Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ.அதிரடி அறிவிப்பு


          இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். 
 

ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்: ஜனாதிபதி


      பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும் நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது. 
 

கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை


       கடுமையான நிதிப் பற்றாக்குறையிலும் குழந்தைகளின் கல்வியின்பால் அரசு காட்டும் அக்கறை மற்றும் இச்சமூகத்தின் எதிர்கலமே குழந்தைகள்தான் என்ற நம்பிக்கையில் கல்விக்கான முழூ செலவையும் அரசே ஏற்றுள்ளது.
தொடர்ச்சியன ஆசிரியர் நியமனம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி போன்றவற்றை பார்க்கும் போது இன்றைய ஆட்சி குழந்த்தகளுக்கு பொற்கால ஆட்சி என்றே கூறலாம்.

அரசு வேலைவாய்பு! – இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?


       தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் “சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

ஆசிரியர் நியமனத்திற்கு போலீஸ் நற்சான்றிதழ் தேவை


        "ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்" என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.


பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும்


          பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிநியமனம் இழுபறி


         அரசு பொறியியல் கல்லூரிகளில், 152 உதவி பேராசிரியர் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர்கள் பணி நியமனம், 4 மாதங்களாக, இழுபறியில் உள்ளது. தேர்வு பெற்றவர்கள், எப்போது வேலை கிடைக்கும் என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு - சிறப்பான ஏற்பாடுகளை செய்ய அமைச்சர் உத்தரவு


          "பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்குகின்றன. 8.50 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். கடந்தாண்டு, 1,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தாண்டு, 2,000 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் சிவபதி, "பிளஸ் 2 தேர்வில், எவ்வித குளறுபடிகளும் இன்றி, மாணவர்களின் நலன் பாதிப்பின்றி, தேர்வுகள் நடைபெற வேண்டும்&' என அறிவுறுத்தி உள்ளார்.


மாணவர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க நகரும் அருங்காட்சியகம்


      பள்ளி, கல்லூரி மாணவர்களிடம், நம் நாட்டின் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, நகரும் அருங்காட்சியகம் அமைக்க, அருங்காட்சியகங்கள் துறை முடிவு செய்துள்ளது.


பள்ளிகளில் பாலியல் கல்வி?


          டில்லி கற்பழிப்பு சம்பவத்தில், இளஞ்சிறார் ஒருவன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நீதிபதி வர்மா குழு சமர்பித்த அறிக்கையில், "நாடு முழுவதும் பாலியல் வன்முறை சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். பழைய பள்ளிப் பாடத்திட்டத்தை சீரமைத்து, பாலியல் கல்வியை ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.


நர்சரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., பொருந்துமா? - மத்திய அரசு தகவல்


         நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது, நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.


பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 10.5 லட்சம் பேர் பங்கேற்பு!


    பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் துவங்கின. இதில், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.


இந்திய கடற்படையில் என்ன தகுதிக்கு என்ன வேலைக்குச் செல்ல முடியும்?


      கேடட் என்ட்ரி (யு.பி.எஸ்.சி., நடத்தும் என்.டி.ஏ., மூலமாக) பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் கணிதம் படித்து 16 முதல் 19 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.


குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு.

 
      துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நேரடியாக நிரப்புவதற்காக கடந்த 16–ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 முதல்நிலைத்தேர்வை நடத்தியது. புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட்ட இந்த தேர்வை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினார்கள். 
 

6ஆண்டுகளுக்குப் பிறகு.. அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு


      காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கான கோப்புகளில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் கையெழுத்திட்டதை தொடர்ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் இன்று வெளியானது. கெடுவைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அரசாணையை தாக்கல் செய்தது மத்திய அரசு.

10-ம் வகுப்பு செய்முறை தேர்வு துவங்கியது


          10-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் துவங்கியது. அறிவியல் பாடத்திற்கான இந்த செய்முறை தேர்வினை 2 மணி நேரம் எழுதுகின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
 

முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி. தகவல்


         முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

 

"பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிப்போம்... " தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது-Dinamalar


        அகில இந்திய அளவில், இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கும், பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிப்போம்; ஆனால், கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து, மத்திய, மாநில அரசுகள் ,கோரிக்கைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தி  பணிக்கு செல்வோம் என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

         

சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி: அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு


         காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

        கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.

ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஊக்குவிக்காமல் இருந்தால் நாட்டிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்,&'&' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பேசினார்.


        "ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கும் நிதியில் வெறும் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஊக்குவிக்காமல் இருந்தால் நாட்டிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்,&'&' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பேசினார்.

எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி: அரசாணையில் விளக்கம்


             அரசு வேலைவாய்ப்புகளில், முதுநிலை தொழிலக அறிவியல் பட்டம் (எம்.எஸ்சி., இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி), முதுநிலை வேதியியல் (எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி) பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, உயர்கல்வித் துறை அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கட்டணம் நிர்ணயம்: ஐகோர்ட் புது வழிமுறை


      "கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் போது, பள்ளிகளுக்கு ஆகும் செலவை, கல்விக் கட்டண நிர்ணயக் குழு, கருத்தில் கொள்ள வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

       

உயர்கல்வித் துறையை உயர்த்த வேண்டும்: ரோசையா பேச்சு


      "நமது உயர்கல்வித் துறையை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆசையை, நாம் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நிறைவேறும்" என கவர்னர் ரோசையா பேசினார்.


மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மாற்றம்


         மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்


            எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு, 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

“21ம் நூற்றாண்டு அறிவுசார் சமுதாயமாக அமைய வேண்டும்” - சசி தரூர்


           மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர், சமீபத்தில் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய கருத்தரங்கில் பேசியதாவது:

         உலகளவில், ஒட்டுமொத்த உற்பத்திப் பொருளாதார அடிப்படையில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. எனினும், வாங்கும் திறன் பொருளாதார அடிப்படையில், ஜப்பானைப் பின் தள்ளி விட்டு இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனினும் பொருளாதார வல்லுனர்கள் கூறி வருவதை போல், இனி வரும் காலங்களில் தான், இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக இருக்கும்.

பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவு.


             பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்த ஊழியர்களின் வருகையை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்பட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதால், ஊழியர்களின் வருகையை அதிகாரிகள் தொகுத்து துறை வாரியாக வைத்து கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
 

மாணவர்களே தேர்வு பயமா?


        பொதுத்தேர்வை எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெரும்பாலும் தேவையற்ற பதற்றத்தினாலேயே, குறைந்த மதிப்பெண்கள் பெறுவது, தேர்ச்சி பெறாமல் போவது போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே, ஏதோ ஒருவித பயம், பதட்டம்  உண்டாகிறது. தேர்வு எழுதும் போது விடைகள் தெரிந்திருந்தாலும் பதட்டத்தினால் சரியாக எழுத முடியாமல் தோல்வியுறுகின்றனர்.

ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்


         சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும், பிளஸ் 2 மாணவ, மாணவியர் மட்டும், அறிவியல் பாடங்களில், செய்முறை தேர்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமில்லாமல், தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கும், செய்முறை வகுப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive