Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர் கவனம்: ஐந்தில் வளையாதது 13ல் வளையாது

 
            மழலைப் பருவத்தில் கண்டு கொள்ளாமல் விடுவதே, விடலைப் பருவத்தில் ஏற்படும் முக்கியப் பிரச்னைகளுக்கு காரணமாகிறது, என்கின்றனர், மனநல டாக்டர்கள்.

தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை : தேர்தல் ஆணையம் உத்தரவு

 
              தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம், அறிவித்தது.
 

'டிகிரி' படிக்க விண்ணப்பித்து 2 ஆண்டுக்கு பின் வந்த 'ஹால் டிக்கெட்'

 
          தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், பி.சி.ஏ., பட்டம் படிக்க விண்ணப்பித்தவருக்கு, 2 ஆண்டுகளுக்கு பின் தேர்வு எழுதுவதற்கான 'ஹால்டிக்கெட்' வந்தது.

TET Court Case Detail (07.03.2011)

        சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

பேஸ்புக் { முகநூல் ) தெரிந்ததும் தெரியாததும் ஒரு பார்வை....

 
           இப்போது நாம் நம் முகம் அறியா நண்பர்களுடன் உரையாடிக் கொண்டும் செய்திகளை பகிர்ந்து கொண்டும் இருக்கும் Facebook எனப்படும் முகநூலைப் பற்றி தெரிந்து கொள்வோமா...?

நல்ல நினைவாற்றலுக்கு என்ன தேவை?

 
         நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்பது கண்ணதாசனின் காவிய வரிகள். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களோ ‘மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியாதா?’ என்று சோக கீதம் பாடுகிறார்கள். காரணம், மாதக்கணக்கில் படித்தவைகளும்கூட நொடிப்பொழுதில் மறந்து விடுவது போன்ற பிரச்சினைகளுடன் அநேக பெற்றோர் தங்கள் குழந்தைகளை என்னிடம் அழைத்து வருவதுண்டு. ‘டாக்டர், இவன் படித்ததை எல்லாம் மறந்துபோகிறான். மறந்து போகாமல் இருக்க மாத்திரை கொடுங்கள்” என்பார்கள். அதற்கெல்லாம் மாத்திரை இல்லை என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, படிக்கும் முறைகளை சொல்லிக்கொடுப்பேன். அப்போதும் பெற்றோர்கள், டாக்டரிடம் வந்தும் மருந்து, மாத்திரை இல்லாமல் வெறும் கையோடு போகிறோமே என்ற ஆதங்கத்தோடுதான் செல்வார்கள்.

2 தேர்வெழுதுவோருக்கான ஒரு புதிய சலுகை!

 
           சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுவரும் பல்வேறான தேர்வு நடைமுறை சீர்திருத்தங்களின் வரிசையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் பதில் தாள்களை(answer sheet) மறு மதிப்பீடு செய்யக்கோரும் வசதியை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 20-க்குப் பிறகே பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு

 
         இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு மார்ச் 20-ஆம் தேதிக்குப் பிறகே தொடங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க கோரி மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 
         மத்திய அரசு அறிவித்தபடி 50 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 

இயக்குனர் கடிதம்

         மேல்நிலை தேர்வுபணி-2014 ல் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைபூதியம் /சில்லறை செலவினம் தலத்திலேயே வழங்கவேண்டும் -அரசு தேர்வுகள் இணை இயக்குனர் கடிதம்

நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி, 10% அகவிலைப்படி வழங்குவதிலும் தாமதம்

 
             தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயிலிருந்து, அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.
 

லோக்சபா தேர்தல் எதிரொலி: சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றம்

 
           லோக்சபா தேர்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது; சில பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 

ஓட்டுச்சாவடிகளில் நாளை சிறப்பு முகாம்: பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு

 
         வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர் சேர்க்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு, நாளை அளிக்கப்படுகிறது. இதற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

பட்டியலை சரி பார்க்க இறுதி வாய்ப்பு

 
             பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது. இதனால், சில மாதங்களுக்கு முன்பே, தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதிவு எண், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை, பெயர் பட்டியலுக்காக தயார் செய்து, தேர்வுத் துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
 

எந்தெந்த நாட்டில் எவ்வளவு செலவாகும் - தெரியுமா உங்களுக்கு?

 
             வெளிநாட்டில் படிக்கச் செல்வோர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் தாண்டி, அவர் அங்கே படிக்கும் காலம் வரையான இதர செலவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

தகுதித் தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல், டி.ஆர்.பி அவசர கடிதம்

 
             தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி ஆசிரியர் தேர்வு வாரியம் அவசர கடிதம் எழுதியிருக்கிறது. 

நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்

 
             விளம்பரங்கள் பார்க்கிறோமே... கரண்ட் பில் கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன் சொல்வாரு... கரண்ட் பில் கட்டியாச்சுன்னு.... இந்த நூற்றாண்டுல எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர... இந்த நேரத்தை எப்படி எல்லாம் மிச்சம் பிடிக்கலாம் யோசிச்சா... அதுல முதலிடத்த நெட் பேங்கிங் தான் பிடிச்சுக்கும்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வெழுதுவோருக்கான ஒரு புதிய சலுகை!

 
          சி.பி.எஸ்.இ., மேற்கொண்டுவரும் பல்வேறான தேர்வு நடைமுறை சீர்திருத்தங்களின் வரிசையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் பதில் தாள்களை(answer sheet) மறு மதிப்பீடு செய்யக்கோரும் வசதியை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு: ஏப்., 23, 24ல் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம், தேர்வுத்துறை

        'தமிழகத்தில், ஏப்ரல், 24ல், லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு நடப்பதால், அன்றும், அதற்கு முந்தைய நாளான, 23ம் தேதியும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்தப்படும்' என, தேர்வுத்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.


பிளஸ் 2 தேர்வு முறைகேடு குறைந்தது: கல்வித்துறை அதிகாரிகள் வியப்பு

 
         பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், வெறும், 14 மாணவர்கள் மட்டுமே சிக்கினர். வழக்கத்திற்கு மாறாக, முறைகேடு எண்ணிக்கை குறைந்திருப்பது, கல்வித் துறை அதிகாரிகளிடையே, வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

44 விடுதிகள் அமைக்க முடிவு

 
           அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 13 மாவட்டங்களில், 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 44 மாணவியர் விடுதிகள் அமைக்கப்படுகின்றன. கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், கல்வித் திறனை வளர்த்தல்;
 

மாற்றுத் திறனாளிகள்- தேர்தல் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தக் கூடாது

 
           விதிகளுக்கு மாறாக, மாற்றுத் திறனாளிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
கேட்டுக் கொண்டுள்ளது.
 

EMIS - மாணவ / மாணவியர்களின் ஆதார் எண் சேகரித்து OFFLINEல் உள்ளீடு

             பள்ளிக்கல்வி - EMIS - மாணவ / மாணவியர்களின் ஆதார் எண் சேகரித்து, சுற்றறிக்கை வந்த உடன் EMIS OFFLINEல் உள்ளீடு செய்ய அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு.

குரூப்-4: 24ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

 
          ஏழு மாதங்களாக இழுபறியில் இருந்த, குரூப்-4 தேர்வு முடிவை, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), நேற்று மாலை வெளியிட்டது. 24ம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

வேலைநிறுத்தத்தில் 60 ஆயிரம் ஆசிரியர் பங்கேற்பு: சம்பளம், 'கட், துறை ரீதியான நடவடிக்கை

 
             ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய் வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது. ''சம்பள பிடித்தம், தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,'' என, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை தெரிவித்தார்.

பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எப்படி: மாணவர்கள், ஆசிரியர் கருத்து

 
               'பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் எளிமையாக இருந்தது என, மாணவர்களும், ஆசிரியரும் கருத்து தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம்

           திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த 2,119 ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடக்கக்கல்வி அதிகாரி தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்காமல் கெடுபிடி

             பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்குவதில் சில மைய கண்காணிப்பாளர்கள் கெடுபிடி செய்வதால் மாணவ மாணவிகள் விரக்தி அடைந்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட விடைத்தாள் புத்தக வடிவில் 40 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது.3ஆம் பக்கத்தில் இருந்து விடைகள் எழுத ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பக்கங்கள் எழுத முடியும், இது போக கூடுதல் தாள்கள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு முத்திரையிடப்பட்ட விடைத்தாள் களை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் வழங்குவர். இதற்காக தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களிடமும் போதுமான கூடுதல் விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன.


TRB Court Case Detail (07.03.2014(

           சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளன.

வெயில் கால அம்மை நோய்கள்

 
          வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது சிறப்பு என்பதை நினைவில் கொண்டு அதை தடுக்க முயச்சிகள் செய்ய வேண்டும். வியர்க்குரு, பெரியம்மை, விளையாட்டம்மை, மணல்வாரிஅம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும். சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

விரைவில் கிராமங்களில் பாஸ்போர்ட் சேவை

 
           வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் -கவர்னன்ஸ் சேவை நிறுவனம் இணைந்து, பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுச் சேவை மையங்கள் மூலம் கிராமப்புறங்களில் தொடங்கவுள்ளது.

CCE - முறை மதிப்பெண்களை மட்டுமே அதிகரித்துள்ளது

              பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது. 

நெருங்கும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - வெல்வது எப்படி?

 
           அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைவது ஒருவரின்முன்தயாரிப்பு வியூகம், சுய முயற்சி, நேர மேலாண்மை மற்றும் கடின உழைப்பில் நம்பிக்கை ஆகிய அம்சங்களைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.இந்தாண்டு, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(AIPMT - 2014) கேள்வித்தாள் எளிமையாக இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை.ஆனால், கடந்தாண்டு NEET - 2013 தேர்வின் கேள்வித்தாளை விட, இந்தாண்டு AIPMT தேர்வு கேள்வித்தாள் எளிமையாக இருக்கும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive