entry பணி தாமதம்
மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தகவல்கள்
பதிவேற்றும் பணியில், பள்ளி கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால்,
தேர்வுநேரத்தில், மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு
உள்ளது.
பாலியல் குற்றச் செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
"பள்ளிகளில் பாலியல் குற்றம்புரியும் ஆசிரியர்கள் நீக்கப்படுவர்" என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பெண் குழந்தைகளின் கல்வியானது, தொடக்க கல்விக்குப் பிறகு, அதிகளவில் தடைபடுகிறது
தேசிய சர்வேயின்படி, நாடு முழுவதும் மொத்தம் 23 கோடி குழந்தைகள், 13 லட்சம் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
250 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம்: கல்வித்துறை யோசனை
அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள்
ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
சி.ஏ., இறுதி தேர்வு: மும்பை வாழ் தமிழ் மாணவி முதலிடம்
சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த,
பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி
பெற்றுள்ளார்.
திறந்தநிலை பல்கலையில் படித்தால் சிக்கலா?
"தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப் பணிகளில்
சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 107வது அரசாணையை நீக்குமாறு,
முதல்வரிடம் வலியுறுத்துவேன்" என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் புதிய
துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.
இலவச மடிக்கணினியில் வகுப்பு நடத்த புதிய திட்டம்
.
அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு, கல்வி மென்பொருள் மேம்பாட்டு பயிற்சி
அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு அளிக்கும் இலவச மடிக்கணினி மூலம்,
வகுப்பு நடத்தும் வகையில், இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மதுரையில் பள்ளி அங்கீகாரம் புதுப்பிக்க முகாம்
மதுரையில் ஐந்து மாவட்ட அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி
பிரிவு பள்ளிகளின் அங்கீகாரங்களை புதுப்பித்தல் முகாம், ஓ.சி.பி.எம்.,
பள்ளியில் நேற்று துவங்கியது. பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி
இதை பார்வையிட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை: பிப்ரவரியில் சிறப்பு முகாம்
அரசு பள்ளி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பல் சம்பந்தமான நோய்கள்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு, பல் பரிசோதனை மற்றும்
சிகிச்சை வழங்க, சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?
கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து
நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை பல்கலையில் மீண்டும் எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டம்?
பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலையில்,
எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, புதிய
துணைவேந்தருக்கு, பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
பேரிடர் குறித்து எச்சரிக்க மொபைல் போனில் வரைபடம்
"பேரிடர்கள் குறித்த தகவல்களை, மக்களுக்கு முன்கூட்டி தெரிவிக்க, மொபைல்
போனில் வரைபடம் அனுப்பும் வசதியை பயன்படுத்த வேண்டும்,&'&' என,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சியின்,
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்
எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம்
அளிக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால்
மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றை சாரள முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூக பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண வலியுறுத்தல்
"சமூக ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில்,
ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்,' என, மாநில உயர்கல்வி மன்ற துணைத்
தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலாம் வலியுறுத்தல்
"லட்சியம் நிறைவேற தேவையான நான்கு குணங்கள்"
"உழைப்பு, அறிவுத் தேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு
என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும்,' என்று முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் பணி படிப்பது மட்டுமே: அப்துல்கலாம் அறிவுரை
மாணவர்களின் பணி படிப்பது மட்டுமே, அதை மட்டுமே நீ செய்ய வேண்டும்&'&' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இனி வெளிநாட்டு மொழிகள்
வெளிநாட்டு மொழிகளுக்கான கிராக்கி அதிகரித்து வருவதால், ஐ.சி.எஸ்.இ.
பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், விரும்பும் வெளிநாட்டு
மொழிகளை படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் படிக்கும் பழக்கம் சிறப்பானது
அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை சிறு
வயதிலிருந்தே மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.21 லட்சம் மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி
நாகை மாவட்டத்தில் 457 பள்ளிகளைச் சேர்ந்த 1.21
லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள்
வழங்கப்படவுள்ளன என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்.,1ம் தேதி துவக்கம்
பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 1-ம்
தொடங்கி18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை
உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில்
இயற்பியல்,
வேதியியல், கணினி அறிவியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு
செய்முறை தேர்வு பிப்.,1ம் தேதி முதல் பிப்.,18ம் தேதிக்குள் நடத்தி
முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை பரபரப்பு உத்தரவு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளத்தை
நிறுத்திவைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.