Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏப்.15 முதல் சத்துணவு ஊழியர் ஸ்டிரைக்:

           தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.   
 

கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடம் காலி:1,400 அரசு பள்ளிகளில் மாணவர்கள் பாதிப்பு

              கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட ஆசிரியர் பணியிடங்கள்,1,400 அரசு பள்ளிகளில் காலியாக உள்ளதால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2,600 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஐ.டி., பிரிவு வளர்ச்சி தாக்கத்தால் அனைத்து பள்ளி மேல்நிலை வகுப்பிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இந்த பாடப் பிரிவில் சேர, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ரூ.3 லட்சம் வரையில் வருமானவரி விலக்கு நிதி அமைச்சகம் தகவல்

       மத்திய அரசு வரும் 28ம் தேதி 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் கருத்தில் கொண்டு மாத சம்பளம் வாங்குபவர்களின் வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

TNPSC : குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவிக்கு இன்று போட்டி தேர்வு

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவிக்கான, போட்டித் தேர்வு இன்று நடத்தப்படுகிறது.

காலியிடத்திற்கு கல்வித்தகுதியை நிர்ணயிக்காமல் தேர்வு:விளையாட்டு ஆணையம் மீது தேர்வாளர்கள் அதிருப்தி

           தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், உதவிப் பொறியாளர் பதவிக்கு, முறையான கல்வித்தகுதியை நிர்ணயம் செய்யாமல் தேர்வு நடத்தியது, தேர்வாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தேர்வை கண்காணிக்க 3 ஆண்டுகளாக ஒரே அதிகாரி:சேலம், நாமக்கலுக்கு நியமிப்பதில் சர்ச்சை

            பொதுத் தேர்வை கண்காணிப்பதில், சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு மட்டும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இணை இயக்குனர் பழனிச்சாமியை நியமித்திருப்பது, பல சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.

தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

            தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச், 5ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. மார்ச், 31ல் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 19ல் துவங்கி, ஏப்ரல், 10ம் தேதி நிறைவடைகிறது.

தேர்வு நேரத்தில் கிரிக்கெட் ஜுரம்; பெற்றோர், ஆசிரியர்கள் கவலை

              பொதுத்தேர்வு நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்துள்ளது.

கிராமப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை; இடமாறுதல் குளறுபடிகளால் சிக்கல்

            பள்ளிக்கல்வித்துறையின் கீழ், நிர்வாக இடமாறுதல்களால், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் அல்லல் படும் சூழல் உருவாகியுள்ளது.

உங்கள் மாணவர்களுக்கு காதலிக்க கற்றுக்கொடுங்கள்! - பாடசாலையின் சிறப்புக்கட்டுரை!

Image result for காதலர் தினம்
நிகழ்ச்சி 1 - 9 ஆம் வகுப்பு-
மாணவன் 1- வணக்கம் சார். உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லனும்.
நாம்- சொல்லுப்பா!
மாணவன் 1- அந்த பையன் (மாணவன் 2) 8 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பொம்பளை புள்ளைய லவ் பண்றான் சார்.

கட்டண சலுகைக்காக தவறான தகவல் அளித்த வழக்கு: டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு நோட்டீஸ்.

                 குரூப் 2 தேர்வுக் கட்டண சலுகை கோரியதில், தவறான தகவல் அளித்ததால், கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு: ஊழல் இல்லாத மாநிலமாக டெல்லியை உருவாக்குவேன் என பேச்சு

டெல்லி முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார்| படம்: கமல நரங். 
         டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டார்.

தினம் ஒரு அரசாணை!!!

              மாற்று திறனாளி அரசு ஊழியர் அலுவலக நேரத்திற்க்கு முன்னதாக வீட்டுக்கு செல்லலாமா?

ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'புதிய வசதி!!!

           ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள் மற்றும் பி்.ஓ.எஸ்.களில் கொண்டுவர வங்கிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன.

குறுவள மைய பயிற்சி - 28.02.2015

         அக இ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 28.02.2015 அன்று பயிற்சிகளின் தாக்கம் என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது

பிளஸ் 2 விடைத்தாள் ஒன்று திருத்த ரூ. 20 வழங்க வலியுறுத்தல்

            பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் ஒன்றுக்கு ரூ. 20 வழங்க வேண்டும் என கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

1- 9 ஆம் வகுப்பு பாட நூல்களுக்கு ஒப்புதல் பெற விண்ணப்பிக்கலாம்

            ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்பும் தனியார் பதிப்பகங்கள் மாநிலப் பொதுப் பள்ளி கல்வி வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்

   குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகலை வரும் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
 

பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம் - அப்துல்கலாம்

              தொழில் திறன் மிக்க இந்தியா உருவாகும் வகையில் பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியமாகும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை பேசினார்.  ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவிற்கு செய்யது அம்மாள் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.பாபு அப்துல்லா தலைமை வகித்தார்.
 

மிகுந்த மனஅழுத்தத்தில் இருக்கும் 1200 கணினி ஆசிரியர்கள்.

            அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும், கணினி ஆசிரியர்கள் பணி  நியமனம் செய்யப்பட்டது முதல், தற்போது வரை, கலந்தாய்வு நடத்தாமல், பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து புறக்கணித்து வருவதால், 1200 கணினிஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். 

'அட்டஸ்டேஷன் வேண்டாம்; சுய ஒப்புதல் போதும்!'

      ''உறுதிமொழி பத்திரம், 'நோட்டரி பப்ளிக்' எனப்படும், வழக்கறிஞரிடம் இருந்து சான்று போன்றவற்றை கைவிட்டு, விண்ணப்பதாரரே சுய உறுதிமொழி அளிக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அதை பின்பற்ற வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,'' என, மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் கூறினார்.டில்லியில் நேற்று நடைபெற்ற, லஞ்சத்தை ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர் ஜிதேந்திர சிங், இவ்வாறு கூறினார்.
 

ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

            தமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

குரூப் - 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

          குரூப் - 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி வைக்கும்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

பெங்களூரு: 10 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

              ''கர்நாடகா மாநிலத் தில் காலியாக உள்ள, 9,550 துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 1,137 உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, துவக்கக் கல்வித் துறை அமைச்சர், கிம்மனே ரத்னாகர் மேலவை யில் தெரிவித்தார்.

சர்வதேச ஆசிரியர் விருது: இறுதிச்சுற்றில் இந்தியர்

           அகமதாபாத்தைச் சேர்ந்த, ஆசிரியை கிரண் பிர் சேத்தி, சர்வதேச ஆசிரியர் விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
 

28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு!

           தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தை சார்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக 2004-05ஆம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பின்னர் 01.05.2006ல் முறையான ஊதியம் அளிக்கப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து அரசு உத்தரவு

GPF / TPF மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா???

           அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 
 

125 டோல்கேட்டுகளை மூட அரசு முடிவு

           நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 125 டோல்கேட்டுகளை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இவற்றில் ஏற்கனவே 61 டோல்கேட்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இனி பயணிகள் மற்றும் வணிக பயன்பாடு அல்லாத வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
 

பட்ஜெட் 2015: ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு எதிர்பார்க்கலாம்...?


          வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமான்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டை தனிமனிதன் முதல் கார்பரேட் நிறுவனங்கள், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
 

ஆசிரியர் குறைவு ! : ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில்... : தொடக்க கல்வியில் அரசு மெத்தனம்

               ஆதிதிராவிடர் நலத்துறையின், 25 தொடக்கப் பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. பிற பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
 

Public Exam - Instruction Guidelines

  • Public Exam - Instruction Guidelines - IO's Copy - Click Here
  • Public Exam - Instruction Guidelines - Custodian's Copy - Click Here
  • Public Exam - Instruction Guidelines - Route Officer's Copy - Click Here

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive