Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மே 15ம் தேதி முதல் மருத்துவ விண்ணப்பங்கள்

      இந்தக் கல்வியாண்டில்(2012), மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. இத்தகவலை, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

மே 11ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

IGNOU


Tentative Date sheets for June 2012 Term-End Examination 
click here and download 

TET - Child Education Questions (2 in 1)



Thanks to Kalvisolai

மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் மாதிரி கருத்துரு


    அரசு ஊழியர்களாக பணியாற்றும் மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் முழு மாதிரி கருத்துரு இங்கு தரப்பட்டுள்ளது. 



Click Here & Download Proposal & HM's Proceeding


Click Here & Download Director's Proceeding



        கருத்துருக்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெறப்பட்ட விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. 


Click Here & Download Letter

தமிழ் விடைத்தாள் திருத்துவது தாமதம் - தேர்வுமுடிவு தள்ளிப்போகுமா?


          சிவகங்கை: தமிழ் விடைத்தாள் திருத்தும் பணி தேக்கத்தால், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு அறிவிப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ரத்து செய்தது ஐகோர்ட்


           தனியார் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகள் 318 க்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்தப் பள்ளிகளுக்கு வரும் டிசம்பருக்குள் புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அரசு கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்கள் பெற்ற கடனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு.


வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 8323 / அ2 / 2012, நாள். 02.05.2012.

1முதல் 8ம் வகுப்பு வரையான முப்பருவ பாடத்திட்டம்.


          தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் இருந்து முப்பருவ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ் ஒரு பருவத் தேர்வுக்கு அதாவது காலாண்டு வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு புத்தகத்திலேயே 5 பாடங்கள் அமைந்திருக்கும். அரையாண்டுத் தேர்வுக்கு இரண்டாவது பருவப் புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அது முடிந்ததும் 3வது பருவப் பாடப்புத்தகத்தை எடுத்துச் சென்று படிக்க வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கில் தனியார் பள்ளிகளின் மனுக்களை ஏற்று இந்த கல்வியாண்டு மட்டும் 15 சதவிகிதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.



கட்டண நிர்ணயம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி ரவி ராஜ பாண்டியன் குழு, கடந்த ஆண்டு மே மாதம் புதிய கட்டணத்தை அறிவித்தது. இந்த கட்டணத்தை எதிர்த்து 400க்கும் அதிகமான தனியார் பள்ளிகள், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.

திறந்தநிலைப் பல்கலை. பி.எட். படிப்பு: நாளைமுதல் விண்ணப்பம் விநியோகம்


 திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பிற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (மே 4) முதல் வழங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ். சண்முகையா அறிவித்துள்ளார்.
வரும் ஜூலை 27-ம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.

Annual Fees Rises - 15% this year for Metric Schools - By Court.


தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


விதி எண் 110 கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி.  ஜெ .  ஜெயலலிதா, தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார். மேலும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும் என்று கூறினார். இதுவரை இல்லாத அளவு உயர் ஒதுக்கீடாக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, இதன் மூலம் அரசு கல்லூரிகள் மேம்பாடு அடையும் என்று குறிப்பிட்டார். கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் நல்ல சூழ்நிலையில் உற்சாகத்துடன் கல்வி பயில்வதை உறுதி செய்வதில் தமது அரசு முனைப்பாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கூடுதல் விடைத்தாள்களால் ஆசிரியர்கள் திணறல்.



பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முகாம்களில், அதிக விடைத்தாள்களை திணிப்பதால், திருத்தம் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். இதனால், பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் 66 முகாம்களில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு காலை 15 , மாலை 15 என, 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும்.
இதன் பணிகளை விரைந்து முடிக்க, காலை 20 , மாலை 20 என ,40 விடைத்தாள்களை முகாம் அலுவலர்கள் வழங்குகின்றனர்.
இதனால் அவசரமாக திருத்தம் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சமச்சீர் பாடத்திட்டத்தில் போதிய அனுபவம் இல்லாத நிலையில் தாமதமும் ஏற்படுகிறது.
அவசரம் காரணமாக தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளதால், மாணவர்களும் பாதிக்கும் நிலை உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழாசிரியர்கள் கழகத்தினர் கூறுகையில், "ஆசிரியர்களிடத்தில் விடைத்தாள்களை திணிக்க கூடாது. அதிக ஆசிரியர்கள் தேவை என்றால், கூடுதல் ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும். குறைந்த விடைத்தாள் மையங்களுக்கு அதிக விடைத்தாள்கள் அனுப்ப தேர்வுத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்," என்றனர்.

+2 Result will be publish in 22.05.2012


+2 தேர்வு முடிவுகள் மே மாதம் 22ந் தேதி வெளியாகிறது

பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2012 முதற்கொண்டு அகவிலைப்படி 139% உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.


தமிழக அரசாணை எண். 145 நிதி(படிகள்)த் துறை நாள். 30.04.2012
அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலை ஊதியத்தில் 139 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பாட ஆசிரியர் மாறுதலுக்கு பின்னரே, பொது மாறுதல்


அரசு பள்ளிகளில், குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை மாறுதல் செய்த பிறகே, ஆசிரியர் பொது மாறுதல், கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவேதான், விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: விரைவில் தேர்வு முடிவுகள்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு, ஏப்., 8ம் தேதி துவங்கி, 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

Promotion Of Culture Of Heritage Edn - Introduction of Museum Visit by Students Once in a Year as Part of Edn & Curriculam.


Proceedings of the Director of Elementary Education RC.No. 7684 / J3 / 2012, Dated. 04.04.2012
A Museum is an Institution that cares for collection of artifacts and other objects of Scientific, artistic, cultural, that is as static in a word " Collection of Collections ". Museum favoured Education over preservation of their objects. 
To Create awareness of our culture and heritage Education are essential for the present day children, once they make a visit to the museum. In CCE the visit to the museum, Include as on activity of Government process.  

மாணவர் நலத் திட்டங்களைச் செயல்படுத்த இணை இயக்குநர்கள் நியமனம்: பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி


மாணவர் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர். சிவபதி கூறினார்.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

டி.என்.பி.எஸ்.சி. விண்ணப்பதாரர்களுக்கு உதவ 500 கணினி மையங்கள்: ஆர்.நடராஜ்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 500 கணினி உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தேர்வாணையத் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார்.

RULES – Tamil Nadu School Educational Subordinate Service - Art Masters – Amendment to Special Rules – Orders – issued.


G.O.Ms.No.81 School Education (M1) Department Dated:26.03.2012.
“(iv) A Diploma in Fine Arts awarded by the Director of Technical Education or a
Degree in Fine Arts awarded by the Madras University or the Bharathidasan University.”

ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக அரசின் தெளிவுரை கடித எண். 15082 / ஓய்வூதியம் / 2012, நாள். 24.4.2012. 
பணியிலிருந்து ஓய்வு பெற்று அதற்குரிய ஓய்வூதியம் மற்றும் வாழ்க்கை துணை (SPOUSE) இறப்பிற்கு பிறகு பெரும் ஓய்வூதியம் ஆகிய இரண்டு ஒய்வூதியன்களைப் பெறும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ப கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு ஒய்வூதியங்களிலும் உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இரண்டு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

School Education – Registration in employment Exchange for the candidates appearing for April 2012 SSLC Examinations – Instruction issued – Regarding.


Proceedings of the  Director of School Education, Chennai-6 R.C.No. 25759  /K/E1 /2012 dt.   .04.2012
In the reference 2nd cited Commissioner of Government Data Centre, Guindy requested to enter the following Data in the web site address www.peps.tn.nic.in for Online registration in Employment Exchange  for all the students who have appeared for SSLC Public Examination held in April 2012. 

அரசு கல்வித் தொலைகாட்சி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை



           மாநில கல்வியியல் நிறுவன பயிற்சி நிறுவன இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண். 8584/D1/2012,Date:24.04.2012.
  
           அரசு கல்வித் தொலைகாட்சியில் நிகழ்சிகளை  நடத்த ஆர்வமும் திறமையும் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை ஒரு நாள் பயிற்சி வாயிலாக சேகரிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் ஆணை வெளியிட்டுள்ளார். ஆசிரியர் விவரங்களை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள Editable EXCEL படிவத்தில் நிரப்பி  தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்கவேண்டும். 

ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


ஜூன் மாதம் நடக்கும் ஆசிரியர்க்கல்வி பட்டய தனித்தேர்வுக்கு, 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் பொது மாறுதல் (2012-2013)



  1. பள்ளி க்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் தலைமையாசிரியர் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  2. தொடக்கக்கல்வி துறை | ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை 30.04.2012 க்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அதற்கான இயக்குநரின் செயல்முறை.
  3. பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
  4. தொடக்கக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம் (PDF FORMAT)
  5. பள்ளிக்கல்வி துறை|மாறுதல் கோரும் விண்ணப்பம் (Word)
  6. பள்ளிக்கல்வி துறை|மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Word).
  7. TAMIL FONTS DOWNLOAD
             BAMINI FONT

            VANAVIL AVVAIYAR FONT

            SUN TOMMY TAMIL FONT

            Another Tamil Fonts

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive