TET தொடர்பான நம் வாக்கெடுப்பு நேற்று முன்தினம்பிற்பகல் (15.12.12) - 3 மணியளவில் தான் நாம் வெளியிட்டோம். அதற்குள் குவிந்த Comment களும் ஆசிரியர்கள் இட்ட வோட்டுகளையும் பார்க்கும் போது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில், கல்வி கற்க, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கல்வி மேலாண்மை தகவல் முறையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும் மாணவர்கள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியில், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் பொது தேர்வுக்கு தனியாக தகவல் சேகரிக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது.
இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எப்போது தொடங்கும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர்
தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: அரசு
பொதுத்தேர்வுகளான பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நல்ல முறையில்
நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும்
தமிழக அரசு கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு
பல்கலைக்கழகத்தில், கல்வி கற்க, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில்,
தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தானது.
அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு யாரும் விரல் நீட்டி குறை காட்ட முடியாத தேர்வு என அமைச்சர் என்.ஆர்.சிவபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில்,
அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே
மாணவர்களை தயார்படுத்த வேண்டும்', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை
இயக்குனர் நரேஷ் பேசினார்.
ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் உதவியுடன், ஒரு
சிறிய நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது புத்தகங்கள் படிக்கும்
பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்," என முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாம் பேசினார்.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை,
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை
ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்டோர்,
பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை
வழங்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின்
எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ,
மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில்,
தேர்வை துவக்கும் வகையில், தற்காலிக தேர்வு அட்டவணையை தயாரித்து, அரசின்
ஒப்புதலுக்கு, தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20
ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர்
ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு
உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம்,
பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை
நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி,
28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என ஆசிரியர்
தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பெருமிதம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில், பிளஸ்
2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில்
நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள்,
இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பேருந்து படிக்கட்டுகளில், மாணவர்கள்
பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க
வேண்டும். அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து
விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்" என சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.