Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DTEd :டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி

          டி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என, 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன.

தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்...!

          அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்  ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும்கூறியிருப்பதாவது:

மருத்துவ படிப்பு தரவரிசை மாற்றம்.

         மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. மறு திருத்த மதிப்பெண் அடிப்படையில், தரவரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 25ல் முடிந்தது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின.

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.

           ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 உயர் பதவிகளுக்கு, ஆக., 7ம் தேதி நடக்க உள்ள, 'சிவில் சர்வீசஸ்' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.இந்திய அரசு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., போன்ற, 24 வகை உயர் பதவிகளில், 1,049 இடங்கள் காலியாக உள்ளன.

போதை ஊசிக்கு மாணவர் பலி : பிஞ்சிலே 'பழுக்கும்' பரிதாபம்

            மதுரையில், தனக்கு தானே போதை ஊசி ஏற்றும் பழக்கத்துக்கு அடிமையான கல்லுாரி மாணவர், நேற்று முன்தினம் இறந்தார். சென்னையில் போதை ஏற்படுத்தும், 'கஞ்சா சாக்லேட்' விற்பனை அமோகமாக நடந்து வரும் நிலையில், மதுரையில் மாணவர்கள் சிலர் வித்தியாசமான முறையில், 'போதை' ஏற்றி வருகின்றனர்.
 

வழிப்பறி கொள்ளையனை பிடிக்க முயன்ற பள்ளி ஆசிரியை பலி : முதியவர் உயிரையும் பறித்தான் கொள்ளையன்

             சென்னையில், வழிப்பறி கொள்ளையனை, இரு சக்கர வாகனத்தில் துரத்திய தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்; இரு சக்கர வாகனத்தில் மோதிய கொள்ளையன், முதியவர் ஒருவரின் உயிரையும் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

பொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

             அரசு பொதுத்தேர்வில் இரண்டாம் முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது எனக்கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த பொன்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் செல்வேந்திரன் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்தான். 2015-16 பிளஸ் 2 தேர்வில் 1140 மதிப்பெண் பெற்றான். உயிரியல் பாடத்தில் 195 மதிப்பெண் பெற்றான்.

ஒற்றை இலக்க மாணவர்களோடு செயல்படும் அரசுப் பள்ளிகள்

          செய்யாறு பகுதியில் ஒற்றை இலக்க எண் மாணவர்கள் எண்ணிக்கையோடு 3 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

திருவண்ணாமலையில் ஆகஸ்ட 19-இல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு

        திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 19-இல் தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஊழியர்களுக்கு தொழில்வரியை நீக்க வலியுறுத்தல்

          ஊழியர்களுக்குத் தொழில்வரியை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிட்டி யூனியன் வங்கி ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

          தமிழகத்தில் காலியாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுத்தாள் திருத்தும் பணி மதுரையில் தொடக்கம்

         மதுரையில் தென்மாவட்டங்களுக்கான பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மத்திய அரசு ஊழியர் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு

          மத்திய அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பி.ஆர்க். சேர்க்கை: ஜூலை 9 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

         சென்னை: ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கு ஆன்-லைனில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்குள் புகுந்த பாம்பு: மாணவர்கள் அலறி ஓட்டம்

          ஆம்பூர் அருகே பள்ளிக்குள் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் வகுப்பறையை விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்: காவல்துறை அறிவுறுத்தல்கள்

       சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரவு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்து வாகனத்தில் வீடு திரும்பிய நந்தினி, நஜ்ஜு ஆகியோரிடம் இருந்து பணப்பையை கொள்ளையன் பறிக்க முயன்றான். இதில், வாகனத்தில் இருந்து விழுந்த நந்தினி உயிரிழந்தார். சாலையில் சென்ற முதியவர் ஒருவரும் உயிரிழந்தார்.

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

            எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

கணினி கல்வியில் தமிழகம் பின்தங்கியதால் 39,000 கணினி பட்டதாரிகள் தவிப்பு

        கணினி கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் நாட்டில் கேரளா முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழக அரசு பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாததால், 39 ஆயிரம் பிஎட் கணினி பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

பிளஸ்-2 பாடத்திட்டம் அடுத்த ஆண்டு மாறுமா?

        தமிழக அரசு பரிசீலனைபிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழக அரசு 5 ஆண்டுக்கு ஒரு முறை அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்கு அவசியம்!

       இனி, கல்வி உதவித்தொகை உட்பட, அனைத்து வகையான உதவியும், வங்கி கணக்கு வாயிலாகவே வழங்கப்படும்.எனவே,பள்ளி,கல்லூரி மாணவ - மாணவியர் அவசியம் வங்கி கணக்கு துவக்க வேண்டும் என,அறிவுறுத்தப்படுட்டுள்ளது.

Flash News:ரமலான் பண்டிகை விடுமுறை ஜூலை 7ம் தேதி.

தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை வேலை (6.07.2016) நாள் என தகவல்.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 7ம் தேதி ரமலான் விடுமுறை -மத்திய அரசு அறிவிப்பு.

ரம்ஜான் விடுமுறை 7ம் தேதியா?

            தமிழக கல்வித்துறை ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறை 7 ஆம் தேதி என அறிவித்துள்ளது.

இணையதள குற்றங்களை தடுக்க பாடம் ஒன்று: 'சைபர்'! மாணவ, மாணவியருக்கு போலீஸ் வகுப்பு

          கோவையில் பிரபல கல்லுாரியில் படிக்கும், திஷாவின் சமீபகால நடவடிக்கைகளில், அவளது தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இரவு வெகுநேரம் கண் விழித்து, மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டிருந்த மகளை தொடர்ந்து கண்காணித்ததில், ஏதோ பிரச்னையில் சிக்கியிருந்தது தெரிந்தது. 

மாறுதல் கலந்தாய்வு எப்போது? : ஆசிரியர்கள் போராட முடிவு

        ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தாததை கண்டித்து, வரும், ௮ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழ்நாடுஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, கூட்டணியின் நிர்வாகிகள் கூறியதாவது:

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:ஆய்வு செய்வார்களா கல்வி அதிகாரிகள்?

        திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிந்த நிலையில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட விகிதத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியை அடித்ததில் மாணவி பார்வை இழந்த விவகாரம்:ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

       ஆசிரியை அடித்ததில் பார்வை இழந்த பள்ளி மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பிகார்: போலியாக முதலிடம் பிடித்த பிளஸ் 2 மாணவி "சிறுமி' என பாட்னா நீதிமன்றம் ஏற்பு

          பிகார் மாநில பிளஸ் 2 தேர்வில் போலியாக முதலிடம் பிடித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்ட மாணவி ரூபி ராய், சிறுமி என்பதால், அவரை சிறுவர்கள் காப்பகத்துக்கு மாற்ற பாட்னா மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கோவையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 91 சதவீத இடங்கள் நிரம்பின

          கோவை மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 91 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு: மறுகூட்டலில் திருச்செந்தூர் பள்ளி மாணவி மாவட்ட அளவில் 3-ஆம் இடம்

       திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் 3-ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

அரசு பள்ளிகளில் ஐந்து ஆண்டுகளாக முடக்கப்பட்ட கம்யூ., சயின்ஸ் பாடம்.

           தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் உருவான, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு, ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2வில், தனியாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது.
 

யார் யாருக்கு பயிர் கடன் தள்ளுபடி கிடைக்கும்? : வழிகாட்டி விதிமுறைகள் வெளியீடு.

          விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வங்கி அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய, வழிகாட்டி விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 

பணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.

        அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

புதிய கல்விக் கொள்கைக்காக கருத்து கேட்பு: கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தல்.

          புதிய கல்விக் கொள்கை முன்மொழிவு மீது கருத்து கோட்புக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடைஅமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive