Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்


        2013 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. இந்நாளில் தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும்  தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1.      அரசின் நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும், காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும் தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.

SSLC சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணை


           இந்த மாதம் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு கால அட்டவணையை தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
 
வ.எண் நாள் கிழமை தேர்வு
1 24.06.2013 திங்கள் மொழித்தாள் - I
2 25.06.2013 செவ்வாய் மொழித்தாள் - II
3 26.06.2013 புதன் ஆங்கிலம் முதல் தாள்
4 27.06.2013 வியாழன் ஆங்கிலம் இரண்டாம் தாள்
5 28.06.2013 வெள்ளி கணிதம்
6 29.06.2013 சனி அறிவியல்
7 01.07.2013 திங்கள் சமூக அறிவியல்


ஆசிரியர் தகுதி தேர்வு! தயாராவது எப்படி?


          தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
 

வெளிநாட்டில் கல்வி கற்க நுழைவுத்தேர்வு: 3 ஆண்டுகளில் 20% உயர்வு


         வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த, மூன்றாண்டுகளில், 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

குழந்தைகளின் மனச் சோர்வையும் தளர்ச்சியையும் போக்கும் வைட்டமின் “டி”


         உங்கள்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்?
 

"அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் - ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” - சாதக, பாதகங்கள் குறித்த ஒரு ஆய்வு - சிறப்பு கட்டுரை


     பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர் எனவும், ஆண்கள் பள்ளியில், ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர் எனவும், இருபாலர் பயிலும் பள்ளி என்றால், ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு, அதிரடியாக அறிவித்துள்ளது.

     இது குறித்து சில சாதக பாதகமான விமர்சனங்கள் குறித்த அரசு ஓர் ஆய்வு. ஆணும், பெண்ணும் இணைந்துள்ள இந்த சமுதாயத்தில் இது தேவையா? அவசியமா? என்பதற்குள் புகு முன், இதை செயல்படுத்த கூறப்பட்டுள்ள காரணம், ஆண் ஆசிரியர்களை இச்சமுதாயம் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளைப் போல் சித்தரிக்கப்படுவதை எண்ணி வருத்தப்பட வேண்டும்.
    

கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - சிறப்பு கட்டுரை


         கட்டுரையாசிரியர் திரு. எஸ். ரவிக்குமார் அவர்கள் நமது பாடசாலை வலைதளத்திற்காக வழங்கிய முந்தைய கட்டுரை - வாசகர்களின் மறு பார்வைக்காக.


9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகம்


          சமச்சீர் கல்வி திட்டத்தின் படி, நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்புக்கு முப்பருவப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

பள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது


            அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில், பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்தில் இருந்து, 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
 

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்


           ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி:அனைத்து பாடங்களுக்கும் "வழிகாட்டி"


            அரசு பொது தேர்வுகளில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களின் ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்தனர்.

TETல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள்


Thanks to TeacherTN

              அனைவருக்கும் தரமான கல்வி, கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்ற நோக்கோடு செயல்படும் அரசு. முதலில் TET அறிவித்து அதில் தவறிவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு வைத்து அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு நேர்மையான முறையில் அதிரடியாக பணி நியமனம் வழங்கி பலரின் வாழ்வில் ஒளி ஏற்றியதை யாரும் மறுக்க முடியாது.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு


           கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு முடிந்தபின், ஏப்ரல், மே மாதங்களில், கோடை விடுமுறை விடப்பட்டது. 2013 -14ம் கல்வி ஆண்டை, கடந்த, 3ம் தேதி முதல் துவக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது.
 

அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு தகுதி தேர்வு கட்டாயம்


                அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011,12, 2012,13ம் கல்வியாண்டில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென செயலர்கள், தாளாளர்கள் சார்பில் பள்ளி கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
 

கோவையில் 30 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து


         கோவை மாவட்டத்தில், அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வந்த, 30 பள்ளிகளின் அங்கீகாரத்தை, அதிரடியாக ரத்து செய்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வரவேற்பு இல்லை: பாலிடெக்னிக்கில் 25 படிப்புகள் நிறுத்தம்


          மாணவர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால், 20 முதுகலை டிப்ளமோ பாடங்கள் உள்ளிட்ட, 25 படிப்புகளை அரசு ரத்து செய்துள்ளது.

திருவள்ளுவர் பல்கலையில் தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல்


          விடைத்தாள் திருத்துவதற்கு, தொகையை உயர்த்த மறுப்பதால், திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவு வெளியிடுவதில், தாமதம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 20 பள்ளிகளை மூட உத்தரவு


           சென்னையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 20 மழலையர் பள்ளிகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். 

இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்.... 3ம் வகுப்பில் பாடம்


           எதுவும் அறியாத, எதிர்க்கும் சக்தியில்லாத குழந்தைகள், பாலியல் கொடுமையில் சிக்கினால், என்ன செய்ய வேண்டும்? இதற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம், மூன்றாம் வகுப்பு, தமிழ்ப் பாடத்தில், சேர்க்கப்பட்டு உள்ளது.
 

தியானம், வழிபாடு, மனவளக்கலையுடன் கொஞ்சம் பாடம்


       5 ஆம் வகுப்பு வரை அருமையான பாடத் திட்டம் 2 நாளில் அமல், தியானம், வழிபாடு, மனவளக்கலையுடன் கொஞ்சம் பாடம்

ஜூனில் இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு


            இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது  தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

புதிய கல்வியாண்டு சிறப்புடன் அமைய ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்


1.தேசம் என்றால் மக்கள், பள்ளி என்றால் படிப்பு.என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2.தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி செல்லுங்கள்.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 1.58 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை


          வரும் ஜூலை, 21ல் நடக்கும் முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, இதுவரை, 1.58 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆகியுள்ளன. விண்ணப்பங்கள் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவும், வரும், 14ம் தேதி கடைசி நாள்.
 

ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட பள்ளி: முதல்வர் உத்தரவு


            ஸ்ரீரங்கத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடந்து வரும் தேசிய சட்டப் பள்ளிக்கான கட்டுமான பணிகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அங்கு கட்டுமானப் பணிகள், விரைவாக நடந்து வருகின்றன.
 

கால்நடை மருத்துவ படிப்பு: தரவரிசை பட்டியல் 24ல் வெளியீடு


               கால்நடை மருத்துவ படிப்பு, மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல், 24ம் தேதி வெளியாகிறது.

என்.சி.இ.ஆர்.டி., பாடத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கம்


                 என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் தயாரித்த, பாடப் புத்தகத்தில், கேரளாவின், நாடார் மற்றும் ஈழவ சமுதாயங்கள் மற்றும் அந்த சமுதாயங்களின் தலைவர்கள் குறித்து இடம் பெற்றிருந்த, சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறையில் 44 டி.இ.ஓ., 10 சி.இ.ஓ. பணியிடங்கள் காலி


              பள்ளிக் கல்வித் துறையில் 44 மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.), 10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.), 3 இணை இயக்குநர், 2 இயக்குநர்பணியிடங்கள் காலியாக உள்ளன.

679 பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்று பெற நாளை வரை கெடு


          போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து தமிழகம் முழுவதும் 679 பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
 

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு - தமிழகத்தில் 50% தேர்ச்சி


               இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்பட்ட என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், தமிழகத்தில் தேர்வெழுதியோரில், 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு


           கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ரூ.55.82 கோடி அளவிலான ஊதிய உயர்வை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனால், 4 ஆயிரத்து 784 கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். 
 

ஜூன்2013 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு : விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு


            ஜூன் 2013-ல் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

முயற்சி திருவினையாக்கும் - புதிய தலைமுறை தலையங்கம்


           ஆரல்வாய்மொழி.தமிழகத்தின் கடைக்கோடியில், கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு சிற்றூர். ஏசுராஜ் அந்தச் சிற்றூரில் சூளையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி.அவர் மகள் நிஷா நந்தினி பத்தாம் வகுப்பு மாணவி. அங்கிருந்த தேவாளை அரசு மேல் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். 
 

ஆதார் அடையாள அட்டை எண் : ஒரு சிறப்பு பார்வை


          ஆதார் இந்த பெயர் எவ்வளவு முறை உச்சரிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக உள்ளது. இது குறித்த சந்தேகங்கள், இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றுபட்ட அடையாள எண் என்கிற திட்டம் புதிது. இதனால் மக்கள் மத்தியில் இது குறித்த கேள்விகள் ஏராளமாக உள்ளன, ஆதார் எண் குறித்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் புதிய தலைமுறை கேட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த பதில்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.  

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive