Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு


               சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.


பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு


               பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், கட்டணமின்றி, விடுதிகளில் தங்கி படிக்க, 178 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.


மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு


              எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பார்மசி மாணவர்கள் பாரம்பரிய மருத்துவமும் கற்க அறிவுரை


                "பாரம்பரிய மருத்துவத்தை கற்றுக்கொள்ள பார்மசி மாணவர்கள் முன்வர வேண்டும்" என, கல்லூரி விழாவில் அறிவுறுத்தப்பட்டது.


கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு


                கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர்.


547 பணி நிரவல் பணியிடங்கள் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஆசிரியர் கூட்டணி கவலை


                   நெல்லை மாவட்டத்தி ல் 547 பணி நிரவல் பணியிடங்கள் உள்ளதால் பல்வேறு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட அனைத்து வட்டார, பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நடந்தது.
 
 

அரசு பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் அசத்த, புது திட்டம்!


              அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
 
 

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்


           "செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் தினமும் படித்து வந்தால் சிந்தனை திறன் அதிகரிக்கும். சிந்தனை திறன் அதிகரிப்பால் செயல்திறன் கூடும்," என்று உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் கூறினார்.
 
 

கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உதவித் தொகை உயர்வு


              கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கான உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
 

பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க மொபைல் கவுன்சிலிங் வழங்க 10 வேன்கள் வாங்கப்பட்டுள்ளது.


               தற்போதைய கல்வி கற்கும் சூழல் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடியதாக அமைந்துள்ளது. மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி ஆரோக்கியமாக கல்வி கற்க வழிவகுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

Just For Fun


அட்டகப்பல் - நம்மாளுக லேசு பட்டவங்க இல்லை


CEO's Meeting



         பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் 25.04.2013ல் தொடங்கி 30.04.2013 வரை நடைபெறுகிறது

 

அரசு பள்ளிக்கு 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள்: கல்வித்துறை டெண்டர்


         வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி கல்வித் துறை, டெண்டர் வெளியிட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்: ஜூன் முதல் வாரம் வெளியீடு


             "எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


பொது கலந்தாய்வு எப்போது? கல்லூரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


            "கல்லூரி ஆசிரியர்களுக்கான, இட மாற்ற பொது கலந்தாய்வு தேதியை, உடனே அறிவிக்க வேண்டும்" என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோடை கால பயிற்சி முகாம்: அறிவியல் மையம் ஏற்பாடு


           தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், கோடை கால பயிற்சி முகாம் துவங்குகிறது. மாணவர்களிடையே, அறிவியல் ஆர்வத்தை வளர்க்க, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பயிற்சிகளை நடத்துகிறது.


மாணவர் விடுதிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி


            தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சு திறனை வளர்க்க, ஆங்கில பேச்சு பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.


குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு ஏப்.,29ல் கவுன்சிலிங்


               டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வில் வெற்றி பெற்ற 597 பேருக்கு, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு, இம் மாதம் 29ம் தேதி கவுன்சிலிங் நடக்கிறது.


தொடக்கக்கல்வித் துறை இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து விண்ணப்பம் பெற தகவல் இன்று (26.04.2013) மாலைக்குள் வெளிவரும் - TNPTF-ன் மாநில பொதுச் செயலாளர் தகவல்


http://2.bp.blogspot.com/-rTOxilUgRi4/UXoXpZHMYBI/AAAAAAAABlc/psytagXRxvc/s1600/DEE+25.04+(1).gif          
            தொடக்கக்கல்வித் துறைக்கான 2013-14ஆம் ஆண்டிற்கான இட மாறுதல் மற்றும் பதவியுயர்வு கலந்தாய்வு குறித்து இதுவரை எந்த தகவலும் வராததால் ஆசிரியர்கள் மத்தியில் இதுகுறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு


              கோடை விடுமுறையின் போது பள்ளியின் கணினி, அச்சுப்பொறி, ப்ரொஜெக்டர், எல்.சி.டி மானிட்டர், மடிக்கணினி போன்ற விலையுயர்ந்த பொருட்கள் உங்கள் பள்ளியில் இருந்தால் அவற்றைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் தலைமையாசிரியரையே சாரும்.
 
 

கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்: முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம்

 
          "மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி : பரிசீலிக்க நாடாளுமன்ற குழு கோரிக்கை


             இந்தியாவில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.

மே 9 முதல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்


              தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 9 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
 
 

கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு


         கல்வியாண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 
 
 

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?


          கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது.
 
 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 பகுதி நேர ஆசிரியர் பணி விண்ணப்பம் வரவேற்பு


               கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 55 பகுதி நேர ஆசிரியர் பணியிடம் நிரப்பபடுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
 
 

புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகம்


              பாடப் புத்தகங்களைப் பார்த்து, பொதுத்தேர்வை எழுதும், புதிய வகை திட்டம், வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்தப்பட உள்ளது. பொதுத் தேர்வுகள், மாணவர்களிடையே மன அழுத்தத்தை தருவதால், தேர்வு நடைமுறைகளில், படிப்படியாக, பல்வேறு சீர்திருத்தங்களை, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
 
 

சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


          சிவில் சர்வீஸ் தேர்வு கொள்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் ‌ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
 

சிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில் வரி இல்லை: உயர்நீதிமன்ற நீதிபதி


           "சிந்திப்பதற்கு மட்டும் இந்தியாவில், வரி விதிக்கப்படுவதில்லை; இந்தியர்கள் தராளமாக சிந்திக்கலாம்," என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் பேசினார்.
 
 

உங்கள் எண்ணங்களை ஒளி ஓவியமாக்கும் புகைப்படத் துறை


             போட்டோகிராபி எனப்படும் புகைப்படக்கலை, ஒளியை படமாக பதிவு செய்து புகைப்படங்களை உருவாக்கும் கலை. படங்கள் என்பவை, சக்தி வாய்ந்த ஊடகம். அனைத்து இடங்களிலும், புகைப்படத்தின் பயன் உள்ளது.
 
 

பொறியியல் கல்லூரி தேர்ச்சி சதவீதம் வெளியிடக் கோரி வழக்கு


             பொறியியல் கல்லூரிகளின், மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தை வெளியிடும்படி, அண்ணா பல்கலைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
 

தமிழ் வழியில் பி.எல்., பட்டம் பெற்றவர் சிவில் நீதிபதியாக தேர்வானது செல்லும்: உயர் நீதிமன்றம்


           "தமிழ் வழியில், பி.எல்., படித்த பெண்ணை, சிவில் நீதிபதியாக, தேர்ந்தெடுத்தது செல்லும்" என, சென்னை ஐகோர்ட், உத்தரவிட்டுள்ளது.
 
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive