Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வா - தேர்தலா என்பதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நெருக்கடி

தேர்தல் வருவதால், பாடங்களை விரைவில் முடிக்குமாறு, பள்ளி கல்வித் துறையும்; தேர்வு வருவதால், விரிவாக பாடங்களை நடத்துமாறு, தேர்வுத் துறையும் உத்தரவிட்டு உள்ளதால், ஆசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.


'இன்ஸ்பையர்' விருது போட்டி அதிகாரிகள் மீது ஆசிரியர்கள் புகார்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், 'இன்ஸ்பையர்' விருது; ஜவஹர்லால் நேரு தேசிய விருது ஆகியவற்றுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக, இயக்குனர் அலுவலகம் மூலம், சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. 

ஆன்லைனில்' காப்பியடித்து இனி பிஎச்.டி., வாங்க முடியாது

'ஆன்லைனில்' காப்பியடித்து, பல்கலைகளில், பிஎச்.டி., பெறும் முறைக்கு முற்றுப்புள்ளி வருகிறது. சென்னை பல்கலையில், இதற்கான புதிய சாப்ட்வேர், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும், மின்னணு ஆளுமையை பலப்படுத்த, மத்திய, மாநில அரசுத் துறைகள் முயற்சிக்கின்றன. உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வியிலும், மின்னணு ஆளுமை மற்றும் கணினி வழி பயிற்சியை கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட்டு உள்ளது. 

6,500 பணிகளுக்கு இன்று தேர்வு

 மத்திய அரசில், தபால் பிரிவு உதவியாளர், தகவல் பதிவாளர் (டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) மற்றும் கீழ்நிலை கோட்ட எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு, 6,578 இடங்கள் காலியாக உள்ளன.

நவம்பர் 2015 ~ முக்கிய நாட்கள்

(பொது & கல்வித்துறை)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

📆📆📆📆📆📆📆📆📆📆📆📆
0⃣1⃣
மைசூர் மாகாணம் கருநாடக மாநிலமான நாள்
புதுச்சேரி மாநில விடுதலை நாள்
0⃣2⃣
பன்னாட்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றத் தண்டனை ஒழிப்பு நாள்
கல்லறைத் திருநாள் (RH)
இடைநிலை ஆசிரியர்களுக்கான (TET) 5 நாள் அறிமுகப் பயிற்சி
0⃣3⃣
அமெர்த்தியா சென் பிறந்த நாள்

சிறப்பு பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை பரிதாப நிலையில் மாற்றுத்திறனாளிகள் கல்வித்தரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான, 23 சிறப்புப்பள்ளிகளில், 16 பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை. அதனால், அவர்களது, கல்வித்தரம், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கென, 23 அரசு சிறப்பு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பார்வையற்றோருக்கான பள்ளி 10, காதுகேளாதோருக்கான பள்ளி 11, கை, கால் ஊனமுற்றோர் மற்றும் மூளைவளர்ச்சி குன்றியோருக்கு தலா, ஒரு பள்ளி அமைந்துள்ளன.


8ம் வகுப்பு படித்த 859 பேருக்கு வேலை

கால்நடை துறையில், புதிதாக, 859 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு மனு செய்வோர், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; 2015 ஜூலை 1ம் தேதி, 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

'பிளாஸ்டிக்' தேசிய கொடி பள்ளிகளுக்கு அரசு தடை

பள்ளி, கல்லுாரிகளில், 'பிளாஸ்டிக்' தேசியக் கொடியை பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லுாரி விழாக்களில், பலவிதமான தேசியக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன; விழா முடிந்ததும் வெளியே வீசப்படுகின்றன. 

திருக்குறளை கொரிய மொழியில் வெளியிடும் பணியை பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் ஜெயலலிதா உத்தரவு

திருக்குறளை கொரிய மொழியில் வெளியிடும் பணியை பொங்கலுக்குள் முடிக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

91 அரசு விற்பனை அங்காடிகளில் இன்று முதல் ஒரு கிலோ துவரம் பருப்பு 110

துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் அறிவித்தபடி, 91 அரசு விற்பனை அங்காடிகள் மூலம் இன்று முதல் துவரம் பருப்பு கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் துவரம் பருப்பு விலை திடீரென விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.210 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது.

செல்வமகள் சேமிப்பு திட்டம் வயது வரம்பு அதிகரிப்பு

'செல்வமகள் சேமிப்பு' திட்டத்தில், பெண் குழந்தைகளை சேர்ப்பதற்கான வயது வரம்பு, 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரியில், 'சுகன்யா சம்ரிதி' என்ற பெயரில், 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் தமிழகத்தில், செல்வமகள் சேமிப்பு திட்டம் பெயரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பி.எட்., கல்லூரிகளில் போலி முதல்வர்கள்?ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிர்ச்சி

தமிழகத்தில் செயல்படும், பல பி.எட்., கல்லுாரிகளில் முதல்வர்களே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 பி.எட்., கல்லுாரிகளும், 600 சுயநிதி கல்லுாரிகளும் செயல்படுகின்றன. 

12 கல்லூரிகளுக்கு 'நாக்' அங்கீகாரம்

மத்திய நிதியுதவி பெறும் வகையில், 12 தமிழக கல்லுாரிகளுக்கு, 'நாக்' அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் நிதி மற்றும் சலுகைகளை பெற, 'நாக்' எனப்படும் தேசிய தர அங்கீகார நிறுவனத்தின் தகுதி சான்றிதழ் பெற வேண்டும். 

காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளுக்காக "விகல்ப்"திட்டம் அறிமுகம்

முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ள ரயில் பயணிகளின் வசதிக்காக, அதே வழித்தடத்தில் பயணிக்கும் மற்ற ரயில்களில் அவர்களுக்கு இடமளிக்கும் "விகல்ப்" என்ற புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை நாளை அறிமுகப்படுத்தவுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் கடைசி வரை உறுதியாகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் இயங்கும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டைமுன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ரயில்வே துறை கூறியுள்ளது.

இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே வழித்தடத்தில் இயங்கும்அடுத்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாற்று ரயில் திட்டம் நாளை முதல் தில்லி - லக்னோ மற்றும் தில்லி - ஜம்மு வழித்தடத்தில் இயங்கும்ம் ரயில்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைப்பு: டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.அதேசமயம் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. மேலும் டீசல் விலை 50 குறைக்கப்பட்டது.இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசா குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

கனமழை - பள்ளிகளுக்கு இன்று (31/10/2015) விடுமுறை

கனமழை காரணமாக இன்று 31/10/2015 சனிகிழமை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர் 

ஆய்வு கூட்டத்தில் அவதூறாக பேசிய அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கண்டித்து தலைமை ஆசிரியர்கள் வெளிநடப்பு

செய்யாறு  தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகள் வாரியாக தேர்ச்சி  சதவிகிதம் குறித்து புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு வந்தார். கூட்டம் மாலை வரை நடைபெற்றது. 

366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 366 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். இதற்கான இணைய வழி (ஆன்-லைன்) கலந்தாய்வு மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி

அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது. 

1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்

தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.) முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in,​​ www.cbse.nic.in​ ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!

நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.

அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!

மாணவர்கள் சிந்தித்து, பதில் அளிக்கும் வகையில், அறிவியல் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார். கரூர், புலியூர் செட்டிநாடு பொறியல் கல்லூரியில், தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:

மழலையர் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை வெளியிட உத்தரவு

தமிழகத்தில், அனுமதியின்றி, 700 மழலையர் பள்ளிகள் இயங்குவதாகவும், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர், மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 

மூன்று ஆண்டு சட்ட படிப்புக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் 'ஓகே!'

'மூன்று ஆண்டு சட்டப் படிப்பு ரத்து; பார் கவுன்சில் பொறுப்பை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு நவ., 2ல் வெளியீடு

தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள், நவ., 2ல் வெளியாகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்டம்பரில் நடந்த தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், நவ., 2 மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. 

செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு

தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட 73 லட்சம் கணக்குகளில் 11 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்ததிட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 328 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

குரூப் -- 1 ஹால் டிக்கெட்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நவ., 8ம் தேதி நடத்தப்படும், குரூப் - 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

1590 PG, 6872 BT POST OCTOBER MONTH PAY ORDER




இரவு நேர இணையப் பயன்பாட்டில் 50 சதவீதம் காலையில் வைப்பு வைக்கப்படும்: ஏர்டெல் அறிவிப்பு

இணைய தள சேவைக்கான Data பயன்பாட்டில் இரண்டு முக்கிய சலுகைகளை பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு

'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive