Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு

        அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறை ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா? என்பதை கண்காணிக் குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


புதிதாக 6 ஐ.ஐ.எம்.க்கள் : அமைச்சரவை ஒப்புதல்

          மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் புதிதாக 6 ஐ.ஐ.எம்.கள் துவக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் சம்பல்பூர் (ஒடிசா), அமிர்தசரஸ் (பஞ்சாப்), விசாகபட்டினம் (ஆந்திரா), நாக்பூர்
(மகாராஷ்டிரா), புத்கயா (பீகார்), ஷிமார் (இமாச்சல் பிரதேசம்) ஆகிய இடங்களில் இந்த ஐ.ஐ.எம்.க்கள் அமைக்கப்பட உள்ளது.

6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

      அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு

இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது. 

சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

பள்ளியில் பயிலும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

BEd Teaching Practice Regarding

        தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி

     'அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3 மாவட்டங்களில் அமல்

          பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன் - லைன் மூலமான பாட புத்தக விற்பனை திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், பாடப்புத்தகங்கள்

இரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே

         பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்., படிக்க வேண்டும். யு.ஜி.சி., ம ற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
 

அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    முதியோர் ஓய்வூதியம் உள்பட தமிழக அரசின் எட்டு வகையான ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்திருப்போர் பட்டியலில் 313 மாணவர்கள்

      சென்னையில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர கடந்த 5 நாள்களில் மொத்தம் 1,672 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இணையதள வழியில் ஐ.டி.ஐ. தேர்வுகள்: மத்திய அரசு திட்டம்

  தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) ஆண்டுத் தேர்வுகளை இணையதள வழியில் நடத்த மத்திய அரசின் தொழில் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு

  கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்க 19 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதிவரை கால அவகாசம்

       வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக, 14 பக்க படிவம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதில், வரி செலுத்துவோர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம், செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகள் போன்ற கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டிருந்தது.  

அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு

   தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர் பணியிடங்களில் நிமயனத்துக்கான தகுதித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.முதல் முறையாக தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களும் தகுதித் தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அரசு பள்ளிகளிலும் யோகா கற்று கொடுக்கப்படும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேச்சு

         விரைவில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கும், ஈஷா மையம் சார்பில், யோகா கற்றுத் தரப்படும், என, ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னையில், நேற்று, 25 ஆயிரம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்து பேசியதாவது:

அரசு பள்ளி ஆங்கில வகுப்பு மாணவர் சேர்க்கை சரிவு

        உடுமலையில், ஆங்கில வழி கல்வி துவங்கும் அரசு பள்ளி களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. உடுமலை ஒன்றியத்தில் உள்ள, 120 துவக்கமற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, 2013ல், ஒன்றியத்தில் உள்ள, 11 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவக்கப்பட்டன. ஆங்கில வழி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டியதால், கடந்தாண்டு கூடுதலாக ஏழு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டன.

பதற்றச் சூழலிலும் சிதறாத கவனம்: எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் காஷ்மீர் மாணவர் தேர்ச்சி

     காஷ்மீர் மாணவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ஏஐஐஎம்எஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
 

சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்

சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்
      பூமிக்கு ஒரு சந்திரன் இருப்பது போன்று சனி கிரகத்துக்கு பல சந்திரன்கள் உள்ளன. அவற்றின் மிகப் பெரிய சந்திரனாக டைட்டான் திகழ்கிறது. பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா? அங்கு உயிரினங்கள் வாழ தகுதியான சூழ்நிலை இருக்கிறதா? என பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டுள்ளன.
அந்த வகையில் சனி கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கேசினி’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது சனிகிரகத்தை சுற்றி வந்து தகவல்களை அனுப்பி வருகிறது.
 

பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? : சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு

      பதவி உயர்வு குளறுபடியை நீக்க அரசு அமைத்த குழு, நான்கு ஆண்டுகளாகியும் செயல்படாமல் முடங்கி உள்ளதால், சத்துணவு அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்: கூடுதல் பாடச் சுமையாக இருக்காது என உறுதி

        மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ''யோகா பாடம், மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்காது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானி உறுதி அளித்துள்ளார்.

அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

       'அலுவலகத்துக்கு தொடர்ந்து தாமதமாக வந்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க வேண்டிஇருக்கும்' என, ஊழியர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் சார்பில், அனைத்து அமைச்சக அலுவலகங்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டு உள்ளன. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது

 
              காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

       'இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங்கில் இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; முந்தைய ஆண்டுகளில் முடித்தவர்களை அனுமதிக்கக் கூடாது' எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?

       'இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஜூலை 1 முதல், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவின் எதிரொலியே இந்த அறிவிப்பு.இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. 

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: பதிவு செய்ய ஜூலை 3 கடைசி நாள்

      முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய ஜூலை 3 கடைசித் தேதியாகும். நிறைவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க ஜூலை 4 கடைசித் தேதியாகும்.

தவறான மதிப்பெண் பட்டியல் வழங்கல்:விளக்கம் கேட்டு ஹெச்.எம்.,க்கு கடிதம்

     தவறான மதிப்பெண் பட்டியல் கொடுத்த, தலைமை ஆசிரியைக்கு, உதவி தொடக்க கல்வித்துறை அலுவலர் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

TNTET Exam soon?

News by Dinama

ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு
பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 650-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 60-க்கும் மேற்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடங்களும் இப்போது காலியாக உள்ளன. 

தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை.

தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் 

இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு இப்போது பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது. 

தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு.

பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள்
பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம், கலந்தாய்வு மூலம் ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுவர்; இந்த ஆண்டு, கலந்தாய்வு தாமதமாகிறது. எனினும், நீண்டகாலமாக காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில், மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு ஈடாக பணியாற்றுபவர்களின் பட்டியலை, மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பணி நியமனம் செய்ய, 1,080 உதவிப்பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், பணி நியமன உத்தரவு வழங்காததால், அவர்கள் தவித்து வருகின்றனர். காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆறு மாதங்களுக்கு முன் தேர்வுப் பணி நடந்தது. 5,400 பேரில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 1,080 பேர், உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இப்பணி முடிந்து, ஆறு மாதங்களாகியும், பணி நியமனத்திற்கான உத்தரவுகள் வழங்காததால், தேர்வு பெற்றவர்கள் தவித்து வருகின்றனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive