Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.



         மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம் ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதில், மொழி ஆசிரியர்களில் அரசு பள்ளியில் 2001 டிசம்பர் 31க்கு முன்பு பணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடி முடித்தவர்களின் பெயர்களை மட்டுமே தலைமை ஆசிரியர் பணி மூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்பு பட்டியலில் சேர்க்கவில்லை.

எனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள், பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் என அறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும். தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை ஜி.எம்.அக்பர்அலி விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்.


பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு - பஸ் பாஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் சில அறிவுரைகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாலும் விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா புத்தகப்பை போன்ற அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்த இருப்பதாலும் மேற்கண்ட அரசின் நலத்திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட விவரம் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு உடனுக்குடன் தகவல் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதால்
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்  அனைவரும் எந்தவித முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்தல் கூடாது எனவும் தலைமையிடத்தைவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் முன்பு இயக்குநரிடம் தகவல் அளிக்காமல் செல்லக்கூடாது எனவும், CUG கைபேசியை எந்நேரமும் இயக்குனர் அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என  தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

10ம் வகுப்பு உடனடித்தேர்வு - தத்கால் திட்டத்தில் 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Action Research 2012-13- Process starts in BRC



Action Research - Model in Tamil

Action Research - Model in English

அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று உறுதிமொழி எடுக்க உத்தரவு.


தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 014002 / ஜே 3 / 2012, நாள்.    .6.2012 
ஆணையர் தொழிலாளர் துறை, சென்னை - 6 கடிதம் எண். ட்டி.2 / 12470 / 2012 நாள். 11.6.2012 
தொடக்கக் கல்வி - குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - 2012 - 12.06.2012 அன்று அனுசரிக்கப்பட உள்ள குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தன்று உறுதிமொழி எடுக்க உத்தரவு.
12.06.2012 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எடுத்துகொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி - கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் குறித்து விவரம் கேட்டல்.


பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.38287 / அ3பிரிவு / இ 1 / 2012, நாள். 4.6.2012 
நிர்வாகம் - தமிழ்நாடு அமைச்சுப் பணி - கண்காணிப்பாளர் பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல.
15.03.2012 அன்று  உள்ளவாறு மாவட்டக் கல்வி அலுவலர் / மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலங்களில் நேர்முக உதவியாளராக பதவி உயர்வு அளிக்க தேர்தோர் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக 15.03.2007 பட்டியலின்படி பிரிவுக் கண்காணிப்பாளர் பணி மாறுதல்   பெற்று பணி ஏற்றுள்ள தகுதி வாய்ந்த முறையான கண்காணிப்பாளர்களின் பெயர்ப்பட்டியலினை அனைத்து அலுவலகங்கள் சார்பாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளுக்கு சதுரங்க விளையாட்டு பலகை வழங்குவதற்கு பள்ளிகளின் விவரங்கள் கோருதல்.


தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 007436 / கே 2 / 2012, நாள்.  6. 2012 பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் தொடக்க / நடுநிலைப்பள்ளி  மாணவர்களுக்கு  சதுரங்க விளையாட்டு 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
எனவே மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, முறையான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, "அரசு / நகராட்சி / மாநகராட்சி நிர்வாகங்களின் கீழ் இயங்கும், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, தலா ஒன்பது முதுகலை ஆசிரியர் வீதம், 900 ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி அறிவித்தார்.
இதையடுத்து மாவட்ட வாரியாக, தரம் உயர்த்த வேண்டிய உயர்நிலைப் பள்ளிகள், அடையாளம் காணப்பட்டு அதற்கான இறுதிகட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகள் தரம் உயர்த்தியதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அரசாணை   . ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பணிநிரவல் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு


உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் நடத்துவதற்கு முன், பணிநிரவல் மூலம் சில காலியிடங்களை நிரப்ப, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பு: 13ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்


             இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி (D.EL.Ed) (D.T.Ed என்பது D.EL.Ed என்று மாற்றப்பட்டுவிட்டது) படிப்பிற்கு, ஜூன் 13ம் தேதி முதல், ஜூன் 26ம் தேதி வரை, 110 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

பொது மாறுதல்கள் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / அறிவியல் மற்றும் மழலையர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் - வரையறுக்கப்பட்ட படிவத்தில் விவரங்களை கோருதல்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 11649 / ஐ 2 / 2012, நாள். 05.06.2012 

2012 ஆம் ஆண்டிற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / அறிவியல் மற்றும் மழலையர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோர்களின் பொதுமாறுதல் கோரும் விண்ணப்பங்களையும், மேலும் 2012 - 2013 கல்வியாண்டில் ஓய்வுபெறும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவிர 
01.06.2012 அன்று உள்ளப்படி தொடர்ந்து ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை ஏற்கெனவே வழங்கப்பட்ட மாறுதல் படிவத்தில் தயாரித்து மாறுதல் கோரும் விண்ணபங்களை அன்று நேரில் தனிநபர் மூலம் இயக்ககத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

சத்துணவு பணியாளர்கள் நேரடி நியமனத்திற்காக கடைசி நாள்.20.06.2012 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு கடித எண். 7667 / 12 / ச. உ. தி நாள். 05.06.2012
சத்துணவு பணியாளர்கள் நேரடி நியமனத்திற்காக கடைசி நாள்.05.06.2012  லிருந்து 20.06.2012 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்..எண். 04404 / 1 / 2012, நாள். 05062012
அரசாணை(நிலைஎண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.09.2009அரசாணையின்படி தமிழாசிரியர்பட்டதாரி ஆசிரியர்,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் பதவி உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 + 2 + 3கல்வித் தகுதியில்லாமல்பல ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற்றிருப்பது தொடக்கக் கல்வி இயக்குனரின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டுள்ளதுஎனவே அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் விவரத்தினை இயக்குனருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வு - மண்டல அளவில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடத்துதல்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 013145 / டி 1 / 2012 , நாள்.    .06.2012
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் நேரடி சுற்றுபயணம் - மண்டல அளவில் மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான  ஆய்வுக்கூட்டம் நடத்துதல் சார்பாக மண்டல அளவிலான ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகள் சுற்றுபயணம் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
நாள். 05.06.2012 முதல் 08.06.2012

June - Admission Calendar-2012



விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றை காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.


ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 1 முதல் 7 வரை.

How to calculate BE Cut of? - Details


பிளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதாவது கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப் பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதுதான் கட் ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். அதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

LAW College - Admission Details


சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

University Of Madras IDE Online Hall Tickets Now Avail




UNIVERSITY OF MADRAS
INSTITUTE OF DISTANCE EDUCATION
Online Hall- ticket
UG Courses
MAY-2012 Examination

CourseIndividualExam center
PG (M.A.,M.Com.,M.Sc.)Enter Your ENROLMENT NO and get HallticketEXAM-CENTER
UG (All)Enter Your ENROLMENT NO and get HallticketEXAM-CENTER

IGNOU B.Ed Hall ticket June 2012 Term-End Examination.


டி.இ.டி. தேர்வு ஜுலை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு.


கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேதி மாற்றம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு: ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்" என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.

அண்ணா பல்கலை ஆன்லைன் விண்ணப்பம் பெற


அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் வழங்கும் முதுகலைப் பட்டப்படிப்புகளில் சேர ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையத்தில் எம்.பி.ஏ., எம்சிஏ., எம்.எஸ்சி. (ஐடி), எம்.எஸ்சி (கணினி) உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணமான ரூ.650க்கான டிடியை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பத்தினை பெற



 இங்கு சொடுக்கவும். www.cde.annauniv.edu/Downapp.aspx 

பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.



பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீதுஇனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வுபணி நீக்கம்டிஸ்மிஸ் ஆகியஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் எனதமிழக அரசு அறிவித்தது.

பாரதியார் பல்கலையின் எஸ்இடி தேர்வு முடிவு.


கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்திய மாநில  தகுதித் தேர்வு (எஸ்இடி)க்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் பதிவு எண்களை பாரதியார் பல்கலைக்கழகம் இணையதளத்திலும், நாளிதழ்களிலும் வெளியிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: சுயநிதி அரசு ஒதுக்கீடு கட்-ஆஃப்.


எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டும் கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளதால் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.  தமிழகத்தில் உள்ள 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,460 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆசிரியர் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தமிழக ஆணை வெளியீடு.


அரசாணை (டி1) எண். 158 பள்ளிக்கல்வித்(இ1)துறை நாள்.18.05.2012
 பள்ளிக்கல்வி -  2012 - 13 ஆசிரியர்  பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து  தமிழக ஆணை வெளியிட்டுள்ளது.
உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் செய்த பின்னரே பொது மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணி நிரவல் செய்யும் போது தொடக்கப்பள்ளிகளில் குறைந்தது இரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

Govt. Staff's General Transfer - Related Order

      1999 முதல் 2011 வரை இருந்த அரசு பணியாளர்களின் பொது மாறுதலுக்கான தடை ஆணை தற்போது விலக்கி கொல்ல படுகிறது - அரசு தலைமை செயலர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive