Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவு ஏன்: அமைச்சரிடம் நாளை ஆசிரியர்கள் விளக்கம்

          மதுரை உட்பட 5 மாவட்டங்களில், அரசு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள், கல்வி அமைச்சர் வீரமணி முன்னிலையில், மதுரையில் நாளை (ஜன.,7)விளக்கம் அளிக்கின்றனர்.
 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக செய்தி மடல்

       மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி மாணவர்களின் சாதனைகள் குறித்த செய்தி மடலை மாதம் இரு முறை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இனியும் கணிப்பொறி அறிவியலில் B.Ed., தேவையா? - வாசகரின் ஆதங்கம்


              கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் 15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காககாத்திருக்கிறோம்.இது வரை ஏறத்தாழ 190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர்.

இந்தியாவின் நேரம் மாறுகிறது...


           பெரிய நாடுகளில் இருப்பது போல நம்நாட்டுக்கும் இரண்டு விதமான நேரங்கள் பின்பற்றபட உள்ளன. 
 

TET-2014 Coaching Via Model Tests Classes - Admission Starts Now.

TET Paper 1 & Paper 2 - Coaching Via Model Test Classes Admission Starts Now.

Course Detail

ராணி டெட் பார்க் பயிற்சி மையம், தமது தேர்வர்களுக்கு கீழ்கண்டவாறு தேர்வுகள் நடத்த உள்ளது.

                தேர்வர்கள் படிக்க வேண்டிய மொத்த பாடத்தையும் வகுப்பு வாரியாகவும், அலகு வாரியாகவும் பிரித்து 10 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு மொத்த பாடத்திற்கும் சேர்த்து 6 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு மொத்தம் 16 மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

Unit wise Test       - 10

Full Syllabus Test  - 6

Total Tests           = 16

             இம்மாதிரித் தேர்வுகள் வாரம் ஒரு முறை வீதம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நடத்தப்படும். 


மாணவர்களுக்கு அரசு வழங்கும் பொருட்களை வாங்க அலையும் ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகும் கல்விப் பணி

 
         மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பொருட்களை வாங்க ஆசிரியர்கள் அடிக்கடி அலைந்து வருவதால் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை கல்வி கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், நாளை அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

           மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு எண்.33399/2013 நாளை (6.1.2014) விசாரனைக்கு வருகிறது. நீதிமன்ற வரிசை எண்.11ல் வழக்கு வரிசை எண்.17ல் நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
 

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால்,பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி

 
         மேல்நிலைப் பள்ளி களில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், ஓர்ஆசிரியர், இரண்டு பள்ளிகளில் பாடம் நடத்த, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் கேள்விக்குறியாகி உள்ளது.
 

தமிழ் - எண் குறிகள்

எண் குறிகள்

          தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
 
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
௦ ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
எண் ஒலிப்பு

இலங்கை அரசுக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம்


          தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட்

      ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 

15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசு சுறுசுறுப்பு

 
          லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.


விடைத்தாள்கள் திருத்த வசதியான மையங்கள் அவசியம்: தேர்வுத்துறை இயக்குனர்


          "குறைந்தபட்சம் 800 ஆசிரியர்கள் அமர்ந்து திருத்துவதற்கு ஏற்ப, விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்வு செய்ய வேண்டும்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

           அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ் அறிவிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மண்டல ஆய்வுக்கூட்டம்

           10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மதுரையில் ஜன.,7 ல் நடக்கிறது.

அதிக விடைத்தாள் மதிப்பீடு நிர்பந்தம் கூடாது: ஆசிரியர்கள் வலியுறுத்தல்

       "நிர்ணயித்த எண்ணிக்கையை விட, அதிக விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய, நெருக்கடி தரக்கூடாது. இது போன்ற பிரச்னையால் தான், விடைத்தாளை மதிப்பீடு செய்யும் போது, தவறு ஏற்படுகிறது" என தேர்வுத் துறை இயக்குனரிடம், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வு பட்டியல் 2 வாரத்தில் வெளியீடு.


            இந்த ஆண்டு எத்தனை அரசு காலிப்பணியிடங்களுக்கு எப்போது தேர்வுகள் நடத்தப்படும் என்ற வருடாந்திர தேர்வு பட்டியலை 2 வாரத்தில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. ஏற்பாடு செய்துள்ளது.

17-ல் கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை


           வடலூரில் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வருகிற 17ஆம் தேதி நடைபெறவுள்ளதால், கடலூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.

          மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது. ஆனால் மகப்பேறு விடுப்பின் பொழுது தேர்வு எழுதலாம்.

நேர்மையை விதையுங்கள்


          ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.

ஓட்டு போட பணம் வாங்குவது தவறு : மாணவர்கள் சொல்வதை கேளுங்க!

          தேர்தலில் ஓட்டு போட, பணம் வாங்கக் கூடாது' என, மாணவர்கள் உதவியுடன், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிப்பு - மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரி தகவல்.


           ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரி கூறினார். 
 

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்.

           மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணான 108 மூலம் பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
 

கீ ஆன்சரில் குளறுபடி : டி.ஆர்.பி. மீதான வழக்குகள் 6ம் தேதி மீண்டும் விசாரணை

            கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்(டிஆர்பி) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டது. கடந்த நவ.5ல் தேர்வு முடிவு மற்றும் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. 

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு வருடாந்திர கடிதத்தில் அறிவுரை

 
             நாட்டிலுள்ள அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், உள்கட்டமைப்பு மற்றும் வியூக செயல்பாடு ரீதியாக தன்னிறைவு பெற்று விளங்க வேண்டுமென, அந்த வாரியத்தின் தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
 

ராணுவப் பணியில் சேர்வது எப்படி?

 
             இந்தியத் துணைக் கண்டத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் முதலிடம் வகிக்கிறது நமது ராணுவத் துறை. இதில் சேர்ந்து பணியாற்றுவது அநேக இளைஞர்களின் கனவு. 
 

மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு

0 - 2 வருடம் = இல்லை 
2 - 5 வருடம் = 90 நாட்கள் 
5 - 10 வருடம் =180 நாட்கள் 
10 - 15 வருடம் =270 நாட்கள் 

ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு

 
           இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக யார் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் திமுக வேடிக்கை பார்க்காது. களம் அமைத்து போராட்டம் நடத்த தயங்காது என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு

 
           மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
 

அடிப்படைக் கல்வியின் தரம் அறிய தேர்வு: எஸ்.எஸ்.ஏ., ஏற்பாடு

 
              அரசு பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களின் வாசிப்புத் திறன், அடிப்படை கணித அறிவு தரமறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், அடைவு ஆய்வு எனும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி அமலாகுமா?

 
              எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு சார்பான வழக்கு ஜனவரி 2ஒஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

              முதுகலை பட்டதாரி / ஆசிரியர் தகுதித்தேர்வு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் (WRIT PETITIONS RELATING TO AWARD THE MARK AND PERMIT THE PETITIONER'S PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION FOR THE POST OF P.G.ASSISTANT / B.T.ASSISTANT /GRADUATE ASSISTANT / SECONDARY GRADE TEACHER -  YEAR 2013 ) அனைத்தும் 03.01 2013 அன்று விசாரணைக்கு வந்தன. 
 

கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையே இதன் முழு பொறுப்பும் சேரும். வரும் கல்வியாண்டில், கரூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் 70 நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்க, முன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நடக்கவுள்ள பொதுத் தேர்வுகளில் 95 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, சபிதா பேசினார். இக்கூட்டத்தில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.


             கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. 
 

நெஞ்சு எரிச்சல் ஏன்? ( தடுக்க சில வழிகள் ):-


              வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive