Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய மருத்துவ திட்டம் - கணவன் மனைவி இருவரில் யார் இளையவரோ அவருடைய சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


     புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2012 முதல் நடைமுறைபடுத்தபபட உள்ளது. இதில் குடுமபத்தில்  கணவன் மனைவி இருவரும் அரசு வேலையில் இருந்தால் ஒருவருக்கு மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் கணவன் மனைவி இருவரில் யார் இளையவரோ அவருடைய சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் குடும்பத்தில் இனி மருத்துவ நிதி ஜூலை 2012 முதல் பெண்களின்  சம்பளத்தில் ரூ.150/-  பிடித்தம் செய்யப்படும்.

நமது வலைதள பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.



ஒரு இனிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறோம். 


இனி நமது வலைதள முகவரி www.Padasalai.blogspot.in என type  செய்வதற்கு பதிலாக www.Padasalai.Net என எளிமையாக type செய்தாலே போதுமானது.


இந்த புதிய மாற்றத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் நமது வலைதளத்திற்கு என பிரத்யோக Logo வும் இன்றே அறிமுகப்படுத்தப்படுகிறது.


நன்றி.


By 


பாடசாலை.நெட் குழு


www.Padasalai.Net

Logo Introduce

மாண்புமிகு மாணவனின் 
ஐம்புலன்களை கட்டுபடுத்தும்
ஆறாம் அறிவை அழகுற செதுக்க 
சிந்தனையை உளியக்கி 
சிரத்தை மிகு சிற்பியாவேன்.


காட்சி பொருளை 
கருத்துள்ள பொருளாக்கும் 
அறிவு பார்வையை 
அவனுக்கு தருவேன்.


உணவுப்பசியை இயற்கை தந்ததனால் 
அறிவுப்பசியை அறிமுகப்படுத்தி வைப்பேன்.
விழிப்புணர்ச்சி விடியலில் மட்டும் அல்ல 
அறியாமையில் உறங்கி கிடப்பவர்க்கு 
அறிவு விழிப்புணர்ச்சி ஏற்பட 
அலைபோல் உழைத்து கிடப்பேன்.


நான்கு கால் பாய்ச்சலில் ஓடி 
இரையை தேடும் முயற்சி அல்ல இது.
அறிவுக்கால் பாய்ச்சலில் சென்று 
ஆன்மிகம், விஞ்ஞானம் 
தேட வைக்கும் முயற்சி இது.


அவதாரமாக உருவெடுத்து 
அழியாப்புகழ் பெற விருப்பமில்லை.


ஆசிரியராக விழி திறந்து 
அன்பு மாணவர்களின் 
வெளிச்சப்பாதையாக விருப்பம்.


ஆசிரியராக இருப்பது பெருமை.
ஆசிரியப்பனியின் போதே இறந்து போக விருப்பம்.


நன்றி.- ஆசிரிய கவி- திரு. குலோத்துங்கன் 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive