Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறப்பு நடுநிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்: தமிழக அரசு.


      அமைப்பு சாரா தொழிலாளர்கள் படிப்பதற்காக சிறப்பு நடுநிலைப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தெரிவித்தார். இந்த பள்ளிகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்பட உள்ளதாக அவர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

ஆசிரியர்கள் போன்று விடுதிகாவலர்களையும் கல்வி ஆண்டு இறுதி வரை பணி நீட்டிப்பு செய்ய தமிழக முதல்வர் உத்தரவு.


         10.05.2012 அன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மான்ய கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளின் போதுவிடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் போது பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப் படுவதைப் போன்று அந்த கல்வி ஆண்டு நிறைவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

பொதுப் பாடத்திட்டமாக பெயர் மாறிய சமச்சீர் பாடத்திட்டம்!



 சமச்சீர் பாடத்திட்டம் என்ற பெயரை, பொது பாடத்திட்டம் என மாற்றி, முப்பருவத் தேர்வு முறையிலான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

செயல்திறன் குறைந்த குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி!


        செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் கட்டாய கல்வி சட்டத்தில் கொண்டு வரும் வகையிலான சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 011248 / அ 1/ 2012, நாள். 09.05.2012
அனைத்து மாவட்  தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் 15.05.2012 அன்று ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட  உள்ளது. அனைத்து மாவட்ட   தொடக்கக் கல்வி அலுவலர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு இயக்குனர் 
உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சி நடைபெறும் : SIEMAT,  Conference Hall, SCERT, Chennai - 600 006

தொடக்கக் கல்வி - ஆசிரியர் பணியிடங்கள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.


       அரசாணை  எண். 102 பள்ளிக்கல்வித் துறை நாள்.20.04.2012
ஆசிரியர் பணியிடங்கள் இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகிய 4526 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2012 முதல் 31.12.2014 வரை 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. இப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவரவர்கள் பதவிகேற்ப ஏற்ற முறையில் ஊதியம், அகவிலைப்படி மற்றும் இதர படிகள் பெற தகுதியுடையவராவர்கள்.

No May Month Salary for Part Time Teachers

பகுதி நேர ஆசிரியர்கள் மே மாதம் பள்ளிகளில் பணி புரிய தேவை இல்லை. 


அண்ணா பல்கலையில் மாற்றியமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை.


       தமிழகம் முழுவதும் பொறியியல் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணை மாற்றப்பட்டுள்ளதால் மாணவர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்.





சென்னை ஐகோர்ட்டால், 15 சதவீதம் கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட, 384 தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்தவுடன் இணையதளம் மூலம் மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு.


           பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண். 32373/ இஇ(மேநிக)/ 2012, நாள். 03.05.2012.
12-ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்தவுடன் இணையதளம் மூலம் மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் ந.க.எண். 32373/ இஇ(மேநிக)/ 2012, நாள். 03.05.2012 பதிவிறக்கம் செய்ய....

ஜூலை 2ம் தேதி மருத்துவக் மற்றும் பொறியியல் கல்வி கலந்தாய்வு


          மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூலை 2ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழுவின் செயலர், விரைவில் நியமிக்கப்படுவார் என, சுகாதாரத்துறைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூறினார்.

சாதி, வருமான, இருப்பிட சான்றுகளை 6ம் வகுப்பிலேயே பெறலாம்!


        எதிர்கால சிரமங்களைத் தவிர்க்க, 6ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - ஜூலை 2-ம் தேதி தொடக்கம்.


          பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.
எனினும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் பொதுப் பிரிவு கலந்தாய்வு, வழக்கம்போல் எம்.பி.பி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கி முடிந்த பிறகு, ஜூலை 9-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15% கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தகுதியுள்ள பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்: தமிழக அரசு.


          கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தகுதி உள்ள பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

TET - 14 ஆயிரம் மனுக்களில் பெயர்களே இல்லை: தேர்வு வாரியம் அதிர்ச்சி


           டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த 6.50 லட்சம் பேரில், 14 ஆயிரம் பேர், விண்ணப்பங்களில் தங்களது பெயர்களைக் கூட பூர்த்தி செய்யாமல் கோட்டை விட்டுள்ளனர்.
மேலும், 28 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்திருப்பதைக் கண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விண்ணப்பங்களைக் கூட ஒழுங்காக பூர்த்தி செய்யாதவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக வந்து என்ன செய்யப் போகிறார்களோ என, ஆசிரியர் தேர்வு வாரியம் கவலை அடைந்துள்ளது.

பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை.


              "பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்' என, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில், கட்டாயக்கல்விச் சட்டம் குறித்த கருத்தரங்கு மற்றும் மாநாடு ஆகியவை, சென்னையில் நேற்று நடந்தன. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல்வேறு ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்; வாடகைப்படியை உயர்த்த வேண்டும் என்பது உட்பட 11 தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2012 - 2013 ஆம் ஆண்டு முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து வெளியிட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 04.05.2012. 
               2012 - 2013 ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான முன்னுரிமை(SENIORITY) மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு,பதவி உயர்விற்கு தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் (PANEL) தயாரித்து நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பார்வை1, 2ல்  காணும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் / வழிகாட்டுதல் மற்றும் பார்வையில் காணும் அரசாணை ஆகியவற்றினை தவறாமல் பின்பற்றிட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பவானிசாகர் குடியுரிமை பயிற்சி நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவு.


          தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா பவானி சாகரில் உள்ள குடியுரிமை பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவது பற்றி ஆற்றிய உரை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையில்,  அரசு ஊழியர்களுக்கான அடிப்படைப் பயிற்சியின் அவசியத்தை கருத்தில் கொண்டும்; ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள குடியுரிமை பயிற்சி நிலையத்தை (Civil Service Training Institute) சிறந்த பயிற்சி நிலையமாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தைக் கருத்தில் கொண்டும்; 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள், நூலகம், உள் விளையாட்டு அரங்குகள், பதிவறைகள், ஆசிரியர்களுக்கான தனியறைகள், நிர்வாக அலுவலகத்திற்கான கட்டடம், காணொலி கண்காட்சி அரங்கம், தங்கும் விடுதிகள், பணிபுரிபவர்களுக்கான குடியிருப்புகள், நவீன உணவுக் கூடம், மருத்துவ மையம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி நிலையமாக பவானிசாகர் அரசு பயிற்சி நிலையம் மாற்றி அமைக்கப்படும்.
இந்த பயிற்சி நிலையத்தில், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் போன்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பல்வேறு வகையான நிர்வாக செயல்முறைகளில் அடிப்படைப் பயிற்சியும்; துணை வட்டாட்சியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது - மே மாதம் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு.


               தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது, மதிப்பெண்களை மதிப்பெண் பட்டியலுக்காக கணினியில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
அதுவும் இந்த வாரத்திலேயே முடிவடைந்து மே மாதம் இறுதி வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேர்வுகள் இயக்குநரக வட்டாரங்கள் கூறுகின்றன.

வழக்குத் தொடர்ந்த பள்ளிகள் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ் செல்வி.


             சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பள்ளிகள் மட்டுமே, கோர்ட் உத்தரவுப்படி, இடைக்கால ஏற்பாடாக, 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். வழக்கு தொடராத பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலித்தால், துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணை வெளியீடு

                   தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. 

 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார். 

 முதலாமாண்டு தேர்வு அட்டவணை:
  •   ஜூலை 4 - புதன் - கற்கும் குழந்தை  
  • ஜூலை 5 - வியாழன் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-1
  •   ஜூலை 6 - வெள்ளி - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 1, இளஞ்சிறார் கல்வி - 1 
  •  ஜூலை 9 - திங்கள் - ஆங்கில மொழிக் கல்வி - 1 
  •  ஜூலை 10 - செவ்வாய்- கணிதவியல் கல்வி -1  
  • ஜூலை 11 - புதன் - அறிவியல் கல்வி -1  
  • ஜூலை 12 - வியாழன் - சமூக அறிவியல் கல்வி-1  
2-ம் ஆண்டு தேர்வு அட்டவணை:
  •  ஜூன் 25 - திங்கள் - இந்திய கல்வி முறை 
  •  ஜூன் 26 - செவ்வாய் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் - 2  
  • ஜூன் 27 - புதன் - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உறுது, மலையாளம்) -2, இளஞ்சிறார் கல்வி - 2
  •   ஜூன் 28 - வியாழன் - ஆங்கில மொழிக் கல்வி -2  
  • ஜூன் 29 - வெள்ளி - கணிதவியல் கல்வி - 2 
  •  ஜூன் 30 - சனி - அறிவியல் கல்வி - 2  
  • ஜூலை 2 - திங்கள் - சமூக அறிவியல் கல்வி - 2

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பட்டியல்கள் தயாரிப்பு

      தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மே 15ம் தேதி முதல் மருத்துவ விண்ணப்பங்கள்

      இந்தக் கல்வியாண்டில்(2012), மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. இத்தகவலை, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

மே 11ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

IGNOU


Tentative Date sheets for June 2012 Term-End Examination 
click here and download 

TET - Child Education Questions (2 in 1)



Thanks to Kalvisolai

மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் மாதிரி கருத்துரு


    அரசு ஊழியர்களாக பணியாற்றும் மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் முழு மாதிரி கருத்துரு இங்கு தரப்பட்டுள்ளது. 



Click Here & Download Proposal & HM's Proceeding


Click Here & Download Director's Proceeding



        கருத்துருக்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெறப்பட்ட விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. 


Click Here & Download Letter

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive