Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு?Dinakaran

பிப்.24ல் பணி நியமன உத்தரவு? ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுடன், தற்போது மதிப்பெண் சலுகை மூலம் புதிய பட்டியலில் இடம்பிடிப்பவர்களின் சான்றிதழ்களும் அடுத்த இரு வாரங்களுக்குள் சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் வேலை நியமன உத்தரவு தயாரிக்கப்பட்டு பாடம் வாரியாக இந்த கல்வி ஆண்டிலேயே ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளவர்கள் விபரம் அறிவிக்கப்படும். இவர்கள் அனைவருக்கும் வரும் 24ம் தேதி (ஜெயலலிதா பிறந்த நாள்) முதல்வர் கையால் சென்னையில் வைத்து ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்கப்படலாம் என தெரிகிறது. எஸ்சி, எஸ்டிக்கு கூடுதல் வாய்ப்பு கடந்த 2012ம் ஆண்டு நடந்த தேர்வில் எஸ்சி., எஸ்டி பிரிவில் அதிக தேர்வர்கள் தேர்ச்சி பெற வில்லை. இதனால், அவர்கள் பிரிவில் 400 காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது இடஒதுக்கீடு பிரிவினருக்கு சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவினருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பிப்.,12ல் நியமன ஆணை.

         தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, பணி நியமன ஆணையை பிப்., 12ல் முதல்வர் ஜெ., வழங்குகிறார். அன்றைய தினமே, அந்தந்த மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 4 வார கால பயிற்சி துவங்குகிறது. தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு, 7,500 ரூபாய் சம்பளத்தில் 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக, முதல்வர் ஜெ., அறிவித்தார்.


குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

           குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.


ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கோரிய மனுக்கள் தள்ளுபடி.


          ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கேட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. 

01.01.2014 Panel Preparation Instructions

01.01.2014 Panel Preparation Instructions

BT TO HIGH SCHOOL HEADMASTER PROMOTION 2014-15 - Click Here

TET CV will conduct soon for newly passed candidates.

           டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது.

PG/TET I / TET II வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் (04.02.2014)விசாரணை நிலை


         சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியீடு.


         2013 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த பி.எட்., எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.பி.எட்., எம்.எட்.துணைத் தேர்வு முடிவை www.tnteu.in என்ற இணையதளத்தில் அறியலாம்.தேர்வில் தவறியவர்கள் ஜூன் மாதம் நடக்க உள்ள தேர்வில் கலந்துக்கொள்ள பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குரூப் 2 தேர்வு: 1,262 பணியிடங்களுக்கு வரும் 10 முதல் கலந்தாய்வு.


          குரூப் 2 தொகுதியில் நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கு கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 
 

TEACHERS PROFILE FORM

பள்ளி முதல்வர், ஆசிரியர்களை நீக்கும் அதிகாரம் பெற்றோருக்கு வேண்டும்: கல்வி அமைச்சர்

          பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்யும் மற்றும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம், பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று டில்லி மாநில கல்வியமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழக அரசுக்கு கோரிக்கை.


           2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு.


      ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் பழனிமுத்து, ஏ.ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தேர்வு மதிப்பெண் தளர்வு; அரைக் கிணறு தாண்டினால் போதாது : பாமக நிறுவனர் ராமதாஸ்

          ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் 5% குறைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இது முழுமையான பயனை அளிக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


ஒரு நாள் வேலை நிறுத்தம், டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

           இன்று (4.2.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 6.3.2014 -வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 2.2.2013 மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது நிதி மந்திரி ப.சிதம்பரம் பேட்டி

         வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். இடைக்கால பட்ஜெட் இந்த பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. 

Indian Railway Recruitment Board Announced Exam


              இந்திய ரயில்வேயில் 26,567 காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வேயில்26,567 காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஏழாவது ஊதியக்குழு உறுப்பினர் நியமனத்துக்கு பிரதமர் ஒப்புதல்.


       ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார்.50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியத்தாரர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க உள்ள இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்.பெட்ரோலியத் துறைச் செயலாளர் விவேக் ரே இதன் முழு நேர உறுப்பினராக இருப்பார்.

Tet weitage calculation problem?


          ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல். ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை-சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்.


          ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை-சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்.கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68 ஆயிரத்து 481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன். இதுநாள் வரை 51 ஆயிரத்து757 ஆசிரியர்கள், இடஒதுக்கீட்டு முறையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு. ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இதுவரை, 19 ஆயிரத்து 673 பணியிடங்களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10 ஆயிரத்து 220 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.என தமிழக முதல்வரின் சட்டசபையில் உரையாற்றியுள்ளர்.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.


           முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று( 03.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு 91 வது வழக்காக இடம்பெற்றிருந்தது. 
 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறை தேர்வு வரும் 7ம் தேதி தொடக்கம்.


          பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. அதன் மதிப்பீட்டை 22ம் தேதிக்குள் முடிக்கவும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
 

டிஇடி சான்று சரிபார்ப்பில் 300 பேர் ஆப்சென்ட்.


       ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் 300 பேர் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
 

இயக்குனர் உத்தரவு.

         அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த தயாரகின்றது டிஆர்பி?


              ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாககுறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கில வழிக் கல்வி ஏன்?- பேரவையில் ஜெயலலிதா விளக்கம்.


            ஆங்கில வழிக் கல்வியைக் குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா? என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
 

TET தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை: முதல்வர் ஜெயலலிதா

        டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர்

     பள்ளி ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். 

தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் : முதல்வர் உறுதி

              தமிழகம் விரைவில் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறும் என்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

மத்திய அரசு ஊழியர்களைபோல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுமா?

          மத்திய அரசு ஊழியர்களுக்கு, மீண்டும் அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், தங்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுமா என்று தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

தகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

       "தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.


மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு - சென்னை ஐகோர்ட்டு


              முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive