Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Study Material Computer Science

  1. Computer Science | 1 Mark Quiz - Android App | Mr. B. Sampath Kumar- Click Here
Prepared by
Mr. B Sampath Kumar

பி.எட். மாணவர் சேர்க்கை: 8,000 விண்ணப்பங்கள் விநியோகம்; விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

         பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மொத்தம் 8,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) கடைசித் தேதியாகும். 

டி.ஆர்.டி.ஓ.,வுக்கு முதல் பெண் டைரக்டர் ஜெனரல்

          ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி.ஓ.,வின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட மஞ்சுளா, நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம், இந்த பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.கடந்த 1962ம் ஆண்டு, ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில் பிறந்த மஞ்சுளா, உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டம் பெற்று, 1987ல், டி.ஆர்.டி.ஓ., பணியில் சேர்ந்தார்.

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? நாம் என்ன செய்ய வேண்டும்..?

          ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள்.    இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? 
 

முதல் 20 இணைய தளங்கள்

        உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா?  அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.

வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை: நாளை தொடக்கம்

       நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.
 

மாணவனை அடித்து நொறுக்கிய ஆசிரியர் - தினமலர்

      கர்நாடகாவில் பான்ட்வாலா என்ற பகுதியில் வேத பாடசாலையில் வீட்டுப்பாடம் எழுதி வராததால் மாணவனை ஆசிரியர் அடித்து துன்புறுத்திய சம்பவம் வீடியோவாக வேகமாக பரவியுள்ளது.

பாரதியார் பல்கலையில் குரூப் 1 தேர்வு பயிற்சி

        தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பாரதியார் பல்கலையில் அக்., மாதம் நடக்கிறது. துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி ஆணையர் வணிகத்துறை, மாவட்ட பதிவாளர் உட்பட, தமிழகத்தில் காலியாக உள்ள, 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள், நவ.,11ம் தேதி நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 2 லட்சத்து 41 ஆயிரத்து, 971 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

குஜராத்தில் 1.10லட்சம் குழந்தை தொழிலாளர்கள்!

       குஜராத் மாநிலத்தில் ஒருலட்சத்திற்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக என்.ஜி.ஓ. ஆய்வில் தெரிவி்க்கப் பட்டுள்ளது, குஜராத் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் நாட்டின் 55 சதவீத தேவையை பூர்த்தி செய்கின்றன.

அன்பாசிரியர் - விஜயலட்சுமி: பள்ளிக்காக நகையை அடகு வைத்த ஆசிரியை!

எல்லாமே அரசாங்கம் குடுக்கும்; குடுக்கணும்னு எதிர்பார்க்கறதில்லை. நம்மளால என்ன முடியுதோ அதை செஞ்சாவே போதும்.

விஜயலட்சுமி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் படித்து, அங்கேயே உதவி ஆசிரியராகி, தலைமை ஆசிரியராகவும் ஆனவர். அதே ஆரம்பப் பள்ளியை, தமிழ்நாட்டின் மாதிரிப்பள்ளியாக மாற்றியிருப்பவர். 2010-ம் ஆண்டில் மாநிலத்திலேயே சிறந்த பள்ளிக்கான விருது, பள்ளிக்கல்வித் துறையின் காமராசர் விருது, மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிக்கான இந்தியச் சுடர் விருது மற்றும் பல விருதுகள் பள்ளிக்கு வந்து சேரக் காரணமாக இருந்தவர்.

தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளிக்க மாவட்டத்துக்கு 4 பேர் பரிந்துரை

        தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களில் 400 பேருக்கு மட்டும் தலைமைப் பண்பு பயிற்சி சென்னையில் அளிக்கப்பட உள்ளது.இதை அனைவருக்கும் கல்வி இயக்கமும், மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளன.

பி.எட். மாணவர் சேர்க்கை: 8,000 விண்ணப்பங்கள் விநியோகம்; விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

      பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மொத்தம் 8,000 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) கடைசித் தேதியாகும்.

கூடுதல் 'செக்யூரிட்டி டிபாசிட்' செலுத்தாத 1 லட்சம் மின் இணைப்பு துண்டிப்பு?

         தமிழகத்தில், ஒரு லட்சம் மின் நுகர்வோர், 'அடிஷனல் செக்யூரிட்டி டிபாசிட்' என, அழைக்கப்படும், கூடுதல் காப்பு வைப்பு தொகையை, மின் வாரியத்திற்கு செலுத்தவில்லை. அதனால், அவர்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

பள்ளி கல்லூரிகளில் பாடமாகும் ராமாயணம், மகாபாரதம்!

     உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைகளின் மனதில் பதிய வைக்கும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா புதுடில்லியில் கூறியதாவது: 

IGNOU ENTRANCE EXAM HALL TICKET

Indira Gandhi National Open University 
B.Ed. Entrance - 2016
Sunday 20 September 2015, (10.00 AM to 12.00 PM)
REQUEST FOR CHANGE OF EXAMINATION CENTRE WILL NOT BE ENTERTAINED.


ஆதார் பதிவை டிசம்பருக்குள் முடிக்க தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க முடிவு: சென்னையில் 5 இடங்களில் திறப்பு

            தமிழகத்தில் அனைவருக்கும் ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு செய்யும் பணியை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.


ஆசிரியர் தினத்தை ஆறப்போடும் கல்வித்துறை

         மாவட்ட அளவில் நடத்தப்படும் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும்,டிசம்பருக்கு பிறகே நடத்தப்படுகிறது. தேர்வு நெருங்கும் நேரத்தில் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது.


சப்–இன்ஸ்பெக்டர் பதவி தேர்வில் தகுதி இழப்பு: விளையாட்டு வீரரின் மார்பு அளவை ஐகோர்ட்டு பதிவாளர் முன்பு அளக்க வேண்டும்: நீதிபதிகள் உத்தரவு

         சென்னை தி.நகரை சேர்ந்தவர் பி.அருண். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கல்லூரியில் படிக்கும்போது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டேன். இந்த நிலையில், தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பதவிக்கு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சிப்பெற்றேன்.


கல்விச் சுற்றுலாவுக்கு 800 மாணவர்கள் தேர்வு

         அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், ராஷ்ட்ரிய அவிக்ஷான் அபியான் திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணினி தொழில்நுட்பத் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

LIC நிறுவன கல்வி உதவித் தொகைக்கு செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்

         சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் கல்வி உதவித் திட்டத்தை (ஸ்காலர்ஷிப்) அறிவித்துள்ளது.


போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 42 ஆசிரியர்கள் மீது வழக்கு.

        போலி சான்றிதழ் கொடுத்து ஹரியானா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 42 ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கடந்த 3 நாட்களில் மட்டும் 42 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 
 

எஸ்.எஸ்.ஏ., திட்ட உபகரணங்கள் கிடப்பில் உள்ளதாக புகார்

        அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அலுவலக உபகரணங்கள் பழுதான நிலையில், அவற்றை சரிசெய்து பயன்படுத்தாமல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


10th Maths Study Material - English Medium


10th Maths Study Material
Prepared by,
Mr.  E.ELANCHEZHIAN.M.Sc.,B.Ed.,

10th Social Science Study Material


Social Science Study Material
Prepared by
Mr. V. VELMURUGAN

தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு கிடையாது: உயர்நீதிமன்றம்

       தலைக்கவசம் அணிவதிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு விலக்கு அளிக்கமுடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெல்லை அருகே அரசு பள்ளியில் ஆசிரியரை அவமான படுத்திய மாணவர்கள் 2 பேர் டிஸ்மிஸ்

நெல்லை அருகே உள்ள கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1,087 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து வருவதாக மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகிக்கு புகார் வந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளியின் சுற்று சுவரை சில மாணவர்கள் உடைத்துவிட்டனர். இதனால் இன்று காலை மாவட்ட கல்வி அதிகாரி சவுந்தரநாயகி கயத்தாறு பள்ளிக்கு விசாரணைக்கு சென்றார்.


காதல் திருமணம் செய்த ஆசிரியர் பாடம் நடத்த அனுமதி மறுப்பு

           சென்னை, ராயபுரத்தில், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது; இங்கு, ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர், அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியையை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்கு, பள்ளி நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருமணத்துக்குப் பின், அந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். ஆசிரியருக்கு, பள்ளி நிர்வாகம் பணி மாறுதலும் அளிக்கவில்லை; மாறாக, 100 நாட்களாக பள்ளியில் பாடம் நடத்த, அனுமதி மறுத்துள்ளது; தினமும், பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு, செல்லும்படி கூறியுள்ளது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: செப். 21 முதல் 23 வரை அறிவியல் செய்முறைத் தேர்வு

        பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
 

இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள்: செப். 14 முதல் பள்ளிகளுக்கு விநியோகம்

        ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ புத்தகங்கள் வருகிற 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் குளறுபடி?

        டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு, ஆசிரியர்களை தேர்வு செய்ததில், குளறுபடிகள் நடந்துள்ளதாக, ஆசிரியர் சங்கம் சார்பில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ண னின் பிறந்த நாளான, செப்டம்பர், 5ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

11,000 மாணவர்களுக்கு அறிவியல் விருது மத்திய அரசு ரூ.2.40 கோடி ஒதுக்கீடு

           நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் விருது வழங்க, மத்திய அரசு, 2.40 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடத்தி, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது.மாவட்ட விருதுக்கு, 2,000 ரூபாய்; மாநில விருதுக்கு, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதம் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு பெறுவோர், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.
 

பி.எட்., விண்ணப்பம் இன்று கடைசி நாள்

          தமிழகத்திலுள்ள, 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லுாரிகளில், 2,200 பி.எட்., இடங்களை நிரப்ப, 3ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இன்று பிற்பகல், 3:00 மணி வரை மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

குழந்தைகளுக்கான வீரதீர விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

         குடியரசு தினத்தை ஒட்டி, மத்திய அரசு வழங்கும், குழந்தைகளுக்கான வீரதீர விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.குழந்தைகளின் வீரதீர செயல்களைப் பாராட்டி, மத்திய அரசின் இந்திய குழந்தைகள் நல கவுன்சில் சார்பில், 1958 முதல், விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில், 24 குழந்தைகளை தேர்வு செய்து, இந்த விருது வழங்கப்படுகிறது. 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive