Half Yearly Exam 2024
Latest Updates
நேரடி தொடர்பு கொள்ள பள்ளிகளின் விவரம் சேகரிப்பு
கல்வி துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல் படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க புதிய வழிமுறை: தமிழக அரசு
நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் களப்பயிற்சிகள்அளிக்கப்படும்.
நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 3 மாத காலம் கீழ்க்காணும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
1) உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் - 4 வாரங்கள்
2) மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் - 2 வாரங்கள்
3) அனைவருக்கும் கல்வித் திட்டம் - 3 நாட்கள்
4) அரசு ஆசிரியர் பயிற்சி மையம் - 3 நாட்கள்
5) தொடக்கப் பள்ளிகள் - 2 வாரங்கள்
6) நடுநிலைப் பள்ளிகள் - 2 வாரங்கள்
7) தொடக்கக் கல்வி இயக்ககம் - 1 வாரம்
|
சத்துணவு பணியாளர் நியமன ரத்து தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை
சத்துணவு பணியாளர் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு, 6 வாரம் இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசின் மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. டி.ஆர்.பி., இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு, மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை, 12ம் தேதி நடந்த தேர்வில், 6 .76 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்; 2, 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், அக்டோபர், 3ம் தேதி, மறுபடியும் தேர்வு எழுதலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இந்நிலையில், இத்தேர்வில், ஜூலைக்கு பின், பி.எட்., முடித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அதில், "தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், புதிதாக பி.எட்., படித்தவர்களும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த தகுதித் தேர்வு, அக்டோபர், 14ம் தேதிக்கு மாற்றப்படுகிறது' என, ஐகோர்ட் உத்தரவிட்டது.
பள்ளி கட்டட பணிகள்: தலைமையாசிரியர்கள் போர்க்கொடி
பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம். எஸ்.ஏ.,) திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளுக்கான பொறுப்பில் இருந்து, தலைமை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2009ல் இருந்து, மத்திய அரசு நிதி மூலம் செயல்படும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் சார்பில், மக்கள் தொகை, பள்ளிகளிடையே உள்ள தூரம் போன்ற சில வரையறைகள் படி, நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு தமிழக அரசு உத்தரவு
பள்ளி வாகனங்கள் இயக்கம் முறைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு சட்டம்,2012 என்ற பெயரில் இந்த மாதம் (அக்டோபர்,1) முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.
பிற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி
பிற்படுத்தப்பட், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
கல்வி தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி
இந்தியாவில் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது. இந்தியாவில் பள்ளி உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ராஷ்டீரிய மத்யமி்க் சி்க்ஷா அபியான் (ஆர். எம்.எஸ். ஏ) திட்டத்திற்கு சுமார் 500 மில்லியன் டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்க உள்ளது.
உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தை விரைந்து முடிக்க உத்தரவு - உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1,100 உதவி பேராசிரியர் பணி நியமனத்தை, விரைந்து முடிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (டி.ஆர்.பி.,), உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், உயர் கல்விக்கான பணி நியமனங்களை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக,..
கல்வி இணை செயல்பாடு -தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை கையேடுகள் PRIMARY/UPPER PRIMARY CO-SCHOLASTIC DRAFT NEW!
Primary School
Upper Primary School
குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகல்வி முதன்மை செயலாளர் உத்தரவு
குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் உரிய முறையில் பள்ளி தொகுப்பெடுகள் மற்றும் கலண்டர்களில் இடம்பெறச் செய்தும் கலந்தாய்வுகள் நடத்தியும் மேம்படுத்தவும் . குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக செயல்படுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை அரசு / அரசு சாரா நிறுவனங்கள் மூலம் விளம்பரப்படுத்தவும் - பள்ளிகல்வி முதன்மை செயலாளர் உத்தரவு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
click here & download [Press Release No.358] ( Honble Chief Minister announces D.A rate hike for State Government employees )
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.
கீ-ஆன்சர் குளறுபடிக்கு நிபுணர் குழுவே பொறுப்பு: டி.ஆர்.பி. திட்டம்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, கீ-ஆன்சர் ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.