சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வில், தமிழக மாணவர்கள், 99.76 சதவீதம்
தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை மண்டல அளவில், தேர்ச்சி அளவு, 99.03சதவீதமாக
உள்ளது.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 2ம் தேதி முதல்,
26ம் தேதி வரை நடந்தன; நாடு முழுவதும், 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இதன் முடிவுகள், மே 27ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. ஒருநாள்
தாமதமாகி, நேற்று வெளியிடப்பட்டது.
2nd Mid Term Exam 2024
Latest Updates
நீக்கப்படுகிறது சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு? அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பல்கலைக்கழகம்
சட்டப் படிப்புகளுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வரும் வயது உச்ச வரம்பை
நீக்குவது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கான அரசு அனுமதி கிடைத்தவுடன், சட்டப் படிப்புக்கான மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு
அனுமதி கிடைக்கும் பட்சத்தில், எந்த வயதினரும் சட்டப் படிப்புகளில் சேரக்
கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
28.5.2015
- Lab Asst Study Material | Model Question and Answers 5 [Botony] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 6 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 7 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 8 [Zoology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 9 [Biology] (Tamil Medium-PDF Download) - Click Here
- Lab Asst Study Material | Model Question and Answers 10 [General Knowledge] (Tamil Medium-PDF Download) - Click Here
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
27.5.2015
Prepared by Mr. M.VENKATESAN M.Sc.,M.A.,B.Ed B.T.Asst(Science) GHS Chandrapuram 635 651 cell 9976959785பள்ளிக் குழந்தைகள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை: ராமதாஸ்
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் இந்த
ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அரசுப் பள்ளிகள் திறப்பை 2
வாரங்கள் ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
குரூப் 1 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் 1 முதன்மை தேர்வுகள் ஜூன் 5,6,7 தேதிகளில் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டள்ளது. இந்த மூன்று நாட்களில், சென்னை மையத்தில் மட்டும்
முற்பகலில் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதி கடைசி நாள்
ஐஏஎஸ்,
ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் கேடர்களில் நியமனத்திற்கான
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்துகின்ற சிவில் சர்வீஸ் தேர்வுக்கு
விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. 2015 ஆகஸ்ட் 23ம் தேதி முதல்கட்ட தேர்வு
நடைபெற உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். வரும்
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிரதான தேர்வுக்கு விண்ணப்பம் பெறப்படும்.
BRT Transfer Regarding...
ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு - 27.05.2015
A R G T A - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
A R G T A - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி
ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச்
செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட
இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)
திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன்
வைத்தனர்.
பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?
வீட்டில் பத்திரமாக இருக்கும்
பள்ளிச் சான்றிதழ்கள்,
மதிப்பெண் பட்டியல்கள்
இவற்றை சில
சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது
நேர்காணல் போன்ற
காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம்.
இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி
இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள
நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை,
பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.
எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, போலீஸ்
எஸ்.ஐ., தேர்வில், இருவருக்கு மட்டும், தனி அறையை கொடுத்து, தேர்வெழுத
வைத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, டி.ஐ.ஜி.,
விசாரணை நடத்த வேண்டும் என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்து உள்ளனர்.
'சர்வேயர்' பணியிடங்களில் 60 சதவீதம் காலி
நில அளவைத்துறையில், 60 சதவீத, 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், நில அளவைப்பணி முடங்கி உள்ளது.
கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டு அரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்
தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப்
பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க நோட்டீஸ் அச்சிட்டு விளம்பரம் செய்யும்
நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி
வருகின்றன.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28)
வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.