Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மார்ச் 1–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வை தொடங்கவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஏப்ரல் 16–ந் தேதிக்குள் முடிக்கவும் அரசு தேர்வுகள் துறை முடிவு

     இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எப்போது தொடங்கும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: அரசு பொதுத்தேர்வுகளான பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நல்ல முறையில் நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும்

அரசு கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில ஒப்பந்தம்

     தமிழக அரசு கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில், கல்வி கற்க, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

விரைவில் 2308 முதுகலை ஆசிரியர்களுக்கும் Online கலந்தாய்வு மூலம் பணி ஆணை , மேலும் 6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

    அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறை சொல்ல முடியாத தேர்வு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி - Dinamalar

        ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு யாரும் விரல் நீட்டி குறை காட்ட முடியாத தேர்வு என அமைச்சர் என்.ஆர்.சிவபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பணி நியமன ஆணை பெற சென்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி!!

      பல்வேறு தடைகளை தாண்டி சென்ற செவ்வாய்கிழமை அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இறுதி தேர்வு பட்டியல் வெளியிட்டது. 
 

அரசு பள்ளிகள் பொது தேர்வில் சாதிக்க... கல்வித்துறை அறிவுரை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார்.

மாணவர்கள் வீட்டில் நூலகம் அமைத்து படிக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் உதவியுடன், ஒரு சிறிய நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்," என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு: அண்ணாமலை பல்கலை வெறிச்சோடி காணப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் விடுப்பு எடுத்து, சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றதால், பல்கலைக்கழகம் வெறிச்சொடி காணப்பட்டது.

ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.

    பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வில் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

         ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிளஸ் 2 தற்காலிக அட்டவணை தயார்: 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

          பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

         டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது.

பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!

    ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வேண்டாம்

     கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றரை ஆண்டுகளில் 10 வகை தேர்வுகளை நடத்தி 28 ஆயிரம் பேர் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம்

     ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பெருமிதம் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: மார்ச் 1ம் தேதி துவங்க வாய்ப்பு

        ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பேருந்து படிக்கட்டில் தொங்கினால் பள்ளியில் இருந்து நீக்கலாம்

      பேருந்து படிக்கட்டுகளில், மாணவர்கள் பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

ஆதிவாசி மாணவர்களுக்காக ஆசிரியர்கள் சேவை

      தேனி மாவட்டத்தில், ஆதிவாசி மாணவர்களை, தினமும் பள்ளிக்கு அழைத்து வர, ஆசிரியர்கள் இருவர் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் டிகிரி வெரிபிகேஷன் சிஸ்டம் அறிமுகம்

      கோவை: மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்ட சான்றிதழ்களை, ஆன்லைன் டிகிரி வெரிபிகேஷன் சிஸ்டம் என்ற அமைப்பின் மூலம் Verification செய்யும் வசதியை, காருண்யா பல்கலை அறிமுகப்படுத்தியுள்ளது.

TET - நந்தனத்தில் நாளை 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: தமிழக முதல்வர் வழங்குகிறார்

    கல்வித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 
  

18382 ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமையே பணியிடங்களில் பணியமர உத்தரவு?

      புதிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையே தங்கள் பணியிடங்களில் பணிகளில் சேர உத்தரவிடப்பபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive