Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முடிந்து போன தேர்வுக்கு பாடப்புத்தகம் விற்பனை

சென்னை, டி.பி.ஐ., வளாகத்திலுள்ள பாடநூல் விற்பனை மையத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்களுக்குப் பதில், தேர்வுகள் முடிந்த, மூன்றாம் பருவ புத்தகங்களை விற்றனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தாமதம் தலைமையாசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, போதிய ஆசிரியர்கள் வராததால், திருத்தும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இபிஎப்ஓ: புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலிகமாக நிறுத்தம்


இபிஎப்ஓவின் புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவித்திருப்பதாவது: 

படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது

இந்தியாவில், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை, 90 சதவீதம் குறைந்துள்ளது.

செல்போன்களுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு: டிராய் அதிரடி முடிவு

செல்போன் கட்டணங்களுக்கான ரோமிங் கட்டணங்களை இன்று டிராய் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியினத்தைசேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி 30–ந்தேதிக்குள்பதிவு செய்யவேண்டும்

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பைச்சேர்ந்த பட்டப்படிப்புடன் பி.எட். முடித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதுவதற்கு 40நாட்களுக்கு இலவச பயிற்சியை அளிக்க முடிவு செய்தார். 

10ம் வகுப்பு தேர்வு நாளை முடிகிறது 23 முதல் கோடை விடுமுறை துவக்கம்

          பத்தாம் வகுப்புக்கு நாளையும், மற்ற வகுப்புகளுக்கு, 22ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன. தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, 23ம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

undefined
      முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்

         அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

ஒரு நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு- வீடியோ இணைப்பு

        அமெரிக்காவின் ஸ்பான் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒருநிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும் புதிய ரக பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர்.
 

ரியல் எஸ்டேட் மசோதா: வீடு வாங்க அறியவேண்டிய 5 அம்சம்

      ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கவனிக்குமா அரசு...? வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ரிஷு மிட்டல்!

undefined
     பதக்கம் வென்ற தேசிய குத்துச்சண்டை வீராங்கனை  ரிஷு மிட்டல் தனது பொருளாதார தேவைக்காக வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார்.
ஹாரியானாவைச் சேர்ந்த தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ரிஷு மிட்டல்,  தனது சகோதரருடன் கைத்தல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த மிட்டல், பயிற்சியாளரின் உதவியுடன் குத்துச்சண்டை விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டார்.
 

ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி வைத்துக்கொள்ளலாமா?

பொதுவாக, பணியில் சேரும் ஆசிரியர்களின் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாங்கி தங்கள்வசம் வைத்துக்கொள்கின்றன. 
 

"பள்ளி பாடத் திட்டத்தில் வாழ்க்கைத்திறன் கல்வி அவசியம்'

        மாணவர்கள் கல்வி கற்பதுடன் வாழ்வில் சிறந்து விளங்குவதற்கு பள்ளி பாடத் திட்டத்தில் வாழ்க்கைத்திறன் கல்வி அவசியம் என்று சென்னையில் நடைபெற்ற வாழ்க்கைத்திறன் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
 

பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி அனுமதி புதுப்பிப்பு: 31 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

         தமிழகத்திலிருந்து அனுமதியைப் புதுப்பிக்கவும், புதிய கல்லூரி தொடங்க அனுமதி கோரியும் விண்ணப்பிக்கப்பட்ட 31 விண்ணப்பங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் நிராகரித்துள்ளது.
 

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன் கூட்டுறவு வங்கி-தெரிந்து கொள்ளுங்கள்

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்
        கூட்டுறவு வங்கி 100 ஆண்டு கால வரலாறு உடையது. கூட்டுறவு வங்கிகள் இந்திய நிதி முறையில் பங்கு வகிக்கின்றது. அதன் பணிகளை செவ்வனே செய்தல், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தல், நிறைய அலுவலகங்கள் மூலம் பணிகளைச் செய்வது போன்றவை இதில் அடங்கும்.
 

போலி சாதிச்சான்றிதழ் கொடுத்து அரசை ஏமாற்றி ஆசிரியை வேலை பெற்ற பெண் சான்றிதழை ரத்து செய்து திருவள்ளூர் உதவி கலெக்டர் உத்தரவு

        போலி சாதிச்சான்றிதழை கொடுத்து அரசை ஏமாற்றி ஒரு பெண் வேலையில் சேர்ந்துள்ளார். அவரது சான்றிதழை ரத்து செய்து திருவள்ளூர் உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
 

மதுரை காமராஜர் பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு

           மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா வெளியிட்ட உத்தரவு:

தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

              எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி மாணவர்களுக்கு ஏப்.25-இல் மாதிரி வடிவமைப்பு பயிலரங்கம்

           தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி வடிவமைப்பு குறித்த பயிலரங்கம் வரும் 25,26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வானோர் பட்டியல் வெளியீடு

         உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 30 பி.எட்., கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பம்

           தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டில் புதிதாக 30 பி.எட். ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். பி.ஏ., பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் உடனே பி.எட் ஆசிரியர்கள் பயிற்சியை தேர்வு செய்வார்கள். இந்த பயிற்சியை முடிந்தால்தான் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்ற முடியும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்: 11 வயதை கடந்த பெண் குழந்தைகளும் சேரலாம்; அஞ்சல்துறை புதிய அறிவிப்பு

                 செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 11 வயதைக் கடந்தவர்களும் சேரலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.பெண்குழந்தைகளுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தபால்நிலையங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அஞ்சல் துறை கடந்த ஜனவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது. 

Flash News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

           மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது ஊக்க ஊதியம் பெறாத முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் கோருதல்

           முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.எட்.,எம்.பில்.,பி.ஜிடிடிஈ இவற்றுள் இரண்டிற்கு ஊக்க ஊதிய உயர்வு கோருதல் நாள் 20.12.1993க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்றிருப்பின் மூன்றாவது ஊக்க ஊதியம் பெறாதவர்களின் எண்ணிக்கை முதுகலை ஆசிரியர்களின் விவரம் கோருதல்

இடைநிலை பொது தேர்விற்கான உழைப்பூதியம்/மதிப்பூதியம்

அரசாணை (1டி ) எண் .306 நாள் 23.10.2013

கணிதத்தில் 6 மதிப்பெண்: தேர்வுத்துறை கொடுக்குமா?

             'பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், குழப்பமாக இடம்பெற்ற வினாக்களுக்கு, ஆறு மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

வேதியியல் தேர்வில் 'போனஸ்' மதிப்பெண்

            பிளஸ் 2 வேதியியல் பாடத்தேர்வில் 2 மதிப்பெண் 'போனஸ்' ஆக வழங்க கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
 

சான்றிதழ்கள் சேமிப்பு மையம் துவக்கி மத்திய அரசு புதுமை: இதனால் வேலை தேடுவோர், வேலை தருவோர் பயனடைவர்

            இணையவழி சான்றிதழ் சேமிப்பு மையத்தை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் துவக்கி உள்ளது; இதனால், அமைச்சகத்தால் நடத்தப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் படித்த மாணவர்களின் சான்றிதழ் விவரங்களை எல்லாம், அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்கள், எளிதாக பார்த்துக் கொள்ளலாம்; அத்துடன், போலி சான்றிதழ் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். 

இணைய மதிப்பெண் நகலை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம்

          அரசு கலைக் கல்லூரிகளில் அட்மிஷன் பெற, பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி, அசல் மதிப்பெண் பட்டியல், டி.சி., வழங்கும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ஜூலை, ஆகஸ்ட் வரை சேர்க்கை நடைபெறும். இதை தவிர்க்கும் வகையில், உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
 

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல்12-இல் இலவச ஆலோசனை முகாம்

         பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த இலவச ஆலோசனை முகாம் சென்னையில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 11-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

           தனியார் துறையில் வேலை பெறுவதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்தார்.

ஏப்ரல் 19ல் UPSEE-2015 நுழைவுத்தேர்வு

          உத்தர பிரதேச மாநிலத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் சேர(UPSEE-2015)நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 9ம் தேதிக்கு முன்னதாக ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive