ஜூலை தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ல் துணைத் தேர்வை நடத்துவது என்றும், மேலும், தேர்வு நேரத்தை ஒன்றரை மணியிலிருந்து 3 மணி நேரமாக நீட்டிப்பது என்றும் கல்வித் துறை முடிவு செய்தது.
Half Yearly Exam 2024
Latest Updates
ஏற்கனவே நடந்த, டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வில், 382 பேர், மிகவும் குறைந்த மதிப்பெண் வாங்கியுள்ளனர்.
முதல்தாள் தேர்வு:
.ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-75
.4 முதல், 9 வரை பெற்றவர்கள்-23
.3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-52
இரண்டாம் தாள் தேர்வு:
.ஒரு இலக்கத்தில் மதிப்பெண் பெற்றவர்கள்-116
.4 முதல், 9 வரை பெற்றவர்கள்-40
.3 மதிப்பெண் வரை பெற்றவர்கள்-76.
High school&Hr.Sec Schools Re-Open 3.10.12 - CEO, Vellore
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு 3.10.12 அன்று திறக்கும். - முதன்மை கல்வி அலுவலர். வேலூர்
4000 - பேர் நேற்று 20-09-2012 பணிக்கு வரவில்லை. ஏன் பந்த் அன்று பணிக்கு வரவில்லை என்று விளக்கம் கேட்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் நேற்று20-09-2012 பணிக்கு வராதவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை கணக்கு எடுத்தது. இதில் பணியாற்றும் 1 லட்சத்து 36 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 24 முதல் விண்ணப்ப விநியோகம்- CEO - அலுவலகங்களில் கிடைக்கும் (விலை -50)
ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத விரும்பும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
TNTET - டி.இ.டி, தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு - புதிய தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் எனவும், புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வு(TN TET) அக்டோபர் 14 ந் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-க்கு பதிலாக அக்டோபர் 14ந் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக இந்த வருடம் முடித்தவர்களையும் சேர்த்து தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆசிரியர்த் தேர்வு வாரிய தலைவர் இவ்வாறு பதிலளித்துள்ளார் என ஆசிரியர் தேர்வு வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
CCE - மார்க்கை கிரேடாக மாற்ற - Thanks to Mr.Ganesan, Teacher
சதவிகித்திலிருந்து தகுதி குறியீட்டை உருவாக்குதல் (letter Grade)
தற்பொழுது ஆசிரியர்கள் மதிப்பீட்டு முறையில் CCE EVALUATION Continuous and Comprehensive Evaluation முறையை பின்பற்றி வருகிறார்கள் அதில் மார்க்கை கிரேடாக மாற்ற Microsoft Excel -லை எவ்வாறு பயன் படுத்துவது என்று பார்ப்போம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியருக்கு, அடிப்படை சம்பளத்தில், 65 சதவீதம் அகவிலைப்படியாக தற் போது வழங்கப்படுகிறது. இதை 72 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பபட்டுள்ளது.