Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நீடிக்கும் குழப்பம்


       அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்ட நிலையில், எந்த முறையில் தேர்வு நடத்துவது என்பதில், தற்போது குழப்பம் நிலவுகிறது.அரசு கல்லூரிகளில், 1,093 பணியிடங்களும், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில், 3,120 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது.

திறந்தவெளி பல்கலையில் 8 புதிய படிப்புகள்


            தொழில் கல்வி அளிக்கும் வகையில், எட்டு புதிய பட்டய படிப்புகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலையில் துவங்கப்படுகின்றன.தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், சமுதாய கல்லூரிகள் மூலம், இளைஞர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கப்படுகிறது. சுகாதார உதவியாளர், ஆடை வடிவமைப்பு, கணினி வன்பொருள் பழுது பார்ப்பு, அலைபேசி பழுது பார்ப்பு, அழகு கலை நிபுணர் பயிற்சி, நான்கு சக்கர பழுது பார்த்தல் பயிற்சி என, 21 வகையான பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

Latest 10th Study Materials



Latest 10th Study Materials - 2013
  1. Tamil Paper 1 Minimum Material 
  2. Tamil Paper 2 Minimum Material 
  3. Social Science - Minimum Material
Published By, 
CEO,SSA CEO, RMSA - Krishnagiri District.


எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி. தொழிலக வேதியியல்: அரசாணை வெளியீடு


       பாரதிதாசன், அழகப்பா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எம்.எஸ்சி. தொழிலக வேதியியல் (இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) படிப்பு, எம்.எஸ்சி. வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, தமிழக அரசுப் பணிகளில் இந்த கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு இணையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணையான படிப்புகளுக்கு சான்றளிக்கும் குழுவின் கூட்டத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் தொழிலக வேதியியல் படிப்பை, வேதியியல் படிப்புக்கு இணையானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

வங்கி கணக்கு துவக்குவதில் சிக்கல்: ஆதிதிராவிட மாணவர்கள் அவதி


      கட்டணமில்லா வங்கிக் கணக்கு துவக்க, பெரும்பாலான வங்கிகள் மறுத்து வருவதால், ஆதிதிராவிட மாணவர்கள் உதவித்தொகை பெறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.


"இங்கிலாந்து வரும் இந்திய மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்"


           "இந்தியா-பிரிட்டன் நாடுகளுக்கு இடையே, சிறப்பான ஒரு உறவை ஏற்படுத்த வேண்டும் என, விரும்புகிறேன். இந்த உறவு, கடந்த காலத்தை பற்றியதாக அல்லாமல், எதிர்காலத்தை பற்றியதாக இருக்கும்" என, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


எது உலகத்தரம் வாய்ந்த பல்கலை?


         சாஸ்த்ரா பல்கலைக்கழக திட்டம் மற்றும் மேம்பாட்டிற்கான டீன் வைத்தியசுப்ரமணியம், சமீபத்தில் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய கருத்தரங்கில் வழங்கிய கருத்துரை:

      பிலிப் அல்பாக் என்ற பிரபல கல்வியாளர் சொல்கிறார், “ஒவ்வொரு நாடுமே, தங்களிடம் ஒரு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழம் இருக்க வேண்டுமென விரும்புகிறது. அது என்ன? மற்றும் அதை எப்படி பெறுவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை”.


முதுகலை தாவரவியல் ஆசிரியர் மற்றும் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு முடிவுகளை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 
         தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. போட்டித் தேர்வு அடிப்படையில் தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில் பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு மாதம் சம்பளமும் பெற்றுவிட்டனர். ஆனால் இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை. 
 

கல்வி கற்பிக்கும் முறை

 

        பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சுமார் 19 ஆண்டுகள் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இக்கல்வியானது மாணவர்களின் வருங்கால வாழ்க்கைக்கோ, வேலையில் சேருவதற்கோ உதவுவதில்லை. கல்வி வேறு வாழ்க்கை வேறாக இருக்கிறது. இதனால் அனேகர் வாழ்க்கையில் சரியான முன்னேற்றத்தை காண முடிவதில்லை.
 
 

மூவர் குழு அறிக்கையை அரசு வெளியிட வலியுறுத்தல் அரசு ஊழியர்களுக்கான மூவர் குழு அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்று ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


                அரசு ஊழியர்களுக்கு ஊதிய மாற்றங்களை நிர்ணயம் செய்ய மாநில அரசு மூலம் 6 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு சமச்சீர் ஊதிய உயர்வு அளிக்கப்படாமல் பல்வேறு துறைசார்ந்த அரசு ஊழியர்களுக்கு 6 வது ஊதியக்குழுவால் ஊதியம் பரிந்துரைசெய்யப்பட்டது.
 
 

தேசிய அளவிலான யோகா போட்டி:அரசு பள்ளி மாணவன் முதலிடம்


         அந்தமானில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில், அரசு பள்ளி மாணவன் முதலிடம் பெற்றார். இந்திய யூத் யோகா பெடரேஷன் மற்றும் ஆசிய ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் ஆகியன இணைந்து இம்மாதம் 2ம்
         
        தேதி அந்தமானில் தேசிய அளவிலான யோகா போட்டிகளை நடத்தியது. இதில், துடியலூர் அருகே தொப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் பிரதீப், 13; கலந்து கொண்டார். இவர், 14 வயதுக்குட்பட்ட பொது பிரிவில், முதலிடம் பிடித்து சான்றிதழ் மற்றும் கேடயம் வென்றார்.


தேர்வு நேரத்தில் விளையாட்டு போட்டி: மாணவர்களுக்கு சிக்கல் - Dinamalar


          தேர்வு நெருங்கும் நேரத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாணவர்களுக்கு உலக திறானாய்வு போட்டிகள், நடத்தவுள்ளதால் மாணவர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் வேலைக்கு தேர்வானவர்களுக்கு 37 மையங்களில் பயிற்சி


         தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த, போலீஸ் தேர்வில், 12,208 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பயிற்சி, 37 போலீஸ் பயிற்சி மையங்களில் இன்று துவங்குகிறது.


குரூப்-2 தேர்வு: மனிதநேய மையத்தில் படித்த 517 பேர் வெற்றி


              சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்த, 517 பேர், குரூப்-2 எழுத்து தேர்வில், தேர்வு பெற்றுள்ளனர்.


உண்டு உறைவிட பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி


        அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும், உண்டு உறைவிடப் பள்ளியில், இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் அடுத்து உள்ளது தாமனேரி. இங்கு, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சார்பில், உண்டு உறைவிடப் பள்ளி செயல்படுகிறது. படிப்பை இடையில் கைவிட்ட மாணவர்களை கண்டுபிடித்து, அந்த மாணவர்களை இப்பள்ளியில் சேர்த்து கல்வி கற்பிக்கப்படுகிறது.


அரசு ஊழியர்களுக்கான புதிய தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட வட்டி விகிதம் அதிகரிப்பு


         தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் வட்டி, எட்டு சதவீதத்தில் இருந்து, 8.6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்த ஊழியர்களில் இருந்து மாற்றம் கண்டது. 
 

குரூப்-1 தேர்வு: கஷ்டமா? எளிதா? தேர்வர்கள் மாறுபட்ட கருத்து


           தமிழகம் முழுவதும், 352 மையங்களில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வு எளிதாக இருந்ததாக, பெண் தேர்வர்களும், ரொம்ப கஷ்டம் என, ஆண் தேர்வர்களும், கருத்து தெரிவித்தனர்.


பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19 முதல் ஹால் டிக்கெட்


          "பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு, 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை, ஹால் டிக்கெட் வழங்கப்படும்,' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா அறிவித்துள்ளார்.

‌இந்திய - ஜப்பானின் சூப்பர்-30 பள்ளி திட்டம்


         ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் (சிஜிசி) இந்தியாவில் சூப்பர்-30 பள்ளி திட்டத்தை இந்தியாவில ‌துவங்குகிறது.

        இதற்கான ஒப்பந்தம் நேற்று ஜப்பான் நிறுவனத்திடம் பீகாரை சேர்ந்த கணிதவியல் நிபுணர் ஆனந்த் குமார் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பள்ளிகள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைப்பு


          பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள் மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட துறைகளுக்கு, பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.


சிறுபான்மை மொழிப் பாடம்: தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு


          சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

          ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:பட்டதாரி, சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், தேர்வு பெற்ற, 36 பேரின் பெயர் பட்டியல், டி.ஆர்.பி., அலுவலக, அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.


குரூப்-2 தேர்வு: 22ம் தேதி முதல் நேர்காணல்


              "குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.


அங்கீகாரமற்ற பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம்


        மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


சான்றிதழ் படிப்புகள் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.


      தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்த, குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை, பி.எஸ்.என்.எல்., துவங்க உள்ளது.


அரசு பள்ளி வசதிகளை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு


      தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.


தனியார் பள்ளிகளில், அட்மிஷன் கிடைப்பது கேள்விக்குறி - Dinamalar


     கட்டாயக் கல்வி சட்டம் காரணமாக பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சீட் வழங்குவதற்கு, தனியார் பள்ளி நிர்வாகங்கள், ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க திட்டமிட்டுள்ளன. இதனால், அட்மிஷன் எளிதில் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் அமலாவதற்கு முன்வரை, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. வசதியான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்றில்லாமல், அனைத்து தரப்பு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், நுழைவுத் தேர்வில் பங்கேற்றன.

முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடரும் இழுபறி


          தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில், தொடர்ந்து, இழுபறி ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில், தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள், பணியில் சேர்ந்து, இரண்டு மாதம், சம்பளமும் பெற்றுவிட்டனர். ஆனால், இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை, இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை.

பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம்: மீண்டும் கருத்துக் கேட்க முடிவு


          தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இதுதொடர்பாக பெற்றோர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, அறிக்கை சமர்பிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள் வளர்ச்சியில் பின்தங்கும்


          "மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள், வளர்ச்சியில் பின்தங்க நேரிடும்" என, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மேரி லேன் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறை சார்பில், "பொருளிலிருந்து உயிர், அதற்கு காரணம் வேதியியலா" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive