அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு
'ஸ்மார்ட்' கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ் அட்டை வழங்கும் திட்டத்தை
கைவிட்டு, பழைய முறையை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
2nd Mid Term Exam 2024
Latest Updates
பி.எப். பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி வசூலிக்கப்படும்
5
ஆண்டு காலத்துக்கு குறைவான அளவில் பணிக்காலத்தை நிறைவு செய்து, பி.எப்.
பணத்தை திரும்பப்பெறும் போது 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும்
என்று உயர் அதிகாரி கூறியுள்ளார்.
தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி
தொடக்கக்
கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால
அவகாசம் வியாழக்கிழமையோடு (ஜூன் 4) முடிவடைகிறது. மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது.
தனியார் பள்ளிகளில் 'டல்' மாணவர்கள் வெளியேற்றம்
ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை,
குறைந்த மதிப்பெண் பெறும், 'டல்' மாணவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யும்
பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.
பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்புகளான
ஏழு, எட்டு, 10 ஆகிய வகுப்புகளில் சேர, மாணவ, மாணவியர் வந்த வண்ணம்
உள்ளனர். பல பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க
அனுமதிக்காததால், மாணவர்களின் பெற்றோர், கல்வித் துறை அதிகாரிகளின்
சிபாரிசுக்காக, கல்வி அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மாணவர் இல்லாத 250 அரசு பள்ளிகளுக்கு பூட்டு?கே.ஜி., வகுப்பு துவங்கி மாணவர்களை ஈர்க்க திட்டம்
மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்கப்
பள்ளிகளில், சென்னை மாநகராட்சி போல், கே.ஜி., வகுப்புகளைத் துவங்க,
தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டமிட்டு உள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைந்த
பள்ளிகளை, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டு
உள்ளது.தமிழகத்தில், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தால், அரசு தொடக்கப்
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் எப்போது?
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி.,யில்
சேர்வதற்கான நுழைவு தேர்வு முடிவு மற்றும் தரவரிசைப் பட்டியல் வரும், 18ம்
தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் அண்ணா
பல்கலையின் இணைப்புக் கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிக்க, அண்ணா பல்கலையில்
விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளில்
சேர, ஜே.இ.இ., எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
ஒரே பள்ளி, ஒரு பாடப்பிரிவு இரு வேறு கட்டணங்கள்? விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம்
கட்டணப் பிரச்னைக்கு உள்ளான அடையாறு பால
வித்யா மந்திர் பள்ளி குறித்து விசாரணை நடத்த, சிறப்பு அதிகாரியை
நியமித்து, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சிங்காரவேலு
பரிந்துரையின்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை இந்த நடவடிக்கை
எடுத்துள்ளது.
மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை 10ம் தேதிக்குள் வெளியிடக் கூடாது: உச்ச நீதிமன்றம்
சிபிஎஸ்இ
நடத்திய அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(ஏஐபிஎம்டி) முடிவுகளை ஜூன்
10ம் தேதி வரை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் மாத இறுதிக்குள் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவு
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், அரசு
கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் எம்சிஏ, எம்பிஏ
மற்றும் எம்இ, எம்டெக், எம்பிளான் இடங்களை நிரப்பும் வகையில் கடந்தமே
16,17-ம் தேதிகளில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது
.
3 அரசுப் பள்ளிகள் தற்காலிகமாகமூடல்
பொள்ளாச்சியில் மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைந்ததாகக் கூறி,
இரண்டுநகராட்சி தொடக்கப் பள்ளிகளும், காரமடை பகுதி அரக்கடவு என்ற
கிராமத்தில் ஒரு பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Primary & Upper Primary CRC (Tentative)
SSA – Quality initiatives – CRC level training – Discussion
on Children’s achievements and plan of action for 2015 -16 CRC LEVEL TRAINING
CRC Training District level 16.06.15 & 17.06.15
primary CRC Training -20.06.15
Upper Primary CRC - 27.06.15..
(This is Expected News Only)
(This is Expected News Only)
திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி: ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? - காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள்
ஆசிரியர் கல்வி (பி.எட்.) படிப்பை
2 ஆண்டுகளாக உயர்த்தும் தேசிய ஆசிரியர் கல்வி
கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு
நடைபெறும் சூழலில்,
ஓராண்டு பி.எட். படிப்பு
இந்த ஆண்டு
தொடருமாஎன்று
கல்வியியல் கல்லூரிகள் எதிர்பார்த்துக்
காத்திருக்கின்றன.
SSA - CRC State level level training
SSA – Quality initiatives – CRC level training – Discussion on Children’s achievements and plan of action for 2015 -16 – State level training- Deputation of participants -reg.
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு - தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 4, 5-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்
ஊதிய பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தடை ஏன் ?
தமிழ் நாட்டில் ஆசிரியர் மற்றும் அரசுழியர்களுக்கு 6 வது ஊதிய குழு
முரண்பாடுகளை தீர்ப்பதற்கு 2010 ல் திரு . ராஜிவ் ரஞ்சன் .இ.ஆ.ப.அவர்கள்
தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது . அதிலும் பலவேறுபட்ட முரண்பாடுகள்
ஏற்பட்டது. அதை தீர்க்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு படி 2012 ல் திரு
.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 3 நபர் குழு அமைக்க பட்டது .
தமிழக பெற்றோர்களே தயவு கூர்ந்து 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் உங்கள் பணம் உங்கள் கல்வி மறுக்க படுவதன் உண்மை நிலை !!!!!!
இன்று தமிழகத்தில் கவுரவமாக கருதபடுவது படிப்பு அதை எம் மகனையோ மகளையோ நான் பெரியகல்வி நிறுவனத்தில் படித்தால் கவுரவம் என நினைக்கும் பெற்றோகளே சிரிதுசிந்தியுங்கள் !!!
தமிழகத்தில் 13 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
தமிழகம் முழுவதிலும் 13 முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 2 ஆண்டுகளுக்கும்
மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம்
செய்து பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம்
செய்யப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விவரம்
நியமன ஆணைக்கு காத்திருக்கும் உதவிப் பேராசிரியர்கள்
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி
பேராசிரியர்பணியிடங்களுக்காக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இதுவரை பணி நியமன
ஆணை கிடைக்காததால், செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.
புகை, மதுவால் சீரழியும் மாணவர்கள்! கல்வித்துறை நடவடிக்கை அவசியம்
பள்ளி மாணவர்கள் இடையே
சிகரெட், மது, போதை பாக்கு உட்கொள்ளும் தீய பழக்கங்கள் அதிகரித்து
வருகின்றன; மாணவ சமுதாயத்தை காப்பாற்ற, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பதிவுக்கு தேசிய தகுதித்தேர்வு:மத்திய அரசு முடிவுக்கு டாக்டர் சங்கம் எதிர்ப்பு
'எம்.பி.பி.எஸ்., படிப்பை பதிவு செய்ய தேசிய தகுதித் தேர்வில் வெற்றி
பெற வேண்டும் என்ற நடைமுறை தேவையில்லாதது; மருத்துவ பல்கலை தேர்வு முறையை
கேலிக்கூத்தாக்கும் செயல்' என டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ்., முடித்த மாணவர்கள் 'எக்சிட்'
தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பதிவு செய்து சிகிச்சை அளிக்க முடியும்
என்ற நடைமுறை இந்தியாவில் உள்ளது.
'பஸ் பாஸ்' வழங்குவதில் இ.எம்.ஐ.எஸ்., திட்டம் 'பணால்'
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முறை குறித்து, நாளை நடைபெறவுள்ள போக்கு வரத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழக அரசு, 1ம் வகுப்பு
முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்குகிறது.
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்ததும், தலைமை ஆசிரியர்கள் பஸ் பாஸ்
வாங்கிக் கொடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் கடந்த மாதமே உத்தரவிட்டனர்.
எஸ்பிஐ வட்டி குறைப்பு
பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15%
குறைத்துள்ளது.9.85 சதவிகிதத்தில் இருந்து 9.7 சதவிகிதமாக வட்டி
குறைக்கப்பட்டுள்ளது.
தேர்வுப்பட்டியல் வெளியீடு
162 உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வுப்பட்டியலை வெளியிட்டது
டிஎன்பிஎஸ்சி.தேர்வுப்பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்
காணலாம்.உரிமையியல் நீதிபதிகளுக்கான எழுத்துத்தேர்வை கடந்த நவம்பரில் 9,337
பேர் எழுதினர்.சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்குப் பின்
தேர்வானோர்பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.