Half Yearly Exam 2024
Latest Updates
அறிவியல் செய்முறை பயிற்சி: பதிவு செய்ய அக்டோபர் 31 இறுதிநாள்
அடுத்த ஆண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு: 3,472 பணியிடங்களுக்கு அக்டோபர் 15 முதல் கலந்தாய்வு
குரூப் 2 தேர்வு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,472 பேருக்கு வரும் 15-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான 6,695 பதவிகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் பொருட்டு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதினர்.
ஆசிரியர் பணி நியமனத்திற்கு புதிய விதிமுறைகளால் தேர்வர்கள் அதிருப்தி
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளால், தேர்வர் மத்தியில், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
வெயிட்டேஜ் அடிப்படையில், 100 மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. டி.இ.டி., தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள, 60 மதிப்பெண்களை பெற, தேர்வில், 150க்கு, 135 மதிப்பெண்கள் பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம், தேர்வர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் அமலான பின், டி.இ.டி., தேர்வு முறை அமலுக்கு வந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய மதிப்பெண் மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
How to School and Staff Details Entry to www.tndse.com Website? - Easy way Article.
முதலில் தங்களது browser இல் நமது பாடசாலை வலைதளத்திற்கு செல்லவும்.
நமது வலைத்தளத்தில் இடது புறம் உள்ள Link ஐ Click செய்யவும்.
அரசு பள்ளி கல்வி துறை வலைதளத்திற்கு தாங்கள் செல்லுவீர்கள். அங்கு உள்ள login ஐ click செய்யவும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)- "மாறுகிறது ரேங்க் பட்டியல்"
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் புதிய விதிமுறைகளின் படி, மாற்றி வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,448 பேருக்கும் பணி நியமனம், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
புதிய மதிப்பெண் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும் என்று டி.ஆர்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.
நேரடி தொடர்பு கொள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு
கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.