Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு நேரத்தை அதிகரித்திருக்க வேண்டும் : ஆசிரியர்கள்

          தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு டிஇடி இன்று நடைபெற்றது. இன்று காலை பட்டயப் படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. 150 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வினை எழுத ஒன்றரை மணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது.
தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்கள் பலரும், வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தேர்வெழுதிய போதிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும் வருந்தினர்.
150 கேள்விகளுக்கும் விடைகளை செயல்முறையில் கண்டுபிடித்து பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்ததால், ஒன்றரை மணி நேரம் என்பது மிகவும் குறைவாகும். பட்டயப் படிப்பு ஆசிரியர்களுக்கான வினாத்தாளில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளும் கேட்கப்பட்டதாகவும் சில ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதியத்துக்கு மேல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது.

டி.இ.டி தேர்வு கடினமாக இருக்குமா?


      வரும் 12ம் தேதி நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,), கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின்படி தேர்வு என்றாலும், பிளஸ் 2 நிலையில், கேள்விகள் கடுமையாகவும், சிந்தித்து விடை அளிக்கும் வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

வேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை


        கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், கல்வி வளர்ச்சி தினத்தை, பள்ளி வேலை நாளில் கொண்டாட, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி , கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஜூலை 14 அல்லது ஜூலை 16 ஆகிய இரு தினங்களில், ஏதாவது ஒரு நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி. தேர்வு: ரோல் நம்பர், பெயர் தெரிவித்தால் எழுதலாம்


          நாளை நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், தங்களது ரோல் நம்பர், பெயர் தெரிவித்து தேர்வு எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேது ராமவர்மா தெரிவித்தார்.

ஆசிரியர் பட்டயப் படிப்பில் 15,000 இடங்கள் காலி


          ஆசிரியர் பட்டயப் பயிற்சி சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டின்கீழ், 17 ஆயிரம் இடங்கள் இருந்தும், வெறும், 1,998 பேர் மட்டுமே, இந்த பயிற்சியில் சேர்ந்தனர். ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு வேலை வாய்ப்பு இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாகவே, இந்த படிப்பில் சேர்வோர் எண்ணிக்கை, சரிந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திருச்சியில், 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடந்தது.

Online Applications invited for the post of Village Admn.Office (VAO) Last Date:10.08.2012



S No.Advt. No./ Date of NotificationName of the PostOnline RegistrationDate of ExaminationActivity
FromTo
1
26/2012
09.07.2012
Village Administrative Officer in T.N. Ministerial Service 09.07.201210.08.201230.09.2012

Touch Me



Mail to Padasalai.Net@gmail.com

உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials மற்றும் அறிய தகவல்கள் இருந்தால் தங்கள் முழு விவரத்தோடு: பெயர் , முகவரி , மொபைல் எண் ( விருப்பம் இருந்தால்) ஆகியவற்றோடு நம் இணையதள மின்னஞ்சல் Padasalai.Net@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி ஆசிரிய சமுகம் பயனடைய பங்காற்றுங்கள்.

புதிய மருத்துவ திட்டம் - கணவன் மனைவி இருவரில் யார் இளையவரோ அவருடைய சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


     புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2012 முதல் நடைமுறைபடுத்தபபட உள்ளது. இதில் குடுமபத்தில்  கணவன் மனைவி இருவரும் அரசு வேலையில் இருந்தால் ஒருவருக்கு மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் கணவன் மனைவி இருவரில் யார் இளையவரோ அவருடைய சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் குடும்பத்தில் இனி மருத்துவ நிதி ஜூலை 2012 முதல் பெண்களின்  சம்பளத்தில் ரூ.150/-  பிடித்தம் செய்யப்படும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive