Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு ஊழியர்களின் பணி ஆண்டுதோறும் ஆய்வு

        ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க, அரசு ஊழியர்களின் பணி ஆவணங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பல்கலை பேராசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

        மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு பள்ளிகளில் மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக உள்ளது.

அரசு பள்ளிகளில் கை கழுவும் பயிற்சி

        வரும் 15ம் தேதி, உலக கை கழுவும் தினத்தை ஒட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஹேண்ட் வாஷ்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

இன்று வாக்காளர் சிறப்பு முகாம்

         ''அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளுக்காக, ஏற்கனவே இரண்டு சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மூன்றாவது சிறப்பு முகாம், நடைபெற உள்ளது. 

அரசு கலைக்கல்லூரிகளில் நீடிக்கும் ஆசிரியர் பற்றாக்குறை

         தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆமை வேகத்தில் நடக்கும், உதவி பேராசிரியர் பணி நியமனத்தால், 40 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. 'கெஸ்ட் லெக்சரர்' பணியிடங்களும் முழுமையாக நிரப்பாததால், கற்பித்தல் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா.

      புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா. மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு.


ஆன்–லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து கடைகள் 14–ந்தேதி அடைப்பு

       ஆன்–லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தற்போது தடை உள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆன்–லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 14–ந்தேதி (புதன் கிழமை) நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது.தமிழகத்தில் 40 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன.


பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய வசதி: ஏர்செல் நிறுவனம் அறிமுகம்


ஏர்செல் நிறுவனம் சார்பில் இலவச அடிப்படை இணைய வசதி திட்டத்தை அறிமுகம் செய்துவைத்து, அது குறித்து விளக்குகிறார் ஏர்செல், தெற்கு வர்த்தக செயல்திட்டத் தலைவர் சங்கரநாராயணன்.

ஏர்செல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை, தமிழ்நாடு வட்டத்தை சேர்ந்த அனைத்து பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
 

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி 'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்

        ஐபோன் பயனாளிகள் தங்களது 'ஐகளவுட்'டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் 'கூகுள் ட்ரைவ்'வில் பரிமாற்றம் செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம்.


TNPSC: டிசம்பர் 27-ல் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு

        தமிழக அரசு துறைகளில் உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வினை பட்டதாரிகள் எழுதலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். ஏதேனும் ஒரு துறையில் அரசு பணி உறுதி. காரணம், நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது.


மருதாணி போட்ட மாணவனுக்கு ரூ.500 அபராதம்: வகுப்பில் இருந்து வெளியேற்றியது தனியார் பள்ளி

        சென்னை தனியார் பள்ளியில், மாணவர்கள் மருதாணி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதாணி போட்ட, இரண்டாம் வகுப்பு மாணவரை பள்ளியை விட்டு வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் வசூலித்ததற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, வேப்பேரியில் உள்ளது, டவ்டன் மேல்நிலைப் பள்ளி.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் அக்.12-இல் வெளியீடு

        தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழில்நுட்பப் பாடங்களின் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (அக். 12) வெளியிடப்படும் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


அரசு பள்ளிகளில் கணினி கல்வி சாத்தியமா...!!!

         தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும்ஏழை,எளிய,கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்படமாக கொண்டுவர வேண்டும்.அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை)கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .


பி.எட். படிப்பில் சேர 2-வது கட்ட கலந்தாய்வு: 14 முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது

       பி.எட். படிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தது. 2-வது கட்ட கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர்களுக்கும், கணிதம் படித்த மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.


வாக்காளர்கள் பெயர் சேர்க்க 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

         வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை இம்மாதம் 24-ம் தேதி வரை அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:


உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!

       உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை (ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில் இருந்தேஇத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்துகொள்ளலாம்.


செல்வமகள் திட்டம்: டிசம்பர் 2-ந் தேதி வரை 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

           உலக தபால் தினம் மற்றும் அஞ்சல் மன்றத்தின் 25-வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் உறை மற்றும் சிறப்பு தபால் முத்திரை வெளியிடும் விழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவில், தலைமை அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், அஞ்சல் துறை தலைவர் (தபால் மற்றும் விற்பனை மேலாண்மை) வெங்கடேஷ்வரலு ஆகியோர் சிறப்பு தபால் உறை மற்றும் முத்திரையை வெளியிட அஞ்சல் மன்ற உறுப்பினர்கள் திருக்குறள் பாஸ்கரன், ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா

          கல்வித்தகுதி அறிவியல்: * பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

அரசு உதவித்தொகையில் விதிமீறல்; மீண்டும் ஆய்வு நடத்த கோரிக்கை

          ரெட்டியார்சத்திரம்: மணமாகாத, கணவருடன் வசிப்போருக்கு விதவை உதவித்தொகை, இறந்தவர்கள் பெயரில் வினியோகிக்கப்பட்ட உதவித்தொகை குறித்த புகார்கள் மீது மறு ஆய்வு செய்ய வேண்டுமென, முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. 

தேர்வில் காப்பி அடிக்க உதவும் நூதன கருவி உடை விற்பனை: தனியார் உளவு நிறுவன இயக்குநர்கள் கைது

         தேர்வுகளில் காப்பி அடிக்க உதவும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட உடைகளை தயாரித்து விற்றதாக, டெல்லியில் இருவர் சிக்கியுள்ளனர். 

சமூக வலைதளங்களை கண்காணிக்க தயாராகும் மத்திய அரசு

        வெறுப்புப் பிரச்சாரங்கள், மதச்சாய கருத்துகள் பரவாமல் தடுக்க சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் பக்ரீத் பண்டிகையன்று வீட்டில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக பரவிய வதந்தியையடுத்து முகமது இக்லாக் என்ற முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார். 

நீலகிரி: முன்மாதிரியாகத் திகழும் குக்கிராம அரசுப் பள்ளி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அனைத்து செயலிலும் பிற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
ஆங்கிலம் கற்பது அவசியமாகியதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்றியமைத்தது.
 

Hike Messenger புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல்வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்

சென்ற செவ்வாய் கிழமை Hike Messenger புதிய மேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து இருந்தது. இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம் நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட் செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்பமுடியும் மற்றும் 70MB வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம். 

கல்வி அதிகாரியின் திடீர் சோதனையின் போது வெறிச்சோடிய பள்ளி: 3 ஆசிரியர்கள் நீக்கம்

         ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் இயங்கி வரும் க்ரீன் குத் பத்ரி பெஹ்ரோட் துவக்கப் பள்ளியில், கல்வித் துறை அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, பணிக்கு வராத 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

மாணவர்களுக்கு போதை ஊசி!

       நாகர்கோவிலில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, போதை ஊசி சப்ளை செய்த மூவரை, போலீசார் கைது செய்தனர். 

ஆசிரியர்கள் போராட்டம்; மாற்றுப் பணியில் சிறப்பு ஆசிரியர்கள்

        ஆசிரியர் இயக்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பாதிப்பில்லை என சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.

பல்கலை துணைவேந்தருக்கு கட்டாய விடுமுறை அளிக்க பரிந்துரை

        ஓய்வு பெற இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், டில்லி பல்கலைக்கழக துணைவேந்தரை, கட்டாய விடுமுறையில் செல்ல உத்தரவிடுமாறு, ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது. 

ஊராட்சி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம்மறுப்பு

               அதிக வருமானம் உள்ள ஊராட்சிகளில் வளர்ச்சி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊராட்சி நிர்வா கத்தில் இருந்தே அவர்களுக்கு ஊதியம் வழங்கத் தேவையில்லை என்றும் உத்தரவிட்டது.


சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணி.

       நாடு முழுவதும் 4600 கிளைகளுடன் 42 ஆயிரம் பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப்இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள In charges for FLCCs பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஏழை மாணவர்களுக்கு உதவும் ‘ஸ்மைல் கிளப்’ சென்னையில் தொடக்கம்

         ஏழை எளிய மாணவர்களுக்கு உத வும் ஸ்மைல் கிளப் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கப்பட்டது.ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கும் வகையிலான இந்த ஸ்மைல் கிளப்பை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive