Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட். கட் ஆப் வெளியீடு: கலந்தாய்வு 28-ல் தொடக்கம்

            தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில் சேர 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், பி.எட் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

TET அறிவிப்பு எப்போது....

பாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும்?

        வகுப்பில் நுழைந்தவுடன் ஆசிரியர்கள் புன்னகையுடன் மாணவர்களைப் பார்த்து, தங்களுக்குள் ஒரு சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்:

10 வகுப்பு துணைத்தேர்வுக்கான:அறிவியல் பாட செய்முறை தேர்வு 21-ம் தேதி தொடக்கம்

        பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு வருகிற 21-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 23-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

ஆண்ட்ராய்ட் மொபைல் டூ கம்ப்யூட்டர் இணைய இணைப்பு கொடுப்பது எப்படி?

           ஆண்ட்ராய்ட் மொபைலிலிருந்து கம்ப்யூட்டருக்கு இன்டர் நெட் இணைப்பு கொடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
connect internet android mobile to computer

மாணவர் விடுதியில் 3 மாதங்களுக்கு அரசியல்வாதி பணியாற்ற வேண்டும்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு

         நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் 3 மாதங்கள் பணியாற்ற வேண்டும் என அரசியல்வாதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி

        ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை கொண்டு வர, அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகள், 8,000த்துக்கும் மேல் உள்ளன. இவற்றில் படிக்கும், 33 லட்சம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க, 95 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது. 

பெண் கல்வி திட்டம்ரூ.55 கோடி ஒதுக்கீடு

      ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்திற்கு, 55 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவர்களின் பள்ளி சேர்க்கையை, 100 சதவீதம் உறுதிப்படுத்தவும், 

கல்வி அதிகாரிகளுக்கு சைக்கிள் ஓட்ட உத்தரவு

         காந்தி பிறந்த நாளில், காந்தி சிலை முதல் காந்தி மண்டபம் வரை, ஏழு கிலோ மீட்டருக்கு, சைக்கிள் ஓட்டி வர, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 

மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வருவது ஏன்? மின்சார வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம்

டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்ட மின்இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வருவது ஏன்? என்பதற்கு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆன்லைன் குளறுபடியால் இடத்தை இழந்த மருத்துவக்கல்லூரி மாணவியை மீண்டும் சேர்க்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

        'மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேனியைச் சேர்ந்தவர் அப்சரா. இவருக்கு, மதிப்பெண் அடிப்படையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவம் படிக்க சீட் ஒதுக்கப்பட்டது. 

ஏழை பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுப் பயிற்சி: மாநகராட்சி ஏற்பாடு

        போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கு ஏழை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி:

மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு 12,149 பேர் எழுதுகின்றனர்

          மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு இன்று நடக்கிறது. 89 பணியிடத்துக்கு 12,149 பேர் தேர்வு எழுதுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மகப்பேறு மற்றும் குழந்தை நல சுகாதார அலுவலர் பதவியில் 89 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி

        பள்ளி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்ப போட்டி நடைபெறுகிறது. சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.

தமிழ்நாட்டில் 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:சர்வே

          தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. 
 

தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் திட்டம்: வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது நிதியமைச்சகம்

        தங்கத்தில் பத்திர வடிவில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இதற்கான வரைவு விதிகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதன்படி தங்கத்தின் எடைக்கு இணையான விலை மதிப்புள்ள பத்திரங்களை அரசு வெளியிடும். 2,5,10 கிராம்கள் அல்லது இதற்கு அதிகமான எடைக்கு இணையான விலையில் இந்த பத்திரங்கள் இருக்கும். சர்வதேச தங்கக் கடன் சந்தை நிலவரத்திற்கேற்ப இப்பத்திரங்களுக்கு வட்டி நிர்ணயிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் திட்டம்: கிடைக்ககூடிய வருமானம்… முக்கியஅம்சங்கள்…. சிறப்பு பார்வை

        உங்கள் வீடுகளில் உள்ள தங்க நகைகள் கூடுதலாக வருமானத்தையும் ஈட்டித் தந்தால் எப்படியிருக்கும்.ஆம்.அப்படி ஒரு வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன.இதில் எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.


ஐஏஎஸ் தேர்வு அரசு இலவசப் பயிற்சி! அக்.6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்…

         தமிழக அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு தமிழக அரசு மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மீண்டும் பணி வழங்க வேண்டும்: மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம்

      உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் கோரியுள்ளது.


இராணுவப் பள்ளிகளில் 2 ஆயிரம் ஆசிரியர் பணி.

         மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா?

           அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.

நம் இணைய இணைப்பை தனக்குப் பயன்படுத்தும் விண்டோஸ் 10

          உங்களுடைய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்துவிட்டீர்களா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரையும் அதில் உள்ள இணைய இணைப்பினையும் விண்டோஸ் 10 சிஸ்டம் நீங்கள் அறியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதன் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களுக்கு, விண்டோஸ் 10 அப்டேட் பைல்களை அனுப்பிக் கொண்டிருக்கும். இதனை மைக்ரோசாப்ட் “விண்டோஸ் வழங்குவதில் அதிக பட்ச பயன்பாடு” (Windows Update Delivery Optimization (WUDO) என அழைக்கிறது. இந்த தகவலை, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண் 10 குறித்த கேள்வி பதில் (http://windows.microsoft.com/en-us/windows-10/windows-update-delivery-optimization-faq) பகுதியில் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் மீது தாக்குதல்: எஸ்.ஐ.யை கண்டித்து சாலை மறியல்

       திருச்செங்கோட்டில் ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் 1.22 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

        பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 533 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட வன அலுவலர் நிகார் ரஞ்சன் கூறினார்.

REGARDING FAMILY PENSION IN NPS

       Family Pension for NPS Employees – A report states that between April 1994 and April 2004, more than 50 lakh youths joined Government Services. However, the same dropped to around 33 Lakhs after April 2004. Experts blame the Governments’ decision to abolish pension for this, which forced the youths to move towards the corporate sector.
 

பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்

       ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,பெயர், முகவரி திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்?

         பதினெட்டு வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கவும், விடுபட்டோர் தங்கள் பெயரை பட்டியலில் இணைத்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் செய்யவும், வரும் அக்., மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்காக பொதுமக்கள் வீணாக அலையாமல், எங்கு செல்ல வேண்டும், என்ன படிவம், என்ன ஆவணங்கள் இணைத்து தர வேண்டும் என்பதையும், தேர்தல் கமிஷன் விளக்கமாக தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் நீக்கப்பட்ட 914 பேர் மனு மீண்டும் ஏற்பு

         மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி தேர்வில் நீக்கப்பட்ட, 914 பட்டதாரிகளின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்து தேர்வு:தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அதிகாரி பதவியில், 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நாளை, எழுத்துத்தேர்வு நடக்கிறது.

'ஆன்-லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

           ரயில் டிக்கெட்டை, 'ஆன்-லைன்' மூலமாக முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, நாளை முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.அதிகாலை, 12:30 மணி முதல் இரவு, 11:30 மணி வரை, ரயில் டிக்கெட்டை இணையதளம் வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதி, 2010, ஏப்ரல் முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், முன்பதிவு செய்யும் நேரத்தை மேலும், 15 நிமிடங்கள் அதிகரித்து, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
 

சர்வதேச இன்ஜினியரிங் தரவரிசையில் அண்ணா பல்கலைக்கு 151வது இடம்

        உலக இன்ஜினியரிங் பல்கலைகள் தரவரிசை பட்டியலில், சென்னை அண்ணா பல்கலைக்கு, 151வது இடம் கிடைத்துள்ளது. 'பிரிக்ஸ்' நாடுகள் பட்டியலில், சென்னை பல்கலை, 78வது இடத்தை பிடித்துள்ளது. 
 

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா

    அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive