Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PGTRB Tamil Study Material


Thanks to Seeds Coaching Center.

இ-ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி?

        ஆதார் அட்டை இந்திய அரசால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகிறது.

BRT Transfer Regarding...

ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு - 27.05.2015
A R G T A - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு
         27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

           வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம்
 

இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி

        இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.
 

எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை

         நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், இருவருக்கு மட்டும், தனி அறையை கொடுத்து, தேர்வெழுத வைத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, டி.ஐ.ஜி., விசாரணை நடத்த வேண்டும் என, தேர்வர்கள், கோரிக்கை விடுத்து உள்ளனர்.

'சர்வேயர்' பணியிடங்களில் 60 சதவீதம் காலி

       நில அளவைத்துறையில், 60 சதவீத, 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், நில அளவைப்பணி முடங்கி உள்ளது.

பி.இ. விண்ணப்பம்; சான்றிதழ்களை தனியாக அனுப்பலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

        பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாதவர்கள், அவற்றை தனியாகவும் அனுப்பலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தச் சலுகையை பல்கலைக்கழகம் அளித்துள்ளது. 

அடங்காத மாணவர்களை கண்டு அலறும் ஆசிரியர்கள்

         புதுச்சேரி பிளஸ்2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்து போனது. இதனால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 87.07 ஆக இருந்தது. 

பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு முறை: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

        பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பேராசிரியர் ப.சிவகுமார், பேராசிரியர் கல்விமணி, பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

         பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வேலை வாய்ப்பு குறைவாக உள்ளதால் 1 லட்சம் பிஇ சீட் காலியாக இருக்கும் : சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

        தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட  இடங்கள் காலியாகவே இருக்கும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  உள்கட்டமைப்பு வசதிகள் குறைவு, வேலை வாய்ப்பு  குறைவு ஆகியவையே, இன்ஜினியரிங் படிப்பு மீது மாணவர்களுக்கு மோகம்  குறைந்துபோனதற்கு  காரணங்களாக கூறப்படுகிறது.
 

கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டு அரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்

          தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க  நோட்டீஸ் அச்சிட்டு  விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
 

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

         சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

குழந்தைகளுக்கான உதவி மையம் தொடக்கம்

         குழந்தைகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் "சைல்டு லைன்' இலவச தொலைபேசி (1098) சேவை மையம் தொடக்க விழா சென்னை ஒக்கியம், துரைப்பாக்கத்தில் உள்ள எழில் நகரில் புதன்கிழமை நடைபெற்றது. 

ஓய்வூதியம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு

        தற்காலிக பணிக்காலத்தில், 50 சதவீதத்தை, ஓய்வூதியத்தில் சேர்க்க கோரிய, ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரின் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் துறை புதிய உத்தரவு

        ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பாக, நிதித் துறை புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.  இதுகுறித்து, தமிழக நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

மாணவர்களின் உடல்நலத்தில் பள்ளிகளுக்கு அக்கறை தேவை

         காற்றோட்டாமான வகுப்பறையும், இயற்கை உபாதைக்கு அனுமதியும் பள்ளி நிர்வாகங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு நிபுணர் டாக்டர் சுஜாதா சங்குமணி. புதிய கல்வி ஆண்டு இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது. பள்ளிகள் திறக்க உள்ளன.

அரசு கல்லூரிகளில் வரும் 30க்குள் மாணவர் சேர்க்கை

       அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.
 

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 1 விடுமுறை

       வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

       பல லட்சக்கணக்கான நமது பிள்ளைகள் ஆண்டுதோறும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். அந்தத்தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்ற மே மாதத்தின் சில நாள்கள், தமிழகம் தழுவிய அளவில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் தொடர்பான வெற்றி முழக்கங்களால் களைகட்டி விடுகின்றன. அதிக மதிப்பெண்களை எடுக்கிற மாணவ, மாணவிகள் நம் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்தான்.
 

பயனுள்ள கணித புத்தகம் விற்பனைக்கு!

          இந்த புத்தகத்தின் முதல் தலைப்பில் மாணவர்கள் எளிதில் படித்து மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையில் சூத்திரங்களை ஆசிரியர் கொடுத்துள்ள போதிலும் சூத்திரங்களை பயன்படுத்தாமல் மாணவர்கள் எப்படி வினாவைக் கண்டவுடன் விடை அளிப்பது என்று மிகவும் அழகாக  (Shortcut) முறையில் கொடுத்துள்ளார்.
இரண்டாம் தலைப்பில்  TNPSC” இல்  “Aptitude” பாடப்பகுதி கொண்டு வந்ததிலிருந்து பிப்ரவரி 2015 வரை நடைபெற்ற அனைத்து தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாக்களின் தலைப்புவாரியான தீர்வினை புதிய வழிமுறையில் கால விரயம் இல்லாமல் மாணவர்கள் எளிதில் புாிந்துக்கொள்ளும்படி மிகவும் தெளிவாக சுருக்கமான முறையில் ஆசிரியர் அனைத்து வினாவிற்கும் தீர்வு கொடுத்துள்ளார்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி! பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்

        அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

       நேற்று காலை 11.30 மணியளவில் நமது பேரியக்கத்தின் சார்பாக மாநில தலைவர் கோ காமராஜ் பொதுச்செயலாளர் ந ரெங்கராஜன் ஓய்வு பிரிவு மாநில பொருளாளர் மூர்த்தி முன்னாள் மாநில பொருளாளர் எத்திராஜ் வில்சன்பர்னபாஸ் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் இராமநாதபுரம் மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு கல்வி அமைச்சர் கே சி வீரமணி அவர்களை நேரில் சந்தித்து புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்தும் நமது மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கோரிக்கைகளாக வழங்கி 

பள்ளி விடுமுறையை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை

       பள்ளிகளை ஜுன் 1-ம் தேதி திறக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என ஆசிரியர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க JACTTA கோரிக்கை விடுத்துள்ளது.
 

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

         பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளின் டிசம்பர் மாத பருவத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
 

அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

        கோடை வெயில் கொளுத்தி வருவதால், அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் ஜூன் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

        சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் ஒத்திவைப்பு

        நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 27 ம் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த தேதி தள்ளிப் போவதாக கூறப்படுகிறது. காரணம் ஏதும் கூறாமல், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive