Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களும் போராட்டம் உண்மை நிலை....

 
          அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினாலே ஊதிய உயர்வுக்குத் தான் என்ற ஒரு தவறான மனநிலையை மக்கள் மனநிலையில் பதிய வைத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள்.

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை

 
            மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு

         பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்: 24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு மையங்களுக்கு மின்தடை விலக்கு : மின்துறைக்கு கலெக்டர்கள்,கல்வித்துறை கடிதம்.


            பிளஸ்2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மையங்களுக்கு, மின்தடையில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, கலெக்டர்கள், கல்வித்துறை சார்பில், மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 

லோக்சபா தேர்தல்: ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது அதிகாரிகள் திடீர் பாசமழை.

 
          லோக்சபா தேர்தல் நெருங்குவதால், பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி வருகின்றனர்.
 

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் : தமிழக தேர்தல் அதிகாரி சூசகம்.


               "தமிழகத்திற்கு, ஒரே கட்டமாக, தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது,'' என, தமிழக தலைமைதேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் சூசகமாக தெரிவித்தார்.
 

தேர்தல் பணி: அரசு பெண் ஊழியர்களுக்கு அருகில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு.


              தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பெண் ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள சில சலுகைகள் பெண் போலீசாருக்கும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

தேர்வு நேரத்தில் பெற்றோர் உதவுவது எப்படி?

 
          மார்ச் 3 ல் பிளஸ் 2தேர்வுகள் துவங்குகின்றன. பள்ளிப் படிப்பின் நிறைவாக நடக்கும் இந்த பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் "வாழ்க்கை பாதையை' தீர்மானிக்கிறது.
 

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு இன்று துவக்கம்.

          சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1,256 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர்.
 

ஆசிரியர்களைப் பற்றி புகார்கள்: 'சைல்ட் லைனில்' அதிகரிப்பு.


                மதுரை மாவட்டத்தில் 'சைல்ட் லைன்' அமைப்பின் போன் 1098 க்கு, தினமும் வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலும் ஆசிரியர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அதிகம் தெரிவிக்கப்படுகின்றன.
 

மார்ச் 6ல் ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்': ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.


                   மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 
 

ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு.


            ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் மையங்களின் விவரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு உள்ளது.
 

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

               தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்

            சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

UGC NET தேர்வில் OBC பிரிவினருக்கு புதிய மதிப்பெண் சலுகை!

 
           நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.
 

இணைப்பு பள்ளிகளில் தனி பயற்சி வகுப்புகளுக்கு தடை - CBSE அதிரடி

         சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவது மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
 

கேட் தேர்வில் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்காதவருக்கு 165 மதிப்பெண்கள்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

 
          இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) இந்தோர் மையத்தில் 8இடங்களை காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
 

Flash News: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி.


               இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.

குரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம்.


            டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும் ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு.


          தொடக்க வேளாண் கூட்டுறவுசங்க ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியுதவிபெறாத 5 ஆண்டுகள் லாபத்தில் இயங்கும் சங்கங்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு 2013 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம்

 
          கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை எடுத்துவர புதிய முறை

 
           பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய 715 கோள்கள்: நாசா கண்டுபிடிப்பு


           சூரிய குடும்பத்திற்கு வெலியே புதியதாக 715 கோள்கள் உள்ளதை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் கெப்ளர் தொலை நோக்கி இதனை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

 
           ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது. டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.
  

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு பணிச்சுமை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும்

 
          பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால் உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு

 
              நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
 

பள்ளியின் முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது :

 
           கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார்.

முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி?

 
              என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி: பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும்.
 

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET EXAMS PAPER I AND II வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
TRB அனைத்து வழக்குகளும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.

வேலை வேண்டுமா?

போன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார்.

புதிய ஐடியா: இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

தேடிப்போய் கிடைத்த புதையலை விட தானாகத் தட்டுப்பட்டு கிடைத்த பொக்கிஷங்கள் எனக்கு அதிகம்.

12 ஆயிரம் ஆசிரியர் "ஆப்சென்ட்": பாய்கிறது நடவடிக்கை.

தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர்.

ஸ்டிரைக் செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive