தமிழக சட்டசபை சபாநாயகர் டி.ஜெயக்குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஜெயக்குமரின் பதவி விலகலை தொடர்ந்து துணை தலைவராக இருந்த தனபால் சபாநாயகர் பணிகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதார நலத்திட்டக் கல்விக்கான பயிற்சியினை உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு பள்ளிக்கு இரு ஆசிரியர்களுக்கு 4 கட்டங்களாக பயிற்சியளிக்க SCERT இயக்குனர் உத்தரவு
1st Batch - October 8&9
2nd Batch - October 11&12
3rd Batch - October 15&16
4th Batch - October 18&19
Note: Training to Two Teachers only in Each Upper Primary School
பிளஸ் 2 தனி தேர்வு: 28ல் ஹால் டிக்கெட்
பிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
RTE Training interchanged
27.09.2012 அன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு
28.09.2012 அன்று நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
29.09.2012 அன்று உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு (6 முதல் 8 வகுப்பை கையாளும் ) நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
ஒரே பல்கலையின் கீழ் தொலைதூர கல்வி படிப்புகள்? இதற்கான அறிவிப்பு விரைவி வெளியாகும்
பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தி வரும், தொலைதூர கல்வி படிப்புகளை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து, உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது பிரிவினருக்கு கூடுதல் இடம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழியர் பற்றாக்குறையால் சான்றிதழ் சரிபார்ப்பு பணி பாதிப்பு
தேர்வுத்துறை இயக்குனரகத்தில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் தேக்கமடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், ஆன்-லைன் மூலம் பணிகள் நடக்கும்போது, இப்பணி சீராகும் என்கின்றனர். அதுவரை, இப்பிரச்னையை கையாள வழி என்ன என்ற கேள்வி தொடர்கிறது.
பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், பல்வேறு துறைகளில், தேர்வுத்துறை மிகவும் முக்கியமானது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் உட்பட, ஆண்டுக்கு, 40 தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை தரும் பெரும் பணியை, இத்துறை செய்து வருகிறது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களை திருத்த நேரில் வர வேண்டாம்
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு யாரும் நேரில் வர வேண்டியதில்லை; தேர்வு நாளன்று அவர்கள் குறிப்பிடும் விருப்பப் பாடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதற்காக அக்டோபர் 14-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 15ல் துவங்குகிறது - அட்டவனை வெளியீட
15.10.12 மொழி முதல் தாள்
16.10.12 மொழி இரண்டாம் தாள்
18.10.12 ஆங்கிலம் முதல் தாள்
19.10.12 ஆங்கிலம் இரண்டாம் தாள்
22.10.12 கணிதம்
25.10.12 அறிவியல்
26.10.12 சமூக அறிவியல்
டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டிஎன்பிஎஸ்சி கட்டிடம் இடம் மாறுகிறது. பிராட்வே பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற உள்ளது.
N.S.S - மாணவர்களை வேலை வாங்கக் கூடாது ஆசிரியர்களுக்கு உத்தரவு
என்.எஸ்.எஸ்., முகாம்களால், நூறு நாள் வேலை திட்டத்துக்கு இடையூறு கூடாது, என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் இளைஞர் விவகாரம், விளையாட்டு துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.,) செயல்படுத்தப்படுகிறது.
பள்ளி பஸ் உதவியாளருக்கும் "லைசென்ஸ்': அறிமுகமாகிறது புதிய நடைமுறை
பள்ளி மாணவ - மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டிரைவர்கள் மட்டுமின்றி, பள்ளி பஸ்சின் உதவியாளர்களுக்கும், "லைசென்ஸ்' கட்டாயம் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
ஒருநாள் பயிற்சிக்காக காலாண்டு விடுமுறை இழக்கும் ஆசிரியர்கள்
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் தென் மாவட்ட ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், மங்களூர் வட்டாரத்தில், தென் மாவட்டங்களான, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலாண்டுத் தேர்வு முடிந்து, நாளை முதல், 30ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விருதுக்கு பள்ளிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் நண்பன் திட்டத்தில், பள்ளிகள் விபரம் பதிவு செய்யப்படுகின்றன. சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும். பசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளிகள்,
இணையதளத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி மின்னஞ்சல் முகவரி அளிக்கப்படும்.
இணையதளத்தில், மாணவர்கள் எண்ணிக்கை, பள்ளி தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தனித்தனி மின்னஞ்சல் முகவரி அளிக்கப்படும்.