'புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி
நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு
பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக
தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.
2nd Mid Term Exam 2024
Latest Updates
அரசு டாக்டர் பணிக்கான போட்டி தேர்வு ரத்து
இன்று நடக்க இருந்த, அரசு டாக்டர்கள் நியமனத்திற்கான போட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், ரத்து செய்து உள்ளது.
Cell Phone: What is the difference between 3G & 4G? - அலைபேசி கட்டுரை 2
G-க்கள் என்றால் என்ன?
தொலைபேசியில் நம் ஒலி சைகைகள் (சிக்னல்கள்) மின்
சைகைகளாக மாற்றப்பட்டு ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.
மறுமுனையில் மீண்டும் மின் சைகைகள் ஒலி சைகைகளாக மாற்றப்படும்.
சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு.
சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு |அறிவியல் தொழில் ஆராய்ச்சி
கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கடந்த ஜூன் 22-ம் தேதி நடத்திய ‘நெட்’ தகுதித்
தேர்வு மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜேஆர்எப்) முடிவு
வெளியிடப்பட்டது.
Cell Phone Technology Doubts | அலைபேசி சந்தேகங்கள்! - பாடசாலையின் புதிய பகுதி.
அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம். நமது பாடசாலை வலைதள வாசகர்களுக்காக Cell Phone, Tablet தொழில்நுட்பங்கள் சார்ந்த கட்டுரை தொடர்ந்து வெளியிட உள்ளோம்.
நம் பாடசாலை வாசகர்களுக்காக இக்கட்டுரையை தொழில்நுட்ப வல்லுனர் திரு.பா. தமிழ் அவர்கள் பிரத்யோகமாக எழுத உள்ளார். இக்கட்டுரையில் அடிப்படை தொழில்நுட்பம் முதல் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வரை எளிய தமிழில் விளக்க உள்ளார். தொடர்ந்து அலைபேசி மற்றும் டேப்ளட் கணிணி சார்ந்த வாசகர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்க உள்ளார். எனவே பாடசாலையின் வாசகர்கள் இப்புதிய பகுதி தொடர்பான தங்கள் சந்தேகங்களை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பதிவு செய்யலாம். அவற்றிற்கும் தொழில்நுட்ப வல்லுனர் தனது கட்டுரையில் பதில்களை பகிர்வார்.
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படும்?
பிறை சரியாக தெரியாததால் அக்டோபர்
6 ஆம் தேதி கொண்டாடப்படும் என
தலைமை காஜி அறிவித்துள்ளதாக தெரிகிறது.ஆகவே அக்டோபர் 6 ஆம் தேதி தமிழக
அரசு விடுமுறை அறிவிக்கலாம் என எதிபார்க்கப் படுகிறது.
PG TRB Exam விரைவில்...
தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை
பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900
முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட
உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி
உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில்,
ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன்
தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி 5 வழக்குகள் பதிவு
2004 முதல் 2006 வரை தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு
TET : வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5
சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது
என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
ஐகோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண்
பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான
தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தமிழக அரசு
குறைத்தது.
B.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்று பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (செப்.24)
நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சலுகை விலையில் அம்மா சிமெண்ட்: ஜெயலலிதா அறிவிப்பு!!
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும்
வகையில், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு, அம்மா
விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிச்
செயல்படுத்தி வருகிறது எனது தலைமையிலான அரசு.
100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை
100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு முதன்மை செயலாளர் சபிதா
முதுகலை ஆசிரியர்களுக்கு 7 மாவட்டங்களில் பயிற்சி
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை ஆசிரியர்களுக்கு மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும் அக்.,1ல் பயிற்சிகள்
நடக்கின்றன.
டிஇடி வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்தது ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு
நடத்தப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த
1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பணி நியமன கவுன்சலிங் நடந்தது. இதற்கிடையே,
வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்ற கிளையில்
பட்டதாரிகள் சிலர் வழக்கு தொடர்ந்து தடை கேட்டனர்.
புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு
புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம்
விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன
உத்தரவுகள் வழங்கப்பட்டன.
தரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம்; பதவி உயர்வு ஆசிரியர்கள் கோரிக்கை
தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உருவாகியுள்ள
முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கு பதவி உயர்வு பட்டியலிலுள்ள ஆசிரியர்களை
நியமிக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 உயர்நிலையாகவும் தரம்
உயர்த்தப்படும் என, சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. முதலில் 100
பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் உட்பட 10 முதுகலை
ஆசிரியர் புதிய பணியிடம் உருவாகியுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை ரத்து : மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
மதுரை, செப்.26-
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர்
தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணையை ரத்து செய்து மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
TET: மதிப்பெண் தளர்வு படி பணிநியமனம் செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண் தளர்வு வழங்கி தமிழக அரசு உத்தவிட்டது. மாற்றுத்திறனாளி
மற்றும் இடஓதுக்கீட்டு பிரிவிலும் இந்த 5 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்
தளர்வு வழங்கப்பட்டது.