Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் TET தொடர்பான திருத்த அறிவிப்பு வெளியீடு
23.08.2010 முன்பே (அதாவது 22.08.2010 அன்றோ அதற்கு முன்போ ) ஒரு நபருடைய பணியமர்வுக்கான (அரசு, அரசு நிதி உதவி மற்றும் தனியார் பணி ) செயல்பாடு முறையான அறிவிப்பின் மூலம் தொடங்கி இருந்தால், அவருக்கு TET எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அந்நபர் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுஇருக்க வேண்டும்.
பிஎஸ்சி மாணவர்கள் எம்இ படிக்கலாம்!
பிஎஸ்சி படித்த மாணவர்கள் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு எம்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (பிட்ஸ்) கல்வி நிறுவனத்தின் ஹைதராபாத் வளாகம். இளநிலை அறிவியல் பட்டப் படிப்பை படித்து எம்இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
பட்டதாரிகள் சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு இல்லை!
பட்டதாரிகள் சி.ஏ. படிக்க விரும்பினால் இனி நுழைவுத் தேர்வு (Common Proficiency Test-CPT) எழுதத் தேவையில்லை. நேரடியாகவே சி.ஏ. படிக்கலாம் என்ற நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
TNPSC குரூப்-4 நன்றாகத் தேர்வு எழுதுங்கள்! வேலை நிச்சயம்!
பொன். தனசேகரன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வை நன்கு எழுதுபவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். வெளிப்படையான நிர்வாகத் தன்மையை தேர்வாணையம் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறார் தேர்வாணையத்தின் தலைவர் ஆர். நட்ராஜ்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வை நன்கு எழுதுபவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். வெளிப்படையான நிர்வாகத் தன்மையை தேர்வாணையம் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறார் தேர்வாணையத்தின் தலைவர் ஆர். நட்ராஜ்
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I in Government Higher Secondary School for the year 2011 - 12
Teachers Recruitment Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Direct Recruitment of Post Graduate Assistants / Physical Director Grade - I in Government Higher Secondary School for the year 2011 - 12
I. List of Admitted candidates - 150740
2. Subject-wise list of candidates admitted for the examination
Date of Examination: 27.05.2012 Timing: 10:00 A.M to 01:00 P.M
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Dated: 19-05-2012
|
Chairman
|
11432 அங்கன்வாடி காலி பணியிடங்கள் நிரப்ப அரசு ஆணை
கல்வித் அரை தகுதி பத்தாம் வகுப்பு, வயது வரம்பு 25 முதல் 35 வரை. அங்கன்வாடி பணியாளர் , குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்உதவியாளர் என மூன்று வித பணியிடங்களுக்கு 11432 பேர் தேர்ந்தெடுக்க பட உள்ளனர் .
|
பள்ளிக்கல்வித்துறை - வேலூர் மாவட்டம் - பயிற்சி எடுப்பவர் - தொழிற்கல்வி பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 25701/வி/வி1/2012, நாள். 03.04.2012.
பள்ளிக்கல்வித்துறை - வேலூர் மாவட்டம் - பயிற்சி எடுப்பவர் (APPRENTICES) - தொழிற்கல்வி பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நாள் : 30.05.2012 நேரம் : காலை - 10.00 மணிக்கு
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி நடத்திய குரூப் 1 - சர்வீஸ் முதன்மைநிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜுலை மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னையில் முக்கிய எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.தேர்வு குறித்த விவரங்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி ஜூன் 3-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பேட்டி.
டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில், எவ்வித மாற்றமும் கிடையாது" என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு(டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.
எனவே, ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும்; இதில், எவ்வித மாற்றமும் கிடையாது. ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 54 பேர், தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு, "ஹால் டிக்கெட்" தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், அனைத்து தேர்வர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படும்; இணையதளத்திலும் வெளியிடப்படும்.
வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்" கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை வைத்தே, தேர்விலும் பங்கேற்கலாம்.
முதுகலை தேர்வு: வரும் 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்கிறது. இதே நாளில், ரயில்வே தேர்வும் நடப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி விசாரித்ததில், ஐ.டி.ஐ., - பி.எஸ்சி., பாலிடெக்னிக் போன்ற கல்வித் தகுதி உடையவர்களுக்கான தேர்வுதான் அன்று நடக்கிறது.
அத்தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எனவே, முதுகலை ஆசிரியர் தேர்வு, 740 மையங்களில் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வு குறித்தும், தேர்வு செய்யப்படும் முறை குறித்தும், தவறான தகவல்களை யாராவது பரப்பினால், அதை தேர்வர்கள் நம்பக்கூடாது.
தேர்வு, நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும். தகுதி அடிப்படையில்தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, இந்த விஷயத்தில் தேர்வர்கள் உஷாராக இருக்க வேண்டும். டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரத்து 343 பட்டதாரி ஆசிரியர்களும், 5,451 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவர்.
விடைகள் வெளியீடு: தேர்வர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. விடைத்தாளுடன் சேர்த்து மற்றொரு விடைத்தாள் வெற்று நகல் வழங்கப்படுகிறது. விடைகளை குறிப்பிடும்போது, அது நகலிலும் பதிவாகும். தேர்வு முடிந்து, முடிவுகள் வெளியிட்டதும், இனி விடைகளை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
ஜூன் இறுதிக்குள் தேர்வு முடிவுகள்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இந்தத் தேர்வுகளை வெளிப்படையாக நடத்தும் வகையில் விடைகள், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார் சுர்ஜித் கே. சௌத்ரி.
ஜூன் இறுதிக்குள் தேர்வு முடிவுகள்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இந்தத் தேர்வுகளை வெளிப்படையாக நடத்தும் வகையில் விடைகள், தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார் சுர்ஜித் கே. சௌத்ரி.
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்க மேலும் 6 நாள்கள் நீட்டிப்பு.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் ஜூன் 6ம் தேதி வரை பெறப்படும் என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்ளை சமர்பிக்க வரும் 31ம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 6 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
CEO's & DEO's Transfer
CEOs Transfer தொடர்ந்து DEOs பணியிட மாற்றம் விரைவில் ஆணை வெளி இடப்படும் என தெரிகிறது. அனேகமாக திங்கள் கிழமை ஆணை வழங்க படலாம் .
சத்துணவு மைய காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்
சத்துணவு மையங்களில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல்(மே 18ம் தேதி) வழங்கப்படுகிறது.
பிளஸ்2 மாணவர்களுக்கு மே 27ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 22ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதனை அடுத்து 27 ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்கு முன்பாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் வசதிக்காக தினமணி.காம் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்கு முன்பாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளிலேயே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் வசதிக்காக தினமணி.காம் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வை அணுகுவது எப்படி?
தமிழக அரசு நடத்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், இத்தேர்வை எழுத 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை எளிதாக அணுக உதவும் வகையில் சில ஆலோசனைகள் இங்கே:
முதன்மைக் கல்வி அலுவலர்கள் 20 பேர் அதிரடி மாற்றம்
பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும், சி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ.,க்கள், பணியிட மாற்றப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரெகுலர் (பள்ளிக் கல்வித்துறை) சி.இ.ஓ., பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் சி.இ.ஓ., பணியிடங்களில், 23 இடங்கள் காலியாக இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பல அதிகாரிகள், கூடுதலாக ஒரு பொறுப்பையும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர்களில், பணிமூப்பு அடிப்படையில், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு அளித்து, காலியாக உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகள் திறப்பதற்குள், பணியிடங்களை நிரப்பினால் தான், மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பட்டதாரி, முதுகலை பட்டதாரி , உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமையாசிரியர் பதவியுயர்வு பட்டியல் மற்றும் ஆசிரிய பயிற்றுனர் to பட்டதாரி, முதுகலை பட்டதாரி to BRC மேற்பார்வையாளர் பணி மாறுதல் பட்டியல்
Conversion:
HM Panel
:
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தங்கள் வசதிகாக வெளியிடப்படுகிறது. முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங்கள் சுய விவரத்தில் திருத்தம் இருந்தாலோ அல்லது உங்கள் பெயர் விடுபட்டு இருந்தாலோ அதற்கு இந்த இணையதளம் பொறுப்பல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம். இது முற்றிலும் சேவை அடிப்படையில் வழங்கப்படுகிறது .
இங்கே வெளியிடப்படும் முன்னுரிமைப் பட்டியல் தற்காலிகமானதே என்றும் திருத்தம்,சேர்த்தல் மற்றும் நீக்கலுக்கு பிறகு பள்ளிக்கல்வி த்துறையால் வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். திருத்தப்பட்ட பட்டியல் பதவி உயர்வு கலந்தாய்வு அன்று ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பதவி உயர்வு கலந்தாய்வு தேதி பின்னர் நம்முடைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை பட்டியல் :
முதுகலை பட்டதாரி முன்னுரிமை பட்டியல்:
2.ஆங்கிலம்
4. அறிவியல்
5. Economicsவெவ்வேறு பாடம்
6.Political Science
7.Geography
வெவ்வேறு பாடம்
8.History
9.commerce
பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர் காலியிடங்கள் விபரம் சேகரிப்பு.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடர்பான விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தியுள்ள நிலையில், பள்ளிவாரியாக உபரி ஆசிரியர், காலியிடங்கள் தொடர் பான விபரங்கள் சேகரிக்கும் பணியில் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு சேர்க்கை: மே 21 முதல் விண்ணப்பம்
வரும் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாகச் சேர்வதற்கு மே 21-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.