•தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும். •வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.
தொடக்கக்
கல்விப்பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்
தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு 25.10.2014
அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல்
160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி நான்கில் அடங்கிய
இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III
பதவிகளுக்கு உரித்த காலிப் பணியிடங்களுக்கான, நான்காம், மூன்றாம் மற்றும்
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை
ஒதுக்கீடு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை, TNPSC அலுவலகத்தில்
நடைபெறும்.
அங்கன்வாடி குறு மையத்தில் இருந்து, பொது
மையத்திற்கு இடமாறுதல் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சர்வீஸ் ரத்தாகும்
என்பதால், அவர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
வால்பாறையில் உள்ள பள்ளிகளில் கூடுதல் முதன்மை
கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வால்பாறையில் உள்ள பல்வேறு
பள்ளிகளில், கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா நேரில்
ஆய்வு நடத்தினார். வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.ஏ.,
அலுவலகம், எஸ்.எஸ்.ஏ., உண்டு உறைவிடப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில்
நேரடி ஆய்வு நடத்தினார்.
இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை,
பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன் இணைந்து பெற்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த,
கைலாஷ் சத்யார்த்தி, 60, குழந்தைகள் நலனுக்காக இந்தியாவில் மட்டுமின்றி,
140 நாடுகளில் போராடி வருகிறார்.
23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி
நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு
இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து
முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் வன்முறையை தவிர்க்க காந்திகிராம பல்கலை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.ஆசிரியர்களை தாக்குவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவது, பாலியல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற கலாசாரம் பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.
நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களும் விடுமுறை
அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பிளஸ் 2 படிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம் தொலைதூர கல்வியில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.உயர்நிலைப் பள்ளிகளில், தருமன், உமா, சுகுணா உள்ளிட்ட, ஆறு பேர், ஓவிய ஆசிரியர்களாக, 1985 முதல் 1987 வரையிலான கால கட்டத்தில், நியமிக்கப்பட்டனர். இவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளனர்.
பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாநில அரசு அமைக்க உள்ள கல்விக் கட்டண நிர்ணயக் குழுவில், மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.
குரூப்-4 தேர்வில் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பை
கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4,963.
இதற்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி நவம்பர்-12. தேர்வுகள் வரும்
டிசம்பர்-21ம் தேதி நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு.
கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், திபெத்திய பள்ளிகள்
மற்றும் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்
பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணியில் சேர
வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டியது கட்டாயமாகும்.
'அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கி
உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய வேண்டி
யிருப்பதாக, கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர
புத்தகங்களை அச்சிடும் பணியை, விரைவில் ஆரம்பிப்போம்' என, பாடநூல் கழக
வட்டாரம் தெரிவித்தது.
தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்
கோரி, வரும் 29ம் தேதி, மாநிலம் முழுவதும், முதன்மைக் கல்வி அலுவலகங்கள்
முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.