சேலம்
மாவட்டம், ஆட்டையாம்பட்டி, சென்னகிரியைச் சேர்ந்தவர் சித்தன், 45; கூலித்
தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 42. இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள்
உள்ளனர். மகனை, எம்.பில்., வரை படிக்க வைத்த சித்தன், மகள் யசோதாவையும்,
அதேபோல் படிக்க வைக்க விரும்பினார். யசோதா, ஆட்டையாம்பட்டி அரசு மகளிர்
மேல்நிலைப் பள்ளியில் படித்து, பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,093
மதிப்பெண் பெற்றார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்சி.,
ரேடியாலஜி படிக்க விண்ணப்பித்தார்; அவர் கேட்ட பாடப்பிரிவு கிடைத்தது.