Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ENNUM EZHUTHUM BASELINE REPORT DOWNLOAD 2023-24

 

CTET Exam - Notification!


The candidates registered for 17th edition of Central Teacher Eligibility Test ( CTET ) are hereby informed that the CTET examination will now be conducted in offline mode i.e. pen - paper ( OMR ) based on 20.08.2023 ( SUNDAY ) all over India in the specified cities . 
The detailed Information Bulletin containing details of examination , syllabus , languages , eligibility criteria and other relevant information is already available on CTET official website https://ctet.nic.in

பள்ளிக்கல்வி வளர்ச்சி தொடர்பாக சென்னையில் ஜூன் 22, 24-ல் கலந்துரையாடல் கூட்டம்


பள்ளிக்கல்வி வளர்ச்சி மற்றும் பணியாளர் நலன் குறித்து, ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை அறிந்துகொள்ள ஏதுவாகவும், பள்ளிக்கல்வியின் வளர்ச்சி சார்ந்தும் துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 22, 24-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.



இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா மற்றும் துறைசார்ந்த இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். முதல்நாளில் தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறும். 2-ம் நாளில், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், நூலகர்கள் மற்றும் இதர துறைசார் அலுவலர்கள், பணியாளர்களுக்கான கூட்டம் நடத்தப்படும்.

இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சங்கத்தில் இருந்து 3 பேரும், பதிவுசெய்த சங்கங்களில் இருந்து 2 பேரும் பங்கேற்கலாம்.

வேளாண் பல்கலை. தரவரிசைப் பட்டியல் வெளியீடு!


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


இது தொடர்பாக பல்கலை. துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நாகையில் உள்ள டாக்டர்ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை, நடப்புக் கல்விஆண்டுக்கு இளம் அறிவியல் பட்டப்படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றன.



வேளாண் பல்கலை.யின் 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 பட்டயப் படிப்புகள், மீன்வளப் பல்கலை.யின் 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளில் 5,361 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.



பெறப்பட்ட 41,434 விண்ணப்பங்களில் 36,612 விண்ணப்பங்கள் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாணவி ஜி.திவ்யா, மதுரை மாணவர் பி.ஸ்ரீராம், தென்காசி மாணவி எஸ்.முத்துலட்சுமி ஆகியோர் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.



அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 10,887 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 403 மாணவர்கள்சேர்க்கப்படுவார்கள். இவர்களது கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும்.



தமிழ் வழியிலான வேளாண்மை, தோட்டக்கலைப் பிரிவில் தலா 50 இடங்கள் உள்ளன. இதற்கு 9,997 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினருக்கான கலந்தாய்வு வரும் 19-ம் தேதி முதல் நடைபெறும். ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். இவ்வாறுஅவர் கூறினார். பதிவாளர் தமிழ்வேந்தன் உடனிருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி - கல்வித் தரம் குறித்து அச்சம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 138 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 64 பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 138 பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மே மாதம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணி மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் பெற்றுச்சென்றனர். இப்பணி மாறுதல் கலந்தாய்வுக்கு பின் மாவட்டத்தில் 42 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், 22 அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாகின.



இதற்கு காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் அவர்களது சொந்த மாவட்டம் அல்லது அருகிலுள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டனர்.



தற்போது 64 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இன்றி அப்பள்ளிகளின் மூத்த ஆசிரியர் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர். ஆசிரியர்கள் கலந்தாய்வில் நீதிமன்ற உத்தரவால் எந்த பணியிடத்திலும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவில்லை. பணி மாறுதல் கலந்தாய்வு மட்டும் நடைபெற்றதால், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. அதனால் தலைமையாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படவில்லை.



நிரந்தர தலைமையாசிரியர் இன்றி பள்ளிகள் நடைபெற்றால் நிர்வாகம் திறம்பட செயல்பட முடியாது. மேலும் தலைமையாசிரியரின் பணியை மற்றொரு ஆசிரியர் பொறுப்பு வகிப்பதால் அவரும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



மேலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுவதற்குள் காலியாக உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நடந்துமுடிந்த பிளஸ் 2 அரசு பொதுதேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 96.3 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடம் பிடித்தது. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டில் மாநிலத்தில் 3-ம் இடம் பிடித்திருந்த நிலையில் 12-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 93.86 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 12-ம் இடம் பிடித்தது.



கடந்த 2022-ம் ஆண்டில் 5-ம் இடம் பிடித்திருந்த நிலையில் 12-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மாணவர்கள் தேர்ச்சியில் இந்தாண்டு பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில், தற்போது 64 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லாமல் செயல்படுவது மேலும் கல்வித்தரம் குறைய வாய்ப்புள்ளது என ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

7,000 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை


தமிழக அரசு பள்ளிகளில், 7,000 இடங்களில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில், 37,000 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.



இவற்றில், 6,000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி பயிற்சி



மாநிலம் முழுதும் உள்ள, 24,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களை, இடைநிலை ஆசிரியர்களே விளையாட வைக்கின்றனர்.



அங்கு உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. இந்த மாணவர்களுக்கு, மாநில, தேசிய போட்டிகள் கிடையாது.



அதே நேரம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகள் உண்டு.



இதற்காக மாணவர்களை, பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வழியே, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்.



இதுகுறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்க மாநில தலைவர் சங்கரபெருமாள் கூறியதாவது:



ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, வாரம் இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த பாட வேளைகளை உடற்கல்வி ஆசிரியர்களால் நடத்த முடிவதில்லை.



பெயரளவுக்கு தேர்வு



கிட்டத்தட்ட, 7,000 நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கவில்லை. உடற்கல்விக்கு என்று தனியாக பாட புத்தகம் கிடையாது. பெயரளவுக்கு தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.



பள்ளிக்கல்வி இயக்குனர், செயலர் மற்றும் அமைச்சர், ஒவ்வொரு நடுநிலைப் பள்ளியிலும், ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடற்கல்வி பாடங்களை உரிய முறையில் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மாதிரி பள்ளிகளுக்கு 422 ஆசிரியர்கள் நியமனம்


அரசு மாதிரி பள்ளிகளுக்கு, 422 ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


தமிழகத்தில், 38 மாவட்டங்களில், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற தகுதியான, 'டாப்பர்' மாணவர்களை இந்த பள்ளிகளுக்கு மாற்றி, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த மாதிரி பள்ளிகளில், கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தது.



இதையடுத்து, பல்வேறு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கணக்கிட்டு, துறை ரீதியாக அனுபவம் பெற்ற பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 422 பேர், மாதிரி மேல்நிலைப் பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் வேறு பள்ளிகளில் இருந்து மாற்றுப் பணி அடிப்படையில், இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு!

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மூன்று பாடப்பிரிவுகள் தமிழில் துவங்கப்படும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரி செயல்பாடுகள் மற்றும் வருங்கால புதிய திட்டங்கள் குறித்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார்.



இதில், உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.



கூட்டத்துக்கு பின் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:



அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழி படிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



வரும் ஆண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளில், அடுத்த ஆண்டு முதல் தமிழ் வழி படிப்புகள் துவங்கப்படும்.



சிவில், மெக்கானிக்கல் பாடங்களில் தமிழ் வழி படிப்பில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும்.



இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் வேலை வாங்கி தருவதாக புரோக்கர்கள் வசூல்!!!


ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களில், பள்ளி மேலாண்மை குழு சார்பில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சில அரசியல் புரோக்கர்கள் தற்போதே எம்.எல்.ஏ., அமைச்சர் சிபாரிசில் வேலை வாங்கி தருவாக கூறி ரூ.5 லட்சம் வரை பேரம் பேசி வருகின்றனர்.


நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்பலாம்.



மதிப்பூதியம் மாதம் முறையே ரூ.12ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும், முதுகலைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும், என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.



இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட உள்ளனர். முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு எந்தப்பள்ளியில் காலியிடம் உள்ளது என தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்றனர்.



அவர்களிடம் சில அரசியல் புரோக்கர்கள், அமைச்சர், எம்.எல்.ஏ., சிபாரிசில் தற்காலிக ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ. 3 முதல் 5 லட்சம் வரை கேட்கின்றனர்.



கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் கண்காணிக்கிறோம். மாணவர்கள் நலன் கருதி பள்ள மேலாண்மை குழு மூலம் ஆசிரியரை நியமிக்கலாம். இப்பணி நிரந்தரம் கிடையாது.

வேறு ஆசிரியர்கள் அந்த பணியிடத்துக்கு வரும் வரை பணிபுரியலாம். எனவே விண்ணப்பதாரர்கள் அரசியல்வாதிகள், புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், என்றனர்.

NEET - Best Coaching Centre

 




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.23

 


வாடிகன் நகரம்



CEO to JD Promotion Order Released!

Schemes Updation in TNSED Schools App

 

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் (Hitech Labs) மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!

 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் (Hitech Labs) மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!

 

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive