Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்:பல்கலை துணைவேந்தர் ஆலோசனை

        கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில் பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான காலஅளவு இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அமலாகிறது.

படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்கள் அதிகரிப்பு?

       தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம் வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட்சத்து, 8 ,224 மாணவ, மாணவியர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

செயல்வழிக்கற்றல் கல்வியில் தொய்வு:புது வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு

       தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் கல்வி முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது. 
 

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

           அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்த நிலையில், அரசு பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கான ஆர்வம் அதிகரித்தது.

‘இ-டிக்கெட்’ விரைவாக பெற நவீன சர்வர்கள்

        பயணிகளுக்கு இணையதளம் மூலம் எடுக்கும் ‘இ-டிக்கெட்’கள் விரைவாக கிடைப்பதற்கு வசதியாக ஐஆர்சிடிசி நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து ஐந்து சர்வர்களை வாங்கியுள்ளது.
 

பி.எட்.–எம்.எட். படிப்புகளில் யோகா பாடம் சேர்ப்பு: கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

     நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், தாளாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
 

SSA Training

        அகஇ-2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான கதை புத்தகங்களுக்கான ஓவியங்கள் வரைதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல்!

30 ஆம் தேதி நடைபெறும் SSA கணினி விவரப்பதிவாளர் காலிப்பணி - விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

         அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் காலியாகவுள்ள கணினி விவரப்பதிவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு பாச்சல் பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என அறிóவிக்கப்பட்டுள்ளது.

Next Primary CRC Date: 11.7.2015

 11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை

சென்னை பிளஸ்–2 மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.

           மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வை எதிர் கொள்ளும் மாணவ – மாணவிகள் கூடுதல் மதிப்பெண் வாங்குவதற்காக பல்வேறு வினா – விடை பயிற்சி கையேடுகளை வாங்குவார்கள்.


இடைநிற்றல் உதவித்தொகைக்கு 'ஜீரோ பேலன்ஸ்' வங்கிக்கணக்கு

        காரைக்குடி:2015--16-ம் கல்வி ஆண்டிற்கான 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்து, 'ஜீரோ பேலன்ஸில் அவர்கள் வங்கி கணக்கு துவக்க பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்

       மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளியாக மாற்றும்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

உடனடித் தேர்வு: தேர்வர்கள் அலைக்கழிப்பா?

        பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இதற்கு கல்வித் துறையினர் உரிய விளக்கத்தை அளித்தனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான உடனடித் தேர்வு எழுதுவோருக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. 
 

இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்கள்:மன்னர் ஜவகர் தகவல்

        “கடந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்களே சேர்ந்துள்ளனர்,” என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரி ஆண்டு விழா நிகழ்ச்சி யில், அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் 22 மாநில பல்கலை கழகங்கள், 3 மத்திய பல்கலை கழகங்கள், 26 நிகர்நிலை பல்கலை கழகங்கள் உள்ளன. இன்ஜினியரிங் படிப்புக்கென அண்ணா பல்கலை உள்ளது. இன்ஜி., கல்லுாரி எண்ணிக்கையில் ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இன்ஜி. கவுன்சிலிங் ஒரே நேரத்தில் 50 பேர் தேர்வு செய்யலாம்

       கவுன்சிலிங் ஏற்பாடு குறித்து தமிழ்நாடு இன்ஜி. மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்ததும் கல்லுாரிக்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்தில் முன்தொகை செலுத்த வேண்டும்.இதற்காக கவுன்சிலிங் அரங்கின் உள்ளே வங்கிகளின் சார்பில் எட்டு சிறப்புக் கவுன்டர்கள் உள்ளன.

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை துவக்கம்:இன்று'சிவில்' படிப்பு

        பி.எஸ்சி., பாலிடெக்னிக் முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான 'கவுன்சிலிங்' காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரியில் நேற்று தொடங்கியது. ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. 91 ஆயிரத்து 371 இடங்கள் காலியாக உள்ளன.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்

      உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
 

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

        அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 
 

யூஎஸ்பி வழியாக சார்ஜ் ஆகும் ஜீப்ரானிக்ஸின் புதிய பவர் கிரிப்



     சார்ஜர் இல்லாமல் மொபைல் போன், டேப்லட்டை நேரடியாக USB போர்ட்டுகளிலிருந்துசார்ஜ் செய்யும் வகையில் புதிய பவர் ஸாக்கெட்டை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.  

மருத்துவ படிப்பு: சேர்க்கைக் கடிதம் எப்போது கிடைக்கும்?

   எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைப் பெற்ற மாணவர்கள், தங்களுக்கான சேர்க்கைக் கடிதத்தை இன்று 11 மணி முதல் கலந்தாய்வு நடைபெற்ற ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.5,000 கோடியை எக்ஸ்சேஞ்ச் டிரேடர் பண்டுகளில் நடப்பாண்டுக்குள் முதலீடு செய்ய உள்ளது. 

புதுச்சேரியில் எஸ்சி பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைப்பு

     புதுச்சேரியில் நாளை நடைபெறவிருந்த எஸ்சி பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மொபைல் பயன்பாட்டாளர்களுக்காக தேடு தளத்தை புதுப்பித்துள்ளது யாகூ

   யாகூ தன் மொபைல் சர்ச் இன்ஜினை புதுபித்துள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள தேடு தளத்தில் படங்கள், வீடியோக்கள் மட்டுமின்றி விமர்சனங்களையும் வைக்க முடியும்
இதுகுறித்து யாகூ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவின் துணை அதிகாரி கூறும் போது மொபைல் மூலம் தேடுதலுக்கு தேவையான முடிவில்லா ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளோம். 

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வரும்: ரெயில்வேயின் புதிய திட்டம் அறிமுகம்

       தவிர்க்க முடியாத சமயங்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால், அந்த ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இனி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்து சேரும். இதற்கான வசதியை இந்திய ரெயில்வே தொடங்கி உள்ளது.

அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் !

      தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

மதுரை காமராஜர் பல்கலைகழகம் - 2015 - 2017 ஆம் ஆண்டிற்கான தொலைதூரக்கல்வி B.ED விண்ணப்பம்

      மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான (2015-16) பி.எட்., (இளங்கலை கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல் வினியோகிக்கப்படுகின்றன.
 

1 லட்சம் மேல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு: மின்னணு முறையில் மட்டுமே அனுமதி?

            ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற மின்னணு பரிமாற்ற முறைகளில் மட்டுமே மேற்கொள்ளும் வகையில் கட்டுப்பாடு கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மருத்துவக் கலந்தாய்வில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

     எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் உள்ளிட் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Special Cash Incentive - Online Entry Regarding

          பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல்வியாண்டிற்கான 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்களை இணையவழி மென்பொருளில் 26.06.2015 முதல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு

CRC ஈடுசெய் தற்செயல் விடுப்பு பற்றி தெளிவான உத்தரவு, ஒரு சில தினங்களில் - TNPTF

        தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர். இச்சந்திப்பில் மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலப் பொதுச்செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலப் பொருளாளர் திரு.ஜீவானந்தம், துணைப் பொதுச் செயலாளர் திரு.மயில், STFI பொதுக்குழு உறுப்பினர் திரு.சரவணன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் மாத்யூ மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive