Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட்., எம்.எட்., தேர்வுகள் துவக்கம்


              தமிழகத்திலுள்ள கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான தேர்வுகள் இன்று துவங்கின. இத்தேர்வுகள் காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகின்றன.
 

வேளாண் பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி


          வேளாண்மை பட்டதாரிகளுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபற்றி அரியலூர் கலெக்டர் ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:
 
        அரியலூர் மாவட்டத்தில் 1,06,409 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவாக உள்ளது. இதில், 67 ஆயிரத்து, 155 ஹெக்டேர் மானாவரி பயிர் சாகுபடி பரப்பளவாகவும், 39 ஆயிரத்து, 254 ஹெக்டேர் இறவை சாகுபடி பரப்பளவாகவும் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சி.பி.எஸ்.இ.,10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு


             சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் காணலாம்.

ஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு: சி.இ.ஓ. அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்


          தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அலுவலகங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
 

ஜப்பானிய தமிழ் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது


          ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சர்தேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர், நொபொரு கராஷிமாவுக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

காதுகேளாத குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்? ஆய்வில் தகவல்


         தமிழகத்தில், 1,000 குழந்தைகளில், ஆறு பேருக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது. இது, தேசிய அளவைவிட, மூன்று மடங்கு அதிகம் என, ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க உத்தரவு


             இடைநிலை பள்ளி விடுப்பு சான்றிதழ் பொது தேர்வு எழுத உள்ளோர், செய்முறை பயிற்சிக்கு, பதிவு செய்து கொள்ள, அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்


           சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, 200 மாணவர்களுக்கு, தலா, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவ சீட்டுக்கு ரூ.30 லட்சம்: மோசடி செய்த இருவர் கைது

          மருத்துவப் படிப்பிற்கு, சீட் வாங்கித் தருவதாக, 30 லட்சம் ரூபாய் பெற்று, மோசடி செய்த இருவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்


          தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் 27ம் தேதி முதல் வழங்கப்பட்டன.

பிளஸ் 1 துணை தேர்வு ஜூன் 5ம் தேதி ஆரம்பம்


          நெல்லை மாவட்டத்தில் மூன்று மையங்களில் பிளஸ் 1 துணை தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகிறது.

தேவைதானா ஆசிரியர் தகுதித் தேர்வு? - முனைவர் மணி.கணேசன்


         மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலே 1910-ஆம் ஆண்டிலேயே இலவச கட்டாயக் கல்விக்காகக் கொடுத்த குரல் பல்வேறு படிநிலைகளைக் கடந்து அண்மையில்தான் மத்திய அரசால் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 என ஜம்மு-காஷ்மீர் தவிர நாடு முழுவதும் ஏப்ரல்1, 2010 முதல் நடைமுறைப்படுத்தப் பெற்றுள்ளது. 
 

கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்


                கல்வி பெறும் உரிமை சட்டம் என்பது மத்திய அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை என கோவா முதல்வர் மனோகர் பரிகர் தெரிவித்துள்ளார். கல்வி பெறும் உரிமை சட்டம் குறித்து மாநில முதல்வர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

வாட்டி வதைக்கும் கோடை வெயில்... ஜூன் 10ம் தேதி தான் பள்ளிகள் திறப்பு : தமிழக கல்வித் துறை அறிவிப்பு

            
          தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.


கற்பது கற்கண்டா? கசப்பா?byஉதயசங்கர்


                 கற்றலின் இனிமை என்ற செயல்முறைக்கல்விமுறைக்கு முன்னோடி கிஜூபாய் பகேக. இன்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இந்த முறை உவப்பானதாகத் தெரியவில்லை. 

அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த - விரைவில் உரிய அரசாணை


            அரசாணை எண்.216 நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை, விரைவில் உரிய அரசாணை வெளியிடப்பட உள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் திரு.முத்துசாமி அவர்கள் தகவல்


பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்


          பிளஸ் 2 வேதியியல் விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (மே 28) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அண்ணாபல்கலைக்கழகத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கட் ஆப்


         சி.பி.எஸ்.இ. 12–வது படித்த மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பில் பி.இ. அல்லது பி.டெக். சேர அண்ணாபல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளனர். 

ஐஆர்சிடிசி இணையதளத்தில் நிமிடத்துக்கு டிக்கெட் புக்கிங் 2000லிருந்து 7,200ஆக உயர்த்த முடிவு


                 ரயில்வேயின் துணை நிறுவனமான இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு நிமிடத்தில் 2,000 டிக்கெட்டுகளை மட்டுமே இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும்.
 

எனக்கு தெரியாமலேயே ஆங்கிலத்தி்ல் கல்லூரி தேர்வு எழுத உத்தரவு: முதல்வர்


           கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

தமிழக கல்லூரிகளில் உள்தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்


             தமிழகத்தில் உள்ள அனைத்து மணவ-மாணவியரும் தங்களது உள்தேர்வுகளை அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்


           தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் 27ம் தேதி முதல் வழங்கப்பட்டன.

ஆசிரியர் பயிற்சி படிப்பு: விண்ணப்ப வினியோகம் துவக்கம்


           ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் 27ம் தேதி துவங்கியது. ஜூன், 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
  

"வேலை தேடாதீர்... வேலை தருவோராக மாறுங்கள்..."


           "பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பை தேடாமல், வேலைவாய்ப்பு தரும் தொழில்முனைவோராக மாற வேண்டும். முன்னதாக, அதற்கான தகுதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்" என்று அண்ணா பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு)காளிராஜ் பேசினார்.

"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு


              மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆண்டு தோறும் "பிளக்ஸ் பேனர்" வைத்து, மாணவர்களை அழைக்கிறது, அரசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.

தலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் கலந்தாய்வு துவக்கம்


               நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று துவங்குவதாக, திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொ) ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

"விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் இடம் கிடைக்கும்"


             "இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும்" என அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தர் ராஜாராம் கூறினார்.

ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரத்தை மீட்க அவசர சட்டம்


             "ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பு, ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்டுள்ளது; அந்த அமைப்பிடம், எம்.பி.ஏ., கல்லூரிகள் அனுமதி பெறத் தேவையில்லை" என சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், அதிகாரம் இழந்துள்ள அந்த அமைப்புக்கு, அதிகாரத்தை மீட்டுக் கொடுப்பதற்காக, அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுகோள்


           அண்ணாமலை பல்கலைக்கழகத்தை போல, பச்சையப்பன் அறக்கட்டளையையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு: சென்னை மண்டலம் முதலிடம்


          சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 27ம் தேதி வெளியாயின. இந்தியா முழுவதும், 82 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னை மண்டலம் முதல் இடம் பிடித்துள்ளது.

தகவல் தர மறுத்ததால் கிடுக்கிப்பிடி: மதுரை பல்கலைக்கு அபராதம்


         ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான, ஆவணங்கள் வழங்க மறுத்த, மதுரை காமராஜ் பல்கலைகழகத்திற்கு, மாநில தகவல் ஆணையம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive