2nd Mid Term Exam 2024
Latest Updates
பாஸ் ஃபெயில் என்ற முறை வேண்டாமே
அச்சம் என்பது
மடமையடா என்பதற்கேற்ப குழந்தைகளை பயம் அறியாமலும், பயம் இல்லாமலும் வளர்க்க வேண்டும்.
ஆனால் அவர்களை பயமுறுத்தும்படி அமைவதுதான் தேர்வு. காரணம் பாஸ், ஃபெயில் என்ற முறைதான்
அந்த பயத்தை ஏற்படுத்துகிறது.
ரஷியாவில் கல்வி பயில விருப்பமா? வழிகாட்டும் ரஷிய கல்விக் கண்காட்சி
ரஷியாவில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும், ரஷிய கல்விக்
கண்காட்சி சென்னையில் மே 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் சனிக்கிழமை தொடங்கிய
இந்தக் கண்காட்சியை தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதர் செர்கெய்
எல்.கோடாவ், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் ஆகியோர்
தொடக்கி வைத்தனர்.
அரசு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப சட்ட திருத்தம் வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை.
அரசு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், இடஒதுக்கீடு விதிகளுக்குட்பட்டு
நிரப்புவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பாமக
நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கார்பன் - டை - ஆக்சைடு அதிகரிப்பால் சுற்றுச்சூழலுக்கு எச்சரிக்கை மணி: கட்டுப்படுத்தாவிட்டால் மோசமான விளைவு ஏற்படும்.
பூமியின் காற்று மண்டலத்தில், கார்பன் - டை - ஆக்சைடின் விகிதம் வரலாறு காணாத உச்சத்தை சமீபத்தில் எட்டியுள்ளது. 'இதை கட்டுப்படுத்தாவிட்டால்,
அடுத்த, 10 ஆண்டுகளில், புயல், கடுமையான வெப்பம், வறட்சி போன்ற பேரிடர்
ஏற்படலாம்' என, சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்ஜி., படிப்புக்கு 4 நாட்களில் 1.30 லட்சம் விண்ணப்பம் விற்பனை!
அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிப்புக்கு, 1.30 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட பொறியியல்
கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விற்பனை, மே, 6ம் தேதி
துவங்கியது.
66 உதவி பேராசிரியர் பணியிடங்கள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு கல்லூரிகளில்
நிரப்பப்பட உள்ள 66 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு
பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல்,
வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண்
நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல்
ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும்.
பிளஸ் 2: 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும்
குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு
நோட்டீஸ் அனுப்பப்படும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.
போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்
முப்பதைத் தாண்டியவர்களா நீங்கள்? அப்படி யென்றால், உங்களில்
பெரும்பாலானோருக்கும் இப்படிப்பட்ட பள்ளிப் பருவம் வாய்த்திருக்கும். காலை
8.30. இட்லியைப் பிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருப் பீர்கள். வாசலிலிருந்து
குரல் கேட்கும், “ஏய், மணிமாறா வாடா. பள்ளியோடத்துக்கு லேட்டாவுது.”
உங்களோடு மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் குமாரின் குரல்தான்
அது.
எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?
மருத்துவத்தை அடுத்து மாணவர்களை அதிகம்
வசீகரிக்கும் துறை என்றால் அது பொறியியல்தான். முன்பு பொறியியல்
சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இப்போது தமிழகத்தில்
நுழைவுத்தேர்வு இல்லை. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று +2வில் தேர்ச்சி
பெற்றாலே, கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து விட
முடியும். ஆனால் எல்லோருக்கும் பொறியியல் படிப்பு பொருந்துமா...?
எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் விண்ணப்பம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்.
படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல்
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
9, 10ம் வகுப்புகளுக்கு இலவச 'அட்லஸ்' புத்தகம்
தமிழகத்தில்,
தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச,
'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், ஒன்பது மற்றும்
10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச பொருட்கள்
வழங்கப்படுகின்றன. இதில், 'அட்லஸ்' புத்தகம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு
வரை மட்டுமே வழங்கப்பட்டது.
மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பேருந்து பயண அட்டை திரும்பப் பெறப்படும்
பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பேருந்து
படிக்கட்டுகளில் பயணம் செய்தால் அவர்களது இலவச பேருந்து பயண அட்டை
திரும்பப் பெறப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஜூன் 19ல் மாணவர் தர வரிசைப்படி கல்லூரி பட்டியல் வெளியீடு
''கவுன்சிலிங்கில் முடிவெடுக்க வசதியாக,
கடந்த ஆண்டில் மாணவர் தர வரிசைப்படியான கல்லூரிகள் பட்டியல், ஜூன், 19ம்
தேதி வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை
செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூலம் கட்டாயமாகிறது 'ஆதார்'
பள்ளிகள் மூலம், 'ஆதார்' எண் பதிவு செய்வதை,
கட்டாயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு, 'ஆதார்' எண் உருவாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து,
மாணவ, மாணவியர், 'ஆதார்' எண் அளிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள்
அறிவுறுத்தி உள்ளன.
கலை, அறிவியல், அக்கவுன்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு உயர்வு: இன்ஜினியரிங், மருத்துவ படிப்புக்கு இணையாக அதிகரிப்பு
பி.இ., - பி.டெக்., மற்றும் மருத்துவப்
படிப்புகளுக்கு ஈடாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகள் இந்த ஆண்டு
முன்னணிக்கு வந்துள்ளன. இதற்கான கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற
அளவுக்கு, மாணவ, மாணவியரின் கவனம் புதிய திசை நோக்கி திரும்பியுள்ளது.
ஓய்வூதியம், 2 காப்பீட்டுத் திட்டங்கள் மோடி தொடங்கி வைத்தார்
ஒரு ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2 காப்பீட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது மே 11-ல் தீர்ப்பு: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் மேல்முறையீட்டு மனு
மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளியாகும் என அதிகாரபூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர்
வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு
மனுக்கள் மீதான தீர்ப்பு, வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய தமிழகம்கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி.,MD.,MLA அழைப்பு..!
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கு உரிய இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலை
வெளியிடாத தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை
கண்டித்து விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: திருவள்ளூர் மாவட்டத்தில்மே 19-க்குள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கடைசி
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள
அனைத்துதனியார் சுயநிதி பள்ளிகளிலும் (சிறு பான்மை பள்ளிகள் தவிர்த்து)
மாணவர்களை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், வரும் 19-ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண் டும்.
தட்டச்சு தேர்வு முடிவுகள் மே 11-ல் வெளியாகும்
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தட்டச்சு தேர்வு முடிவுகள் மே 11-ம் தேதி
(திங்கள்கிழமை) வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக
அதிகாரிகள் தெரிவித்தனர்.