Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை 2015க்குள் அடைய முடியுமா?

       வரும் 2015ம் ஆண்டிற்குள், நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியை கிடைக்க செய்துவிட வேண்டுமென்ற லட்சியம் நிறைவேறுவது சாத்தியமில்லை என்று யுனெஸ்கோ அமைப்பினுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்காததற்கு டிஎன்பிஎஸ்சி தாமதமே காரணம்.

         வேலூரை சேர்ந்த ரவீந்திரநாத் யாதவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
 
          டேராடூன் ராணுவ கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். இதற்கான தேர்வில் மாநில அளவில் நான் முதலிடம் பிடித்தேன். ஆனால், எனது விலாசம் தவறாக உள்ளது என்று கூறி தேர்வாணையம் என்னை தேர்வு செய்ய காலதாமதப்படுத்தியது. இதனால், எனக்கு ராணுவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.
 

பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவு.

         சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிவது தொடர்கிறது. இதையடுத்து, பள்ளிக் கட்டிடங்களின் உறுதியை ஆய்வு செய்யவும், ஆபத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை நாளை மறுதினம் கூடுகிறது.


           தமிழக மீனவர்கள் கைது, மவுலிவாக்கம் கட்டிட விபத்து மற்றும் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்நாளை மறுத னம் கூடுகிறது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 12 வரை நடக்கிறது.

சட்டசபை கூட்டத்தொடர்:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 12 வரை நடக்கிறது.

மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்.

தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்:
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரயில்களில் தமிழகத்திற்கு 5 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

JA காலிப்பணியிடங்களில் மாறுதல் / நியமனம் வழங்குதல் கூடாது என இயக்குநர் உத்தரவு.

      பள்ளிக்கல்வித்துறை :3.7.2014 நிலவரப்படி 1395 இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டுள்ளது -இணை இயக்குநர்

முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

      அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம்நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு,

ஆசிரியர் பணியிடம் நிரப்ப பாஜக செயற்குழு தீர்மானம்:

                விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டம், செஞ்சியில் நடந்தது. ஒன்றிய தலைவர் சரண்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் தீர்த்தமலை, குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொதுசெயலாளர் ஜானகிராமன், துணை தலைவர் சிவகுமார், விவசாய அணி தலைவர் தனசேகர், இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் வல்லம் ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிற்றாறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தட்டச்சு தேர்வுகள் ஆக. 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன:

          தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப இயக்ககம் சார்பில் தட்டச்சுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும். 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிரி&ஜூனியர், 8ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூனியர் பிரிவுக்கும், ஜூனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் சீனியர் பாடத்திற்கும் தேர்வு எழுதலாம்.
 

107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:

           அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது 107 பேர் மருத்துவ படிப்புக்கு சென்றுவிட்டனர்:

"தாட்கோ" மூலம் 7,50,000 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது

       "தாட்கோ" மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான கடனுதவி அளிக்கப்படுகிறது. இன்றிலிருந்து (05.07.2014) பத்துநாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்

மவுலிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த முடிவு

         மவுலிவாக்கத்தில், 'சீல்' வைக்கப்பட்ட 11 மாடி கட்டடம் அருகே செயல்படும் அரசு பள்ளியில், சுழற்சி முறையில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

'கண்ணீர்' விட்ட ஆசிரியர்கள் மகிழ்ச்சி :


       தொடக்கக் கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்ட, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'மனமொத்த பணிமாறுதல்' உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.
 

இம்மாதம் இறுதியில் வண்ண அடையாள அட்டை வினியோகம் .....

           தமிழகத்தில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி, இம்மாதம் இறுதியில் துவங்குகிறது.இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார் கூறியதாவது:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு,சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இம்முகாமில், ஒரே நாளில் 10 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர். 
 

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் 450 பேருக்கு மதிப்பெண் மாற்றம்

             பத்தாம் வகுப்பு மறுகூட்டலில், 450 பேருக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏப்ரலில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவிற்குப் பின், 15 ஆயிரம் மாணவர்கள், பல்வேறு பாடங்களில், மறுகூட்டல் கேட்டு, தேர்வுத்துறையிடம் விண்ணப்பித்தனர்.
 

BE - டாப் - 10 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள்

        பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம் - டாப் - 10 மாணவர்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் மற்றும் பாடப் பிரிவுகள்.

முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவு

          அரசு பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவத் தேர்வுக்கு முன்பே சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 1,090 ஆரம்பப்பள்ளிகள், 307 நடுநிலைப்பள்ளிகள், 185 உயர்நிலைப்பள்ளிகள், 306 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,888 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது வழக்கம்.

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.

           தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. 
 

அரசு யார் பக்கம்?


பணக்காரக் குழந்தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகப் படிக்கக் கூடாதா?

         கட்டாய இலவசக் கல்வித் திட்டம் அமலானவுடனேயே சென்னை நகரத்திலிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் இப்படிச் சுற்றறிக்கை அனுப்பினாராம்: “இனி உங்கள் பிள்ளைகள் உங்களது வேலைக்காரர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்துதான் உட்கார வேண்டும். 

பல்கலைக்கழக மானியக் குழு!

         பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ள யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன் பின்னணி சுவாரஸ்யமானது.

பி.இ., கலந்தாய்வு துவங்கியது கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆர்வம்!

சென்னை:
        சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., பொதுப்பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், ஆர்வம் காட்டினர்.

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் நாளை வெளியீடு!

     பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.

செய்தித்துறை மூலம் காமராஜர் திரைப்படம் - பள்ளிகளில் டிக்கெட் விற்பனை



           தமிழகத்தின் முதல்வராகவும், பிரதமர்களைச் சுட்டிக் காட்டியவராகவும் விளங்கிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு கடந்த 2004-ல் திரைப்படமாக வெளியானது. 

கூடுதல் பணிப்பளு: பகுதி நேர ஆசிரியர்கள் அதிருப்தி

         பகுதி நேர சிறப்பாசிரியர்களிடம் பணி நியமனத்தின்போது தெரிவிக்கப்பட்டதைவிட கூடுதல் வேலை வாங்குவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
 

கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

                தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதி தேவை குறித்து விவரம் கோரி உத்தரவு

நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

            பள்ளிக்கல்வி - 2013-14ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான நல்லாசிரியர் விருது பெற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய கருத்துருக்களை கோருதல் சார்பு

20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்பு

           தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.



பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்

               பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். விண்ணப்ப விற்பனை இன்று தொடக்கம்: 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழக அரசுக்கு நோட்டீஸ்...

தமிழக அரசுக்கு நோட்டீஸ்:
 
         உச்சநீதிமன்றம் ரத்துசெய்த குரூப் 1 அதிகாரிகள் 83பேர் பணியில் நீடிப்பதை எதிர்த்து வழக்கு.

பள்ளிகளில் மின் சாதனங்கள் இயக்க மாணவர்களுக்கு தடை

            பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிகளில், நீர்தேக்க தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அவற்றை மூடவேண்டும்.
 

முதுநிலை மற்றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் பழனியப்பன் தகவல்

           அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில் நடந்த பொன் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி யப்பன் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கம்!

         பல்லடம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி துவக்கப்பட்டுள்ளது.

பி.இ., கலந்தாய்வு துவக்கம்: 28 நாட்கள் நடக்கிறது

         பொறியியல் படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive