Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.பி.பி.எஸ்.: 108 காலியிடங்கள், அரசு பி.டி.எஸ்.: 20 காலியிடங்கள்

      தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.  அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

பிளஸ் 2 பாடங்களுக்கு 'சிடி':தனியார் பள்ளிகள் நெருக்கடி

        பொதுத்தேர்வுக்கென, தனியார் நிறுவனங்கள் தயாரித்துள்ள, 'சிடி'க்களை வாங்குமாறு, மாணவ, மாணவியரை, தனியார் பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுப்பதாக, புகார் எழுந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகளை, அரசு இலவசமாக வழங்குகிறது. ஆனால், விளக்க கையேடான, 'நோட்ஸ்'களை, தனியார் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

'மேட்ரிமோனி'யிலும் ஆதார்

         மோசடிகள் நடக்காமல் தடுக்க, திருமண இணையதளங்களில் வரன் தேடி விளம்பரம் செய்வோர், ஆதார் எண்ணை தரும் வகையில், நடைமுறைகளில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திருமண விளம்பரங்கள் தர எண்ணற்ற இணையதளங்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. அவைகள், அதிக கட்டணம் பெற்று, வரன்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டாலும், மோசடி விளம்பரங்களை தடுக்க வகை செய்யவில்லை.

இசைப் பல்கலை.யில் ஓவியம், நாமசங்கீர்த்தனம் படிப்புகள் தொடக்கம்

        சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு இசை, கவின் பல்கலைக்கழகத்தில் ஓவியம், நாமசங்கீர்த்தனம் ஆகியவற்றில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்படுகிறது என்று துணைவேந்தர் வீணை காயத்ரி தெரிவித்தார்.

தமிழ் கற்கும் இத்தாலி மாணவர்கள்

       காரைக்குடி மானகிரி செட்டிநாடு பள்ளியில்,பிளஸ் 1 படிக்க இத்தாலி மாணவர்கள் வந்துள்ளனர்.இத்தாலி நாட்டைச் சேர்ந்த, மாணவர்களான மார்ட்டின்,17, லியானார்டோ,17 ஆகியோர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானகிரி செட்டிநாடு பள்ளியில், இந்த ஆண்டு பிளஸ் 1-வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

பொதுத்தேர்வில் 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கு 10ம் தேதி பரிசு

         பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெற்ற மாணவ, மாணவியருக்கு, வரும், 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. கடந்த, 2014-15ல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், 750 பேர் மாநில ரேங்க் பெற்றனர். பிளஸ் 2வில், முதலிடம் பிடித்த, 21 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடந்த வாரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
 

நாடு முழுவதும் 906 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி

        இந்தியா முழுவதும் 906 ஐ.பி.எஸ்., பணியிடங்கள் காலியாக உள்ளதாக யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 4754 பணியிடங்களில், 3,843 இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.

வைரஸ் தாக்கிய பென்டிரைவ் லிருந்து file களை மீட்கும் வழிகள்

   தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. 

தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ தேர்வு 25-ந்தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. தேர்வு கமிட்டி அறிவிப்பு

          அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான(2015) தேர்வு நடைபெற இருந்த நிலையில், அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் சில மாநிலங்களில் வெளியானதைத்தொடர்ந்து இந்த தேர்வை  தள்ளிவைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி அதிரடியாக உத்தரவிட்டது.

பி.எப் தொகையின் திரும்பப்பெறும் அளவை 75%ஆக குறைக்கத் திட்டம்!

          மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் பிராவிடென்ட் பண்ட் தொகைக்கான திரும்பப் பெறும் அளவை 75 சதவீதமாகக் குறைக்க, ஊழியர் சேமலாப நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டு வருதிறது. 
 

கணக்கு கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்; அறிவியல் எடுக்கும் ஆங்கில ஆசிரியர்!

        கல்வித்துறையில் தமிழகம் முன்னேறி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் பல அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை மோசமாக சென்று கொண்டிருப்பதா பதைபதைக்கிறார்கள் கல்வியாலர்கள்.  
 

பல் மருத்துவ படிப்பில் இருந்து விலகி 110 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்: மருத்துவ கல்வி இயக்குனர் பேட்டி

சென்னை,
பல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த 110 மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இந்த வருட கலந்தாய்வில் இடம் கிடைத்தது.

கல்வித்துறையில் தமிழகம்

அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை மோசமாக சென்றுகொண்டிருப்பதாக பதைபதைக்கிறார்கள் கல்வியாலர்கள்.

பட்டதாரி ஆசிரியர்கள் 135 பேருக்கு தலைமை ஆசிரியர்களாக'பிரமோஷன்'

கல்வித் துறை வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு 135 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்களாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.

கவலையளிக்கும் கலந்தாய்வு: களமிறங்கும் 'ஜாக்டோ'

                      தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் அறிவிக்கப்படாததால் ஆக.,1ல் நடக்கும் ஜாக்டோ தொடர் முழக்கப் போராட்டத்தில் இப்பிரச்னையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.பள்ளிக் கல்வியில் கல்வியாண்டு துவங்கும் முன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் இரண்டு ஆண்டுகளாக தாமதமாக நடத்தப்பட்டது. இந்தாண்டு ஜூலை முதல் வாரம் கடந்த பின்னரும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் அறிகுறி கூட தெரியவில்லை.

பாடத்திட்டமே வரவில்லை; பயிற்றுவிப்பதில் பெரும் குழப்பம்! : சிறப்பாசிரியர்கள் பாடு திண்டாட்டம்

          சிறப்புப் பாடங்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்படாததால், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

மருத்துவம் சார் பட்ட படிப்பு: முதல் நாள் 8,316 விண்ணப்பம்

          பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு, ஒரே நாளில், 8,316 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்.சி., ரேடியோ தெரபி உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார் பட்டப்படிப்புகள் உள்ளன. 150 சுய நிதி கல்லுாரிகளையும் சேர்த்து, மொத்தம், 8,000 இடங்கள் உள்ளன.
 

தமிழக கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்து 'நாக்' ஆய்வுக்கு பின் வழங்க யு.ஜி.சி., முடிவு

         தமிழகத்தில், ராணி மேரி கல்லுாரி, பச்சையப்பா கல்லுாரி மற்றும் அமெரிக்கன் கல்லுாரி உள்ளிட்ட, நான்கு கல்லுாரிகளுக்கு, விரைவில் பாரம்பரிய கல்லுாரிக்கான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ்., அதிகாரி சாதனை

            “ஐ.ஏ.எஸ்., தேர்வை பொறுத்தவரை, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எளிதில் வெற்றி பெறலாம்” என, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜா கூறினார்.
 

அரசு துறைகளில் 14,481 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

           தமிழகத்தில் மத்திய, மாநில மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 14,481 பணியிடங்களுக்கு நேரடி நியமனம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமும் நியமனம் நடைபெற இருப்பதால் தகுதியுடையோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள், தேர்வு திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அந்தந்த இணையதள முகவரில் சென்று தெரிந்துகொள்ளவும்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு 20 சதவீதம் பேர் வரவில்லை

         என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு 20 சதவீதம் பேர் வரவில்லை. அது என்ஜினீயரிங் மீதான மோகம் குறைந்தது காணரமாக இருக்கலாம் என்று கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார். 

ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு போதிய பயிற்சியின்மையால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிரமம்

         அரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி., பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால், ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர். இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது. 

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்

          தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 'ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.
 

சத்துணவு ஊழியர்கள் வரும்11ல் பேரணி

           தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வரதராஜன் கூறியதாவது: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, மலைவாழ் படி, குளிர்கால படி, விருப்ப ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார்.  

பள்ளி, கல்லூரிகளில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்

         பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி

         இலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால், தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச் சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

        விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, 2015--16ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது.

'பிளே ஸ்கூல்' விதிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

         தமிழக அரசின், 'பிளே ஸ்கூல்' வரைவு விதிகளுக்கு, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இதனால், குழந்தைகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும் என்றும் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive