Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

        கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள் தற்ேபாது சிறப்பு அனுமதி திட்டத்தின் (தக்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம்.
 

மாணவரே இல்லாத பள்ளி

   முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத அரசு துவக்கப்பள்ளிக்கு, தினமும் 2 ஆசிரியைகள் மட்டும் பணிக்கு வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளத்தில், 52 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அரசு துவக்கப்பள்ளி இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த ஊரைச் சேர்ந்த பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள ஆங்கில மோகத்தால், பலரும் தங்களது குழந்தைகளை நகர் புறங்களில் உள்ள மெட்ரிக்., பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

'குரூப்-1' பதவியில் 74 இடங்களுக்கு இரு வாரங்களில் தேர்வு அறிவிப்பு

       ''துணை கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட 74 குரூப் - 1 பதவிகளுக்கான புதிய தேர்வு, இரு வாரங்களில் அறிவிக்கப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார். 

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியீடு : டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

      துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 தேர்வுக்கான முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவித்துள்ளார்.
 

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவம் நஷ்டஈடு நிர்ணயிக்க நீதிபதிக்கு கூடுதல் அவகாசம்

     கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் கமிஷனுக்கு ஆறு மாத காலஅவகாசம் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கடந்த 2004ல் கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 90 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை! யு.ஜி.சி. அறிவிப்பு

       இணையவழி (ஆன்-லைன்) முறையில் பட்டப் படிப்புகளையோ, பட்ட மேற்படிப்புகளையோ வழங்க இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்ற அறிவிப்பு பல்கலைக்கழகங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எம்பிஏ, எம்சிஏ விண்ணப்பம் 8ம் தேதி முதல் விநியோகம் : அரசு அறிவிப்பு

        தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகள், கலை கல்லூரிகள், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் போன்றவற்றில் எம்பிஏ மற்றும் எம்சிஏ சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 8ம் தேதி முதல் 30ம் தேதி முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  வழங்கப்படும். 

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை:செயலர் விளக்கம்

        :'பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்காக விண்ணப்பித்தோர் 'புரவிஷனல்' சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டாம்; கலந்தாய்வுக்கு வரும் போது கொண்டு வந்தால் போதும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., மற்றும் பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் மே 13ல் துவங்கியது. 

TNTET Study Material 2015

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பள்ளியில் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்: தலைமை ஆசிரியை–4 ஆசிரியர்கள் இடமாற்றம்

பள்ளியில் ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்: தலைமை ஆசிரியை–4 ஆசிரியர்கள் இடமாற்றம்
        புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள செவல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 140 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக திருச்சியை சேர்ந்த காயத்திரி ஈஸ்வரி பணியாற்றினார்.

Lab Asst Post - தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம்

       அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு மாவட்ட வாரியாக கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட உள்ளது.


அலுவலகங்களில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்?

       பொதுவாக அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டியதாகிறது. அவ்வாறு உட்காரும் போது பல விதமான உடல் பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 

காஸ் மானியம் பெறாத 34 லட்சம் வாடிக்கையாளர்:

         சமையல் காஸ் மானிய தொகை, வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தும் திட்டத்தில், 40 சதவீத வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள், எல்.பி.ஜி., சப்ளை கம்பெனிகளின் நெட்ஒர்க்கில் இணைக்கப்படாதது தெரியவந்துள்ளது.கர்நாடகாவில், 85 லட்சம் எல்.பி.ஜி., வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏப்ரல் முதல், சிலிண்டருக்கான மானியத்தொகை, அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
 

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்

‘வனவர்’ எழுத்துத்தேர்வு முடிவுகள் எப்போது?

       தமிழகத்தில், முதன்முறையாக, வனத்துறைநடத்திய, ’வனவர்’ எழுத்துத் தேர்வுகளுக்கான முடிவுகள், எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், வனத்துறையில்,  வனவர்களாக பணியில் சேருவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்வுகளை நடத்தி வந்தது. ’தங்களது துறைக்குத் தேவையான வனவர்களை, தாங்களே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, மாநில அரசை, வனத்துறை வலியுறுத்தியது.அதைத் தொடர்ந்து, அதற்கான அனுமதியை, தமிழக அரசு வழங்கியது.
 

TNPSC குரூப்-1 மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது: 4,382 பேர் எழுதுகின்றனர்

       துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்ஆகிய பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 
 

பொறியாளர் பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு எப்போது வெளியாகும்?

     பொறியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய பொறியியல் பட்டதாரிகள் 10 மாதங்களாக காத்திருக்கின்றனர்.
 

முதன்மைக்கல்வி அலுவலர் இடமாற்றத்துக்கு தடை

       குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனை சென்னை பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இடமாற்றம் செய்ததற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

இணை இயக்குனர்கள் மாற்றம் !!

JD(SCERT) MRS.AMUTHAVALLI TRANSFERRED TO JD EXAMINATIONS

AND JD MR.KUPPUSAMY TRANSFERRED TO JD SCERT

TNTET - ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணி நியமனம் பள்ளிக்கல்விச் செயலாளரிடம், இடைநிலை ஆசிரியர்கள் மனு

         பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அலுவலகத்தில், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.சி.ஏ.) சென்னை தலைமைச் செயலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு முடிவு

         பள்ளி மாணவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. 

அஞ்சல் துறையில் 105 பணிகள் .

        இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 105 தபால் உதவியாளர், தபால்காரர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மத்திய புலனாய்வு துறையில் 210 பணிகள் .

        மத்திய புலனாய்வு துறையில் (சி.பி.ஐ) காலியாக உள்ள 210 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

100 அடி உயரத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி சென்னை விமான நிலையத்தில் ஏற்றப்பட்டது:

      சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில், 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

1 GB '3G' டேட்டாவுக்கு இனி ரூ.295 செலவாகும்; விரைவில் கட்டணம் உயருகிறது:

     பிரபல தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலர் டெல்லியில் பிரீபெய்டு மொபைல் இண்டர்நெட் பேக்கின் விலையை அதிரடியாக 18 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பது இளைஞர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

மாநகராட்சி பள்ளிகளில் மாடித் தோட்டம்! மற்ற பள்ளிகளிலும் அமைக்க வேண்டும்



     கடந்தாண்டு மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் உட்பட நான்கு பள்ளிகளில் மாதிரி மாடித் தோட்டம் அமைக்கப்பட்டது. இந்தாண்டு மற்ற பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த அரசும், மாநகராட்சியும் முன்வர வேண்டும்.

 

முதுநிலை மருத்துவப் படிப்பு: நாளை முதல் மீண்டும் புதிய கலந்தாய்வு

       முதுநிலை மருத்துவப் படிப்புகள், முதுநிலை மருத்துவ பட்டயப் படிப்பு, ஆறு ஆண்டு நரம்பியல் அறுவைச் சிகிச்சை படிப்பு (எம்.சிஎச்.-நியூரோசர்ஜரி) ஆகியவற்றுக்கு மீண்டும் புதிய கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 6), ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

சட்டப் படிப்பு: இன்று முதல் விண்ணப்ப விநியோகம்: 3 ஆண்டு பி.எல். படிப்புக்கு வயது உச்ச வரம்பு நீக்கம்

      ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம் நீட்டிப்பு

   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி விவகாரம்: சிறப்பு அதிகாரி விசாரணை

      அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி விவகாரம் குறித்து, சிறப்பு விசாரணை அதிகாரி, நேற்று விசாரணையைத் துவக்கினார். பள்ளியின் செயலர் ஆஜராகவில்லை. அவரை நேரில் ஆஜராகச் சொல்லி, சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பி.இ., - பி.டெக்., படிப்புக்கு 'ஆன் - லைன்' அனுமதியில்லை

        இன்ஜி., மற்றும் பி.டெக்., படிப்பில், எந்த பல்கலைக்கும் திறந்தவெளி மற்றும், 'ஆன் - லைன்' கல்லுாரி நடத்த அனுமதிக்கவில்லை என்று, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றக் கூடாது என்றும் எச்சரித்து உள்ளது.

சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி:6, 7ம் தேதிகளில் நடக்கிறது

       சென்னை - ரஷ்யா கலாசார மையத்தில் நடைபெற உள்ள, ரஷ்ய கல்விக் கண்காட்சியில், ரஷ்ய நாட்டின் முன்னணி மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைகள் பங்கேற்கின்றன.சென்னை - ரஷ்யா கலாசார மையம் மற்றும் 'ஸ்டடி அப்ராடு' நிறுவனங்கள் இணைந்து, வரும் 6, 7ம் தேதிகளில், ரஷ்ய கல்விக் கண்காட்சியை நடத்துகின்றன.

"நெட்' தேர்வு முடிவு: ஜூன் 6-இல் வெளியாகிறது?

       சி.பி.எஸ்.இ. சார்பில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித் தேர்வு முடிவுகள் வருகிற 5 அல்லது 6-ஆம் தேதி வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை: முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு


  தமிழகத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதித்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பதால்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive