Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-1 தேர்வு: 25 பணியிடங்களுக்கு 1.25 லட்சம் பேர் போட்டி


       டி.எஸ்.பி., - ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, 16ம் தேதி, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. மிக குறைந்த காலி இடங்கள் என்ற போதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 1.26 லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.

ஆதிதிராவிட பள்ளிகளில் சேரும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு


     ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேல்நிலைப் பள்ளிகளுக்கு, டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 20ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடக்கிறது.

பள்ளிக்கு அருகே பொழுதுபோக்கு மையம்: சீனாவில் தடை


         சீனாவில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க, அந்நாட்டு அரசு, தடை விதித்திருக்கிறது.
சீனாவில், பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதில், அந்நாட்டு கலாச்சார அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் இருந்து, பொழுதுபோக்கு மையங்கள் நீண்ட தொலைவில் அமைக்கப்பட வேண்டும்.

கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விண்ணப்பம் வினியோகம்


        கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம், வினியோகம் துவங்கியது.
கல்பாக்கத்தில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணுமின் திட்ட நிறுவனம் உட்பட, அணுசக்தி தொடர்பான, பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.


தேவையானதை மட்டுமே படிக்க வேண்டும்: குரூப் 1 தேர்வு வெற்றிப் பெண்


           "கண்டபடி, தேவையற்றதை எல்லாம் படிக்காமல், தேவையானதை, தேர்வில் எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்பதை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப படித்தால், கண்டிப்பாக போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும்,&'&' என, குரூப்-1 தேர்வில், முதலிடம் பெற்ற, மதுராந்தகி கூறினார்.


தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிய ஆலோசனைகள்


       பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம் டி.ஏ.வி., பள்ளியின் முன்னாள் முதல்வரும், பாவை பள்ளிக் குழுமத்தின் இயக்குநருமான சதிஷ்:

        மத்திய, மாநில அரசுகள் தங்களது பள்ளி பாடத்திட்டத்தில் சி.சி.இ., (தொடர் மதிப்பீட்டு முறை) பின்பற்றி வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் மன அழுத்தத்தை இம்முறை மாற்றிவிடும்.

அரசு தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு பரிந்துரை


        தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து வருகிறது.


பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிறதா?


             தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு, மாதம் ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக சில மாதங்களுக்கு முன் அரசு நியமித்தது. 
 
 

கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் பற்றி அறிவோமா?


          கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் என்ற நிறுவனமானது, ஆர்கிடெக்டுகளின் பதிவேட்டைப் பராமரிப்பதோடு, இத்துறை தொடர்பான கல்வி மற்றும் தொழிலை, இந்தியாவில் முறைப்படுத்துகிறது. ஒருவர் ஆர்கிடெக்டாக தொழில்புரிய வேண்டுமெனில், இந்த கவுன்சிலில் பதிவுசெய்ய வேண்டும்.

10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012


10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அறிவுறுத்தல்



      10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அறிவுறுத்தியுள்ளார்.

ஆங்கிலப் பள்ளி துவக்க அனுமதி கோருகிறது முஸ்லிம் அமைப்பு


         இதுவரை உருது மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த, வட மாநில முஸ்லிம்களின் முக்கியமான, தருல் உலூம் தியோபந்த் வக்ப் அமைப்பு, உத்தர பிரதேசத்தில், ஆங்கில கல்வி முறை பள்ளி துவக்க அனுமதி கோரியுள்ளது.

உயர் கல்வி தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியிட கோரிக்கை

 
         "தன்னாட்சி கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே, ஒற்றை சாளர முறையில், மாணவர்கள் குழப்பமின்றி விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்து, தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


SSLC Study Material




Thanks to Mr. S. Ravi Kumar,B.Sc., B.Ed., GHS, Arangal Durgam, Vellore District.


CPS CALCULATION EXCEL FORM FOR PANCHAYAT UNION TEACHERS




THANKS TO S.SATHYANARAYANAN
BT ASST IN MATHS
PUMSCHOOL
SANGEETHAVADI
ARNI BLOCK
ARNI T.K
TVMALAI DIST
 
 
 

HEADMASTER APPOINTMENT IN MINORITY SCHOOLS, CORRESPONDENT DECISION IS FINAL - RTI NEWS


         அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பனி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும். - பள்ளி கல்வி இயக்குனர்.







 RTI  மூலமாக பெறப்பட்ட தகவலை நமக்கு ஈமெயிலில் அனுப்பி வைத்த திரு.கமல் கண்ணன், சென்னை அவர்களுக்கு நன்றி.!

பிரசன்டேஷன் - இப்படித்தான் இருக்க வேண்டும்!


          ஒரு குறிப்பிட்ட துறை என்றில்லை. அனைத்திற்குமே, பிரசன்டேஷன் மற்றும் கேள்வி-பதில் திறன்கள் ஆகியவை பிரதான அம்சங்களாகிவிட்டன. ஒருவரின் பணி வெற்றிக்கு, பிரசன்டேஷன் திறனும், கேள்வி-பதில்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை தீர்மானிக்கின்றன என்றால் அதில் மிகையில்லை.

பிளஸ் 2 செய்முறை தேர்வு மையங்களில் மின்தடைக்கு விலக்கு


      பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள் மார்ச் 1ல் துவங்குகிறது. முன்னதாக, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான செய்முறை தேர்வு பிப்.,1 ல் துவங்கியது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வில், இயற்பியல் பாடத்தில் அளவீடுகளை குறிக்கவும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கும் மின்சாரம் அவசியம்.

அனைத்து அரசு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை


      "தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்



     இந்தியாவின் மறைந்த பிரபல தொழிலதிபர் ஜே.என்.டாடாவின் எண்ணத்தில் உதித்ததுதான் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் எனப்படும் ஐஐஎஸ்சி.
கடந்த 1896ம் ஆண்டே இந்நிறுவனத்தை துவங்குவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டாலும், முழுமையாக செயல்படுவதற்குரிய அரசின் சட்டம் 1909ம் ஆண்டுதான் வெளியானது. ஆனால், 1904ம் ஆண்டே, ஜே.என்.டாடா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்: எஸ்.ஐ. பலி - Dinamalar


      மேற்குவங்கத்தில், கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான பிரச்னையில், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மாணவர்களுக்கு இடையே, நேற்று பயங்கர மோதல் வெடித்தது.

டான்செட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு



         அண்ணா பல்கலை, இந்த கல்வியாண்டுக்கான "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு(டான்செட்)" தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல்கலைகளில் வருகிறது கவுன்சிலிங்



        வரும் கல்வியாண்டு முதல் எம்.ஏ/ எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்திலும் இலவச லேப்டாப்!


         தமிழக அரசின், இலவச லேப்டாப் திட்டத்தை போல உத்திரபிரதேச அரசும், பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்குகிறது.
 

Exam Dates - Reminder


யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - பிப்ரவரி 17

ஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை


கல்வியை இலவசமாகத் தர வேண்டும்; ஆனால், தேர்ச்சி இலவசமாகிவிடக் கூடாது என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.


         ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்க நிறைவு விழாவில் அவரது நிறைவுரை:
 
ஞாயிறுதோறும் வெளிவரும் தமிழ்மணியை ஏன் புத்தகமாகக் கொண்டுவரக் கூடாது என்று பலரும் கேட்கின்றனர். அது புத்தகமானால், தமிழாசிரியர்கள் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே பயன்படும்.
 

Tips to Improve the Performance in SSLC/+2 EXAMINATIONS




Thanks to CEO Site, Vellore.


மூளை செயல்பாட்டை ஊக்குவிக்க “ஒலி அலைகள்”


       மாணவர்களின் அறிவுவளர்ச்சியை ஊக்குவிக்க ஒலி அலைகளைப் பயன்படுத்தும் (PHONEMIC INTELLIGENCE) என்ற புதிய முறையை கண்டறிந்துள்ளதாக திரிபுரா ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: பாட வாரியாக காலி இடங்கள் விவரம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்


  
   அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.

உதவி பேராசிரியர் நியமனம்
      தமிழ்நாட்டில் 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் காலியாக உள்ள 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி அவசியம் இல்லை.

மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?


         மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 28ம் தேதி, 2013-14ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். 2014ம் ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தல், பணவீக்க உயர்வு, அதிகரித்துள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு, அனைத்து தரப்பினருக்கான பட்ஜெட்டை உருவாக்கும் பெரும் பொறுப்பு அவருக்கு உள்ளது.


பொதுவேலைநிறுத்தம்: 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பர்

             வரும் 20, 21-ம் தேதி நடைபெறும் பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் 50,000 ஆசிரியர்கள் பங்கேற்பர் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் முருக.செல்வராசன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?


         மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 28ம் தேதி, 2013-14ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். 2014ம் ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தல், பணவீக்க உயர்வு, அதிகரித்துள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு, அனைத்து தரப்பினருக்கான பட்ஜெட்டை உருவாக்கும் பெரும் பொறுப்பு அவருக்கு உள்ளது.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive