Half Yearly Exam 2024
Latest Updates
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான - மருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் - தொடக்கக்கல்வி துறையில் நடைமுறைப்படுத்த இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 014210 / சி 3 / 2012, நாள். 12.06.2012
அரசாணை எண். 139 நிதித் (ஊதியப்பிரிவு) துறை நாள். 27.04.2012 ன் படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்கக்கல்வித் துறையில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அரசு அறிவித்துள்ள புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த இயக்குனர் உத்தரவிட்டுள்ளதையடுத்து ரூ.25/- ஆக இருந்த மருத்துவ காப்பீட்டுக்கான மாதசந்தா ஜூன் 2012 முதல் ரூ.75/- ஆக பிடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இத்திட்டத்திற்கான உச்சவரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பழைய திட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீக்கி புதிய சிகிச்சைகள் மேற்கொள்ளவும் இத்திட்டத்தின் மூலம் அரசு உததரவிட்டுள்ளது.
தள்ளாடும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
திருநெல்வேலி: தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீடு "கானல் நீராகவே" இருந்து வருவதால் கட்டாய கல்வி உரிமை சட்டம் "தள்ளாடி" வருகிறது.
பேராசிரியர் ஆகவேண்டுமெனில் 15 நாள் பயிற்சி கட்டாயம்!
டெல்லி: கல்லூரி ஆசிரியர்களாகப் பணியாற்ற உள்ளவர்கள், பல்கலைக்கழக மான்யக்குழு சார்பில் நடத்தப்படும், 15 நாள் பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு கூட்டம், கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில் நடைபெற்றது. இதில், நாட்டில் உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை, 15 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதவிர, உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தரமான கல்வி வழங்குவது, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது குறித்து, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
HSS HM Promotion counselling place Change to Egmore
மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இடம் மட்டும் மாற்றம் :அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்களின், 2012ம் ஆண்டிற்கான பதவி உயர்வு கலந்தாய்வு 23.06.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தினால், கலந்தாய்விற்கான இடம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினமே (23.06.2012) காலை 10.00 மணி அளவில் சென்னை-8, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம் ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதில், மொழி ஆசிரியர்களில் அரசு பள்ளியில் 2001 டிசம்பர் 31க்கு முன்பு பணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடி முடித்தவர்களின் பெயர்களை மட்டுமே தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்பு பட்டியலில் சேர்க்கவில்லை.
எனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் என அறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை ஜி.எம்.அக்பர்அலி விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்.
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சில அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாலும் விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா புத்தகப்பை போன்ற அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்த இருப்பதாலும் மேற்கண்ட அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட விவரம் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதால்
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் அனைவரும் எந்தவித முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்தல் கூடாது எனவும் தலைமையிடத்தைவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் முன்பு இயக்குநரிடம் தகவல் அளிக்காமல் செல்லக்கூடாது எனவும், CUG கைபேசியை எந்நேரமும் இயக்குனர் அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
10ம் வகுப்பு உடனடித்தேர்வு - தத்கால் திட்டத்தில் 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Action Research 2012-13- Process starts in BRC
அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று உறுதிமொழி எடுக்க உத்தரவு.
தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 014002 / ஜே 3 / 2012, நாள். .6.2012
ஆணையர் தொழிலாளர் துறை, சென்னை - 6 கடிதம் எண். ட்டி.2 / 12470 / 2012 நாள். 11.6.2012
தொடக்கக் கல்வி - குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - 2012 - 12.06.2012 அன்று அனுசரிக்கப்பட உள்ள குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று உறுதிமொழி எடுக்க உத்தரவு.
12.06.2012 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எடுத்துகொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சுப் பணி - கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் குறித்து விவரம் கேட்டல்.
பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.38287 / அ3பிரிவு / இ 1 / 2012, நாள். 4.6.2012
நிர்வாகம் - தமிழ்நாடு அமைச்சுப் பணி - கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல.
15.03.2012 அன்று உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு அளிக்க தேர்தோர் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக 15.03.2007 பட்டியலின்படி பிரிவுக் கண்காணிப்பாளர் பணி மாறுதல் பெற்று பணி ஏற்றுள்ள தகுதி வாய்ந்த முறையான கண்காணிப்பாளர்களின் பெயர்ப்பட்டியலினை அனைத்து அலுவலகங்கள் சார்பாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளுக்கு சதுரங்க விளையாட்டு பலகை வழங்குவதற்கு பள்ளிகளின் விவரங்கள் கோருதல்.
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 007436 / கே 2 / 2012, நாள். 6. 2012 பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் தொடக்க / நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, முறையான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, "அரசு / நகராட்சி / மாநகராட்சி நிர்வாகங்களின் கீழ் இயங்கும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, தலா ஒன்பது முதுகலை ஆசிரியர் வீதம், 900 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.
இதையடுத்து மாவட்ட வாரியாக, தரம் உயர்த்த வேண்டிய உயர்நிலைப் பள்ளிகள், அடையாளம் காணப்பட்டு அதற்கான இறுதிகட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகள் தரம் உயர்த்தியதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை . ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பணிநிரவல் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு
உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கு முன், பணிநிரவல் மூலம் சில காலியிடங்களை நிரப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் பயிற்சி படிப்பு: 13ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி (D.EL.Ed) (D.T.Ed என்பது D.EL.Ed என்று மாற்றப்பட்டுவிட்டது) படிப்பிற்கு, ஜூன் 13ம் தேதி முதல், ஜூன் 26ம் தேதி வரை, 110 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
பொது மாறுதல்கள் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / அறிவியல் மற்றும் மழலையர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் - வரையறுக்கப்பட்ட படிவத்தில் விவரங்களை கோருதல்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 11649 / ஐ 2 / 2012, நாள். 05.06.2012
2012 ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / அறிவியல் மற்றும் மழலையர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர்களின் பொதுமாறுதல் கோரும் விண்ணப்பங்களையும், மேலும் 2012 - 2013 கல்வியாண்டில் ஓய்வுபெறும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவிர
01.06.2012 அன்று உள்ளப்படி தொடர்ந்து ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஏற்கெனவே வழங்கப்பட்ட மாறுதல் படிவத்தில் தயாரித்து மாறுதல் கோரும் விண்ணபங்களை அன்று நேரில் தனிநபர் மூலம் இயக்ககத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
சத்துணவு பணியாளர்கள் நேரடி நியமனத்திற்காக கடைசி நாள்.20.06.2012 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடித எண். 7667 / 12 / ச. உ. தி நாள். 05.06.2012
சத்துணவு பணியாளர்கள் நேரடி நியமனத்திற்காக கடைசி நாள்.05.06.2012 லிருந்து 20.06.2012 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சத்துணவு பணியாளர்கள் நேரடி நியமனத்திற்காக கடைசி நாள்.05.06.2012 லிருந்து 20.06.2012 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 05062012
அரசாணை(நிலை) எண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.09.2009அரசாணையின்படி தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர்,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் பதவி உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 + 2 + 3கல்வித் தகுதியில்லாமல், பல ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற்றிருப்பது தொடக்கக் கல்வி இயக்குனரின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் விவரத்தினை இயக்குனருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு - மண்டல அளவில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடத்துதல்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 013145 / டி 1 / 2012 , நாள். .06.2012
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் நேரடி சுற்றுபயணம் - மண்டல அளவில் மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் நடத்துதல் சார்பாக மண்டல அளவிலான ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகள் சுற்றுபயணம் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் நேரடி சுற்றுபயணம் - மண்டல அளவில் மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் நடத்துதல் சார்பாக மண்டல அளவிலான ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகள் சுற்றுபயணம் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
நாள். 05.06.2012 முதல் 08.06.2012
June - Admission Calendar-2012
விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!
ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றை காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 1 முதல் 7 வரை.
How to calculate BE Cut of? - Details
பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதாவது கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப் பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதுதான் கட் ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். அதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
LAW College - Admission Details
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.