Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில்...பிறந்த தேதியின் அடிப்படையில் உரிய வகுப்பில் சேர்த்திட வேண்டுதல் சார்பு செயல்முறை

      பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் பொழுது 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களிடம் மாற்றுச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில்...பிறந்த தேதியின் அடிப்படையில் உரிய வகுப்பில் சேர்த்திட வேண்டுதல் சார்பு செயல்முறை

பள்ளி செல்லாத குழந்தைகள் 'உபாசி'யுடன் விவரம் சேகரிப்பு

         பள்ளி செல்லாத, தோட்டத் தொழிலாளர் குழந்தைகள் பற்றிய விவரத்தை, தென்னிந்திய தோட்ட அதிபர்களின் சங்க (உபாசி) உதவியுடன் சேகரிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

சுயநிதி பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு கே.ஜி., - முதல் வகுப்பு வரை மட்டுமே

         தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கே.ஜி., முதல் ஒன்றாம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்கலாம் என, மெட்ரிக்., பள்ளிகள் இயக்குனரகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

பள்ளி விடுதிகளில் 'நூடுல்ஸ்'க்கு தடை

       பள்ளி விடுதிகள் மற்றும் கேன்டீன்களில் நுாடுல்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
 

அரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது-உயர் நீதிமன்ற மதுரை கிளை

        அரசு வேலைவாய்ப்பில், வயது வரம்பு சலுகை காட்ட முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேனி, பெரியகுளம், கெங்குவார்பட்டியைச் சேர்ந்த கனி என்பவர் தாக்கல் செய்த மனு:
 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை இல்லை

        இலவச மாணவர் சேர்க்கைக்கான, 25 சதவீத இட விவரங்களை, மெட்ரிக் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியல் இடம் பெறவில்லை. இந்த பள்ளிகளின் பட்டியல் வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் கணவர் விபத்தில் இறந்ததால், கூடுதல் இழப்பீடு தொகை தரவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த மல்லிகா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.


கலை, அறிவியல் கல்லூரிகளில் முன்தயாரிப்பு பயிற்சி வகுப்பு ரத்து?

      பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படுவதுபோல, கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த உயர் கல்விக்கான முன்தயாரிப்பு வகுப்பான "பிரிட்ஜ் கோர்ஸ்' ரத்து செய்யப்பட்டிருப்பதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதரவற்ற சிறுவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் விலக்கு அளித்து உத்தரவு: பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை

      ஆதரவற்ற சிறுவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ், புகைப்பட சான்றிதழ், முகவரி சான்றிதழ் உள்ளிட்டவைகளை கட்டாயமாகசமர்ப்பிக்க வேண்டும்.
 

ஏர்டெல் இணைய கட்டணம் உயர்வு

      இணைய தள வழியாக ரீச்சார்ஜ் செய்யும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் இன்‌டர்நெட் டேட்டா கட்டணம் அதிகரித்துள்ளது. ஏர்டெல் இணைய தளத்தில் டேட்டா ரீச்சார்ஜ் செய்யும்போது இதுவரை வழங்கப்பட்டு வந்த தள்ளுபடியை அந்நிறுவனம் ரத்து செய்திருக்கிறது.
 

நூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்!

       “இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விஷயத்தை வைத்து ஒரு கதாநாயகனாகவோ ஊடக வெளிச்சத்தின் முன் தர்மசங்கடமாக உணரவோ நான் விரும்பவில்லை” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் 40 வயது நிரம்பிய அந்த மனிதர். அவர் பெயர் வினீத் குமார் பாண்டே. சுருக்கமாக வி.கே. பாண்டே. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி.

அரசு அங்கீகாரம் பெறாத 72 தனியார் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு

       பெங்களூருவின் வடக்கு, தெற்கு கல்வி மண்டலங்களில் உள்ள, அரசு அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, கர்நாடகா பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், 72 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் பாதுகாப்பு

        கோவை மாவட்டத்தில், தொடக்க கல்வித்துறையின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதி இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

176 சி.எம்.டி.ஏ., பணியிடங்களுக்கு 22 ஆயிரம் பேர் விண்ணப்பம்

       சி.எம்.டி.ஏ.,வில் 176 பணியிடங்களுக்கு, 22,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். தொழில்நுட்ப கல்வி தகுதி அடிப்படையில், 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என, கூறப்படுகிறது.சி.எம்.டி.ஏ.,வில், சில ஆண்டுகளாக காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்தன.


ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு பெறுங்கள்!

        ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில்அதிக அளவு வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் ‘மேகி நூடுல்ஸ்’ ன் விற்பனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை வரும் நிலை உருவாகி உள்ளது.

அதிக சம்பளம் பெறும் சி.இ.ஓ., பட்டியலில் இந்திரா நூயிக்கு 5ம் இடம்

      அமெரிக்காவில் அதிகம் சம்பளம் பெறும் 200 சிஇஓ (தலைமை செயல் அதிகாரி) களில் வெறும் 13 பேர் மட்டுமே பெண்கள். அந்த 13 பெண்களில் இந்தியரான இந்திரா நூயி 5 வது இடத்தில் இருக்கிறார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் CRC & BRC பயிற்சி.

        அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) வாயிலாக, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி, நடப்பாண்டு முதல், அனைத்து ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

5% பி.எஃப் தொகை பங்குச் சந்தையில் முதலீடு

  வருங்கால வைப்புநிதி 5%பங்குத்தொகை முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்

பொம்மைகளை வைத்து பாடம் நடத்தும்அரசுப்பள்ளி ஆசிரியர் .



     நாம் மறந்துவிட்ட பாரம்பரிய கலைகளில் பொம்மல்லட்டாமும்  ஒன்று .அதைமீட்டெடுத்து பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் உரமூட்டி வருகிறார் அரசு பள்ளிஇடைநிலை ஆசிரியரான தாமஸ் ஆண்டனி .
 

மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை : பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

     ஆசிரியர்கள் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் உகந்ததாக ஆடை அணிய வேண்டும். மாணவிகளை தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. தொந்தரவு செய்வது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் விடுத்துள்ள சுற்றறிக்கை:
 

தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் முறை

      அதேஇ - பத்தாம் வகுப்பு சிறப்பத் துணைத்தேர்வு - 09/06/2015 மற்றும் 10/06/2015 ஆகிய நாட்களில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் முறை - இயக்குனர் செயல்முறைகள் 

மாணவர்களுக்கு சத்துணவு சாப்பிடும் முன் கை கழுவ வசதியாக சோப்பு தர உத்தரவு

        சத்துணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கை கழுவ வசதியாக, கட்டாயம் சோப்பு வாங்கி வைக்கவும், சாப்பிடுவதற்கு துருப்பிடிக்காத, ஸ்டீல் தட்டுகள் வாங்கி வைக்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் மற்றும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive